14) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்கள்: நபித்தோழரை அறிந்து கொள்வோம்

1. இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஏழு நாள்வரை வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. (புகாரி: 3727)

2. அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகல் நானே முதலாமவன் ஆவேன் என்று கூறியவர். (புகாரி: 3728)

3. இவர் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஒருவர். (அஹ்மத்: 1585)

4. நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அவர்களை இரவில் காவல் காத்தவர். (புகாரி: 2885)

5. நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து இவருக்கு அர்ப்பணிப்ப தாக சொன்னார்கள். (புகாரி: 3725)

6. உஹுதுப் போரில் முஸ்லிம்கள் சிதறி ஓடியபோது நபி களாருக்கு பக்க பலமாக இருந்த இருவரில் ஒருவர். (புகாரி: 3723)

7. இவரை குணப்படுத்து, இவரின் ஹிஜ்ரத்தை முழுமைப் படுத்து என்று நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். (புகாரி: 5659)

8. தம் சொத்தில் பாதியை தர்மம் செய்ய முன்வந்தவர். (புகாரி: 5659)

9. இவரின் தொழுகை விஷயமாக மக்கள் உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டு இருக்கிறார்கள். (முஸ்லிம்: 775)

10. இவருக்கு ஸஅது பின் மாலிக் என்று மற்றொரு பெயரும் உண்டு. (புகாரி: 4059)

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)