14) முஹம்மத் (ஸல்)

நூல்கள்: மறைவான ஞானம் இறைவனுக்கே !

இதுவரை பார்த்த நபிமார்கள் விசயத்தில் மறைவான விசயங்கள் தெரியாது என்பதில் கருத்துவேறுபாடு அதிகமில்லை. ஆனால் நமது நபியான, உயிரிலும் மேலாக மதிக் கப்படும்; மதிக்கவேண்டிய முஹம்மத் (ஸல்) அவர்கள் விசயத்தில்தான் மறைவான விசயம் தெரியும் என்று பிடி – வாதமாக இருக்கிறார்கள். ஏனெனில் இந்த சக்தியை அவர்களுக்கு கொடுப்பதன்மூலம் அவர்களை தாங்கள் கண்ணியப்படுத்தி விட்டதாகவும் மதிப்பளித்துவிட்டதாகவும் எண்ணுகிறார்கள்.
இச்சக்தி அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களை இழிவுபடுத்துவதாகவும், மதிப்பை குறைப்பதாகவும் ஆகிவிடும் என கருதுகிறார்கள். இது தவறான எண்ணமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களே தனக்கு இல்லாததைச் சொல்லி புகழ்வதை விரும்பவில்லை. மாறாக கண்டிக்கவே செய்கிறார்கள்.

கிருத்தவர்கள் மரியமின் மகன் ஈஸாவை (அளவு கடந்து) புகழ்ந்ததைப் போல் என்னையும் (வரம்புமீறி) புகழாதீர்நிச்சயமாகநான் அல்லாஹ்வின் அடியானாகவே இருக்கிறேன். (எனவே) அல்லாஹ்வின் அடியானும் அவனின் தூதருமாகும் என்று கூறுங்கள் என நபி(ஸல்) கூறியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

இல்லாததைக் கூறித்தான் கிருத்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி இன்று அவர்களை கடவுளாக போற்றி வணங்கி வருகிறார்கள். இந்த நிலை தனக்கு வரக்கூடாது என்று எண்ணித்தான் தனது சமுதாயத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்,

எனவே இல்லாத பொய் புகழை நபி (ஸல்) அவர்கள் மீதுகூறாமல் இருக்கின்றஆயிரக்கணக்கான நற்குணங்கள், நேர்மை, ஒழுக்கம் போன்றவைகளை கூறவேண்டும்.
இப்போது பிரச்சனைக்குறிய மறைவான விசயங்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்களா என்பதைப் பார்ப்போம்.

(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும். நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம் நீரோ அல்லது உம்முடையகூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை. நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான் (கிட்டும்)” (அல்குர்ஆன்: 11:49)

நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச் சியை குறிப்பிட்ட அல்லாஹ், இவ்விசயத்தை மறைவான விசயம் என்றும், இதை நபி (ஸல்) அவர்களும், அவர்களின் சமூகத்தாரும் தெரிந்திருக்கவில்லை என்கிறான். இந்த வாசகம் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பதை அறிவிக்கிறது.

(நபியே!) இவை மறைவான விசயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீமூலம் அறிவிக்கின்றோம். மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப்பற்றி (குறி பார்த்தரிய) தங்கள் எழுதுகோல்களை அவர்கள், எறிந்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. இதைப் வற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை (அல்குர்ஆன்: 3:14)
நபி(ஸல்) அவர்கள் மறைவான விசயங்கள் அனைத்தை யும் அறிந்தவர்களாக இருந்திருந்தால். மர்யம் (அலை)அவர் களை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற விசயத்தில் அவர்கள் போட்டி போட்டுக் கொண்ட செய்தி தெரியாது. என்று அல்லாஹ் கூறியிருக்கமாட்டான். இதைத்தான்தான். வஹீமூலம் தெரியப்படுத்துவதாக அறிவிக்கிறான். இதுவும் நபி (ஸல்) அவர்கள் மறைவான விசயங்களை அறிந்தவர் களில்லை என்பதை விளங்கலாம்.

(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்தி யாகும். இதனை நாம் உமக்கு வ ஹீமூலம் அறிவிக்கின்*றாம். அவர்கள் (கூடி)சதி செய்து தம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல்குர்ஆன் 12 102)

நபியூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள், யூசுப் (அலை) அவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நபி (ஸல்) அவர்களுக்கு தெரியாது என்றும் இதை நாமே தெரிவிக்கிறோம் என அல்லாஹ் கூறுவது நபி (ஸல்) ம?ை வான் விசயங்கள் தெரிந்திருக்கவில்லை என்பதை புலப்ை படுத்துகிறது.
எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம் உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான். ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா? (என்று) நீர் கேட்பீராக! அவர் கள் புறக்கணித்து விடுவார்களாயின் நான் உங்கள் எல்லோருக்கும் சமமாக அறிவித்துவிட்டேன்.

இன்னும்உங்களுக்குவாக்களிக்கப்பட்ட(வேதனையான) துசமீபத்திலிருக்கிறதா? அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்(என்று சொல்லும்)வெளிப் படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்,(மனதில்) மறைத்துவைப்பதையும் அவன் அறி. கிறான். இந்த தாமதம்உங்களுக்கு சோதனையாகவும் குறிப் பிட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதாகவும் இருக்குமா என்பதை நான் அறிய மாட்டேன் (என்றும் நபியே! நீர் கூறும்.) (அல்குர்ஆன்: 21:108-11)
இறை நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் கொடுப்பதாகச் சொன்னி வேதனைகள் எந்நேரத்தில் வரும். இப். போதா? அல்லது வெகுநாட்களுக்குப் பிறகா என்பதை நபி (ஸல்) அவர்களால் தெரிய முடியாது என்பதையே இவ் வசனம் நமக்கு தெரிவிக்கிறது. மறைவான விசயத்தை நபி (ஸல்) அவர்கள் அறிந்தவர்களாக இருந்திருந்தால்? தனக்குத் தெரியாது என்று அல்லாஹ் சொல்லச் சொல்லியிருக்க மாட்டான்.

(நியாயத்தீர்ப்புக்குரிய) அவ்வேளைப் பற்றி மக்கள் உம்மை கேட்கின்றனர். அதைப்பற்றி ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடலாம். (அல்குர்ஆன்:)

நிராகரிப்பவர்கள் (நியாயத்தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! மறை வான விசயத்தை அறியக்கூடிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக (அவ்வேளை) உங்களிடம் வந்தே ரும், வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனைவிட்டு மறையாது. இன்னும் அதைவிடச்சிறியதோ அல்லது பெரியதோ ஆயினும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்படிாமல் இல்லை என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 34:3)

(நபியே! மறுமைநாள் ஏற்படும்) நேரத்தைப்பற்றி அது எப்போது ஏற்படும் என்று அவர்கள் உம்மை கேட்கின் றார்கள், அந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது. அந்நேரத்தை பயப்படுவோருக்கு எச்சரிக்கை செய்பவர்தான் நீர்! (அல்குர் ஆன் 70:42-45)

அவர்கள் உம்மிடம் மறுமை நாள் (எப்போது ஏற்படும் என்பது) பற்றி! வினவுகிறார்கள். நீர்கூறும் அதன் ஞானம் என்இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அதுவரும் நேரத்த்ை அவனைத்தவிர் வேறு எவரும் வெளிப்படுத்த் இயலாது. அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்.அது திடீரென உங்களிடம் வரும். அவர்கள் உம்மிடம் அதைப்பற்றி நீர் மிகத்தெரிந்தவர் என்று எண்ணியே கேட்கிறார்கள். அதன் ஞானம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்:)5)

மேலே கூறப்பட்ட வசனங்களில் மறுமைநாள் ஏற்படும் நேரத்தைப் பற்றி மக்கள் கேட்ட கேள்விகளும், அதற்குறிய பதில்களும் தரப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்ட பதில்கள் சிந்திக்கத்தக்கவையாகும்.
முதலாவது, கூறப்பட்ட வசனத்தில் ‘அதை நீர் அறிவீரா?” என்று அல்லாஹ் கேட்கிறான். அடுத்து அது சமீபத்திலும் வந்துவிடலாம் என்ற இரண்டு வாசகங்களும் நபி (ஸல்) அவர்களுக்கு மறுமைநாள் எப்போது வரும் என்பது தெரியாது என்பதையே தெளிவுப்படுத்துகிறது.

இரண்டாவதாக, கூறப்பட்ட வசனத்தில், காஃபிர்கள் மறுமை நாள் நம்மிடம் வராது என்று கூறியபோது (நபி) (ஸல்) அவர்கள் மறைவான விசயத்தை அறியக்கூடிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக (அவ்வேளை) உங்களிடம் வந்தே தீரும் என்று கூறுகிறார்கள். இதில் அல்லாஹ்வின் தனிஆற்றலாகவே, மறைவான விசயத்தை கூறுகிறார்கள். எனவே இந்த மறைவான விசயத்தை அல்லாஹ் மட்டுமே அறியமுடியும் என்பது தெளிவாகிறது:

மூன்றாவது, கூறப்பட்ட வசனத்தில் நபி (ஸல்) அவர் களுக்கு தெரியாது என்றே அல்லாஹ் கூறிவிடுகிறான். ‘(அந்நேரத்) தைப்பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது” என்ற வாசகமும், “அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது” என்ற வாசகமும் ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகிறது.

நான்காவதாக கூறப்பட்ட வசனம், (நபி) ஸல் அவர்களைப்பற்றி மக்கள் எண்ணியிருந்த எண்ணத்தை வ்ெளிக்காட்டுகிறது. அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மறுமைநாளைப்பற்றி தெரியும் என்றே எண்ணியிருந்தனர். ஆனால் அல்லாஹ் அந்நேரத்தை அவனைத்தவிர வேறு. எவரும் வெளிப்படுத்த முடியாது என்று கூறியதன்மூல்ம் நபி (ஸல்) அவர்கள் உட்பட எவரும் அறிய முடியாது என்பது தெளிவாகிறது. . . . . . . . . . . . .
அவனை நான் ஸகர் (என்னும் நரகில்) புகச் செய்வேன். sus if என்றால் என்னவென்பது உமக்கு தெரியுமா? அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது. (அது சுட்டுக்கரித்து மனிதனின் பேனியையே உருமாற்றிவிடும். அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். – (அல்குர்ஆன்: 74:26-30)

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது. ஸிஜ்ஜின் என்னவென்பது உமக்கு தெரியுமா? அது (பாவிகளின் செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். ”. . (அல்குர்ஆன் 3 83 ! 7-9)
திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி, திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்ன? திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்பது) உமக்கு தெரியுமா? அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப்
போன்று ஆகிவிடும்.(அல்குர்ஆன்:).5)

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹாதமாவில் எறியப் படுவான். ஹாதமா என்றால் என்னவென்பது உமக்குத் தெரியுமா? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்பட்டிருக்கும். நீண்ட கம்பங்க ளில் (கட்டப்பட்டிருப்பார்கள்) (அல்குர்ஆன்: 4:9)

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஸகர், ஸிஜ்ஜின், திடுக் கிடும் நிகழ்ச்சி, ஹாதமா போன்றவைகள் நபி (ஸல்) அவர். சளுக்குதெரியாதுஎன்பதும்பிறகு அதேவசனத்தில் அல்லாஹ் விளக்குவதையும் பார்க்கலாம். இந்த வசனங்களெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியாமல் பல இருந்திருக்கின்றன என்பதை அறிவிக்கின்றன.

அல்லாஹ்வைத் தவிர வானங்களிஜம் பூமியிலும், இருப்பவர் எவரும் மறைவான விசயத்தை அறிய முடியாது. மேலும் எப்போது எழுப்பபீபடுவார்கள் என்பதையும் அறிய
மாட்டார்கள் என்று (நபியே) நீர் கூறும்! (அல்குர்ஆன்: 27:65)

வானங்களிலும், பூமியிலும் இருப்பவர்கள்யாரும்அறிய முடியாது என்று கூறியதன் மூலம் இப்பூமியில் வாழ்ந்த நபி (ஸல்) அவர்களும் அறியமுடியாது என்று விளங்கலாம்.
அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக். கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலு கரையிலும், கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும்உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும் பசுமையானதும், உதிர்ந்ததும் (எந்தப்பொருளும் தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை, மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளதாலும் அவன்தான் அதை அறிவான் என்பதாலும் நபி(ஸல்) அவர்களால் மறைவான விசயத்தை அறிய முடியாது என்று தெளிவான முடிவுக்கு வரலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என்பதற்கு அவர்களே கூறக்கூடிய மிகத் தெளிவான சான்று கீழ்க் காணும் திருக்குர்ஆன் வசனத்தில் இடம்பெறுகிறது,
(நபியே!) நீர் கூறும் என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நான் மலக்கு (வானவர்) என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு வஹீயாக) அறிவிக்கப்பட்டதை தவிர வேறு எதையும் பின்பற்றவில்லை. நீர்கூறும் குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்:)

(நபியே!) நீர் கூறும். அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைவான விசயத்தை நான் அறிபவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகமாக தேடிக் கொண்டிருப்பேன். மேலும் (எந்தவிதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது. நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவுனுமேயன்றி வேறில்லை. (அல்குர் ஆன் 7:188)

இவ்வசனங்களில் நபி (ஸல்) அவர்களே தனக்கு மறைவான விசயத்தை அறியமுடியாது என்று கூறிவிடுவதால் பிரச்சனைக்கே இடமில்லாமல் மறைவான விசயத்தை(நபி) (ஸல்) அவர்களால் அறியமுடியாது என்று அறிதியிட்டுக் கூறலாம்.

நபி(ஸல்) அவர்களால் மறைவான விசயங்களை அறிய முடியாது என்பதை நாம் இதுவரை குர்ஆனின் வசனம் மூலம் விளங்கினோம். இதைப்போன்று ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள்தெரியவில்லை என்பதை அறிவிக்கின்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.
நான் என் தந்தை மீது இருந்த கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) செல்கிறேன்.

கதவை தட்டினேன். அவர்கள் யாரது? என்றார்கள். நான் (தான்) அப்போது “நான் தான் என்றால்.” என்று இந்தபதிலை வெறுப்பதைப்போல் கூறினார்கள். இந்த ஹதீஸ் ஜாபிர் (ரலி) அறிவிக்க புகாரியில் இடம் பெற்றுள்ளது.

மக்கா வெற்றியின் போது நான் நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு).சென்றேன். அங்கு பாத்திமா (ரலி) அவர்கள் மறைத்திருக்க நபி (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருந் தார்கள். அப்போது யார்இவர்என நபி(ஸல்) கேட்டார்கள். நான் உம்முஹானி என்று கூறினேன் என்று உம்முஹானி (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது.

தனக்கு மிகவும் தெரிந்த ஜாபிர் (ரலி), உம்முஹானி (ரலி) இருவர்கள் தன்னிடம் வரும்போது தனக்கும் அவர்” களுக்கும் மத்தியில் திரையிருந்தபோது அதை அவர்களால் தெரியமுடியவில்லை. அதனால்தான் யார்என்று கேள்வியை கேட்கிறார்கள். இந்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து நபி (ஸ்ல்) அவர்கள் மறைவான விசயத்தை அறிய முடிய. வில்லை என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டிலேயே (ஸலாம் கூறி) திரும்பி விட்டார்கள். அப்போதுதுல்யதைன் என்பவர், அல்லாஹ் வின் தூதரே தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா? என்று கேட்டார். துல்யதைன் சொல்வது உண்மையா? என (மக்களிடம்) நபி (ஸல்) கேட்டார்கள். மக்கள் ஆம் என்றார்கள்.

நபி (ஸல்) எழுந்து (விடுபட்ட) மற்றஇரண்டு (ரக் அத்) தொழுதார்கள். பிறகு ஸலாம் கூறினார்கள் பின்னர். தக்பீர் கூறி, நான் (எப்போதும் செய்யும்) ஸஜ்தாவைப் போல் ஸஜ்தா செய்தார்கள், அல்லது (அதைவிட) நீளமாக் செய்தார்கள். பிறகு எழுந்தார்கள். இது புகார் யில் அபூஹாரைரா (ரலி) அறிவிக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் தொழுத தொழுகை எத்தனை என்பது * நபி (ஸல்) அவர்களுக்கு சில நேரம் தெரியாமலிருந்திருக்கிறது: அதனால் தான் துல்யதைன் (ரலி) அவர்கள் கேட்டபோது துல்யதைன் சொல்வது உண்மையா? எனக்கேட்கிறார்கள்

இதிலிருந்துதான் நான்கு ரக்அத்கள் தான் தொழுதுயிருக் கிறோம் என்று அவர்கள் எண்ணியிருப்பது விளங்குகிறது”மறைவான விஷயத்தை அறிந்திருந்தால் துல்யதைன் சொல்வது உண்மையா? என்று கேட்டிருக்கமாட்டார்கள். மேலும் இரண்டு ரக்அத்தும் தொழு திருக்க மாட்டார்கள் சிலர் இது சட்டத்தை விளக்குவதற்காக செய்திருக்கலாம் உண்மையில் மறந்திருக்க முடியாது என்று GF reis)6) b. ஆனால் இக்கூற்றை இப்னுமாஜா 1213 வது ஹதீஸில் இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் போது, துல்யதைன் (ரலி) கேள்விக்கு தொழுகை சுருக்கப்படவும் இல்லை, நான் மறக்கவும் இல்லை என்று நபி (ஸல்) கூறியதாக காணப் படுகிறது.

இதுபோன்று இப்னுமாஜாவின் 1215 ஹதீஸில் துல்யதைன் (ரலி) அவர்களின் இக்கேள்வியை கேட்டு கோபமடைந்ததாகவும் இடம் பெறுகிறது. இவ்விரண்டு ஹதீஸ்களும் உண்மையிலேயே நபி (ஸல்) மறந்துதான் இரண்டு ரக்அத் தொழுதார்கள் என்பதை தெளிவுபடுத்து
மேற்கூறியதை போன்று இப்னுமாஜா 1203-வது ஹதீஸில் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் நபி(ஸல்) தொழுகையில் குறைத்து தொழுவதை குறிப்பிட்டபோது, நான் மனிதன்தான் நீங்கள் மறப்பதைப்போன்று நான் மறந்துவிடுவேன் என பதிலளித்ததாக காணப்படுகிறது.

இந்த ஹதீஸில் தெளிவாக நபி (ஸல்) மறந்துவிட்டதை அறிவிக்கிறது. மறைவானவிஷயத்தை ஒருவர் அறிந்தவ என்று சொன்னால், அவருக்கு மறைந்து தெரியாத ஒரு விஷயமும் இல் லை என்று பொருள்.
இப்போது கவனியுங்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ரக் அத்தை மறந்ததன் மூலம் மறைவான விஷயம் அறியமுடியாது என்பது தெளிவாகிறது.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தாங்கள் வரி சைகளை சரிசெய்தார்கள். நபி (snoso) (வீட்டிலிருந்து வெளியேறி (தொழுகை இடத்துக்கு முன்வந்தார்கள். அவர் தொடக்குடையவர்களாக இருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் (வீட்டிலிருந்து) வெளி. யேறி (தொழுகை இட்த்துக்கு) முன்வந்தார்கள். பிறகு உங்கள் இடத்திலேயே (நில்லுங்கள்) என்று கூறி திரும்பிச் சென்றார்கள். பிறகு குளித்துவிட்டு தலையில் நீர் சொட்ட சொட்ட வெளிவந்து அவர்களுக்கு தொழவைத்தார்கள்” அறிவிப்பவர் அபூஹா ைசதுர (ரலி) நூல் : புகாரீ

இதே ஹதீஸில் இப்னுமாஜா (1220) ல், நான் தொழுகையில் நிற்கும் முன்வரை தான் தொடக்காளி என்பதை மறந்திருந்தேன் என்று குறிப்பிட்டதாக இடம் பெறுகிறது.
தனக்கு குளிப்பு கடமையாகிறது என்பது கூட நபி (ஸல்) அவர்களுக்கு மறந்திருக்கிறது என்றால், கோடிக் கணக்கான மறைவான விஷயம்தெரியும் என்றால், ஏற்றுக் – கொள்ள முடியுமா?

அடர்ந்த இருளில் ஒருநாள் நான்வெளியேசென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தனியாக (சென்று கொண்டு) இருந்தார்கள். அவர்களுடன் எந்த மனிதரும் இல்லை. அவர்களுடன் யாரும் செல்வதை அவர்கள் வெறுக்கிறார்கள் போலும் என எண்ணிய நான் (அவர்கள் மேல்பட்ட) சந்திரனின் நிழலில் சென்றேன். (திடீரென திரும்பியவர்கள் என்னை பார்த்துவிட்டார்கள். (சந்திரனின் நிழலில் நான் இருந்தேன் ஆதலால்) யார்? என்று கேட்க டார்கள். நான் அபூதர் என்றேன்.
அறிவிப்பவ்ர் : அபூதர் (ரலி) நூல் :

தனக்கு நெருங்கிய தோழர் அபூதர் (ரலி) அவர்கள் இருட்டில் இருந்தபோது அது யார் என்பதை அறியமுடிய வில்லை என்றால் எத்தனையோ நிலைகளில் மறைக்கப் பட்டிருக்கும் விசயங்கள் தெரியும் என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லையா?