12) விருந்து
சமூகவாழ்வில் பிறரது நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் பிறர் மீது கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவும் உதவுகிற பண்பாடு விருந்தோம்பல்.,சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்கும் இப்பண்பாட்டை இறைநம்பிக்கையில் ஒரு பகுதியாகவே இஸ்லாம் கருதுகிறது. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹரைரா (ரழி) நூல் : (புகாரி: 6018, 6019, 6136, 6138, 6475) (முஸ்லிம்: 67, 68) (அஹ்மத்: 7307, 9223) (திர்மிதீ: 2424), (அபூதாவூத்: 4487).
நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்பே இந்தப் பண்பாட்டை கடைபிடித்து வந்திருக்கிறார்கள். முதன்முதலாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களைச் சந்தித்து, கட்டியணைத்து திருமறையின் ஆரம்ப வசனங்களை ஓதிக் காட்டிய தருணத்தில் பயந்து போன நபியவர்களுக்கு அன்னை கதீஜா (ரழி) அவர்கள் கூறிய ஆறுதல் மொழிகளில் நபியிடம் இருந்த விருந்தோம்பலை ஓர் உயரிய பண்பாடாகக் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக (கூறுகிறேன்) ஒருக்காலும் அல்லாஹ் உங்களை இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) நீங்கள் வறியோருக்காக உழைக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள் சத்தியவான்களுக்கு உதவுகிறீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிக்ஷா(ரழி) நூல் : (புகாரி: 3, 4954, 6982) (முஸ்லிம்: 231) (அஹ்மத்: 24681, 24768)
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் வந்த ஒரு மனிதருக்கு உணவளிக்க ஏதும் இருக்கிறதா? எனக் கேட்டு வருமாறு தனது வீட்டிற்கு ஆளனுப்பினார்கள். தண்ணீரைத் தவிர வேறெதுவுமில்லை என பதில் வந்தது. நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கும் அதே நிலை. குழந்தைக்குரிய உணவைத் தவிர வேறெதுவுமில்லை என அவரது மனைவி கூறினார். அழைத்து வரப்பட்டவர் அல்லாஹ்வின் தூதரின் விருந்தினர்.எப்படியேனும் அவரின் பசி தீர்த்து அனுப்ப வேண்டும் என்று அபூதல்ஹா ஓர் திட்டம் தீட்டினார். அதன்படி அவர் மனைவி குழந்தைகளுக்கு
உணவளிக்காமல் தூங்க வைத்தார். விளக்கை சரி செய்வது போல் அதை அணைத்து விட்டார்.
விருந்தினரை உண்ண வைத்து இவர்கள் இருவரும் உண்பது போல் பாவணை செய்து கொண்டிருந்தனர் இறுதியில் விருந்தினரை திருப்திபடுத்தி விட்டு கணவன், மனைவி, பிள்ளைகள் என மொத்தக் குடும்பத்தினரும் ஒட்டிய வயிறுடன் பட்டினியில் இரவைக் கழித்தார்கள். இந்நிகழ்வைக் கண்டு மகிழ்ந்த இறைவன் இப்பண்பாட்டை சிலாகித்து இத்தகையோர் தான் வெற்றியாளர்கள் எனும் (கீழ்காணும்) வசனத்தை இறக்கி வைத்தான். தமக்கு வறுமை இருந்த போதும், தம்மை விட (பிறருக்கு) முன்னுர ிமை அளிக்கின்றனர். தன்னி டமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 59:9) ➚ அறிவிப்பவர் : அபூஹரைரா (ரழி) நூல் : (புகாரி: 2461, 3041, 3798, 4889) (முஸ்லிம்: 3829, 3830), (திர்மிதீ: 3226).
விருந்து கொடுப்பவர் அதற்காக மக்களை அழைக்கும் போது ஒரு தடவை அழைத்தால் போதுமானது. சம்மந்தப்பட்டவர் தனது அலுவல்களுக்கிடையில் மறந்திருப்பாரோ என நினைத்து மீண்டும் ஒரு தடவை நினைவ+ட்டிக் கொண்டால் அதுவும் தவறில்லை.
ஆனால், தமிழகத்தின் சில பகுதிகளில் விருந்தழைப்பு என்றால் நான்கு தடவை, ஐந்து தடவை அழைக்க வேண்டும்
அதுதான் மரியாதை என்ற கருத்து நிலவுகிறது. அதிலும் திருமணம் போன்ற குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக அழைத்தால் முதலில் தந்தை அழைக்க வேண்டும். பிறகு தாய் போய் அழைக்க வேண்டும். திருமணத்தின் முதல் நாள் இரவில் மணமக்களின் சகோதர, சகோதரிகள் சென்று அழைக்க வேண்டும். திருமணத்தன்று காலையில் மீண்டும் ஓர் அழைப்பு.
இவையனைத்தும் குறைவின்றி நடந்தேற வேண்டும். இதில் ஒன்று குறைந்தாலும், மரியாதை குறைந்ததாகக் கூறிக் கொண்டு விருந்தையே புறக்கணிக்கும் கோரக் காட்சிகளும் அரங்கேறுகின்றன. இஸ்லாம் காட்டும் நாகரிக மரபில் விருந்து என்றால் அதற்கு ஓர் அழைப்பு அவசியம். அதில் இதுபோன்ற முட்டாள் தனத்திற்கும், போலி மரியாதைக்கும் இடமில்லை. நபியவர்கள் வழங்கிய பல விருந்துகளுக்கு அவர்களின் பணியாளரையும், குடும்பத்தைச் சேராத தோழர்களையும், அழைப்பாளராக அனுப்பியுள்ளார்கள். பத்தாண்டு காலம் நபி(ஸல்) அவர்களிடம் பணியாளராக இருந்த அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப் பார்த்து) நீ சென்று முஸ்லீம்களில் நீ சந்திப்போரையெல்லாம் என் (விருந்து)க்காக அழை(த்து வா) என்றார்கள். அவர்களுக்காக நான் சந்தித்தவர்களை அழைத்தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : (புகாரி: 4793, 5170) (முஸ்லிம்: 2572, 2573) (திர்மிதீ: 3142, 3143).
பணியாளரை விட்டு அழைப்பதா? என நபி (ஸல்) அவர்களும் யோசிக்கவில்லை. இது மரியாதை இல்லையென ஸஹாபிகளும் புறக்கணிக்கவில்லை. அபூஹ{ரைரா (ரழி) கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்னைப் பா ர்த்து) அபூஹிர்ரே என்றழைத்து
திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை என்னிடம் அழைத்து வாரும் என்றார்கள். நான் திண்ணைவாசிகளிடம் வந்து அவர்களை அழைத்தேன். அவர்களும் எனது (அழைப்பை ஏற்று) நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள் அனுமதி கேட்டார்கள்.
அனுமதி கிடைத்தும் உள்ளே நுழைந்து ஆங்காங்கே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஹிர் என்று என்னை அழைத்து,
இதை இவர்களுக்கு கொடுங்கள் என்றார்கள். நான் அந்த (பால்) கோப்பையை எடுத்து ஒருவரிடம் கொடுத்தேன். அவர்
தாகம் தணியும் வரை குடித்துவிட்டு கோப்பையைத் திருப்பித் தந்தார். இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வயிறாற குடித்து பசி தீர்ந்தார்கள். அறிவிப்பவர் : அபூஹரைரா (ரழி) நூல் : (புகாரி: 6452, 6246) (திர்மிதீ: 2401) (அஹ்மத்: 10263)
நபியவர்கள் தாம் அளிக்கும் விருந்துக்கு ஸஹாபாக்களை விட்டு அழைத்தது மட்டுமில்லை. ஸஹாபாக்கள் நபியை விருந்துக்கு அழைக்கும் போதும் இதுபோல நடந்துள்ளது. அனஸ் (ரழி) கூறுகிறார்கள். என் தயார் உம்முசுலைம் (ரழி) அவர்கள் ஒரு முத்துளவு
வாற் கோதுமையை அரைத்து கஞ்சி தயாரித்துத் தம்மிடமுள்ள தோல் பையிலிருந்த நெய்யை ஊற்றினார்கள். பிறகு என்னை
நபி (ஸல்) அவர்களை (அழைத்து வருமாறு) அனுப்பி வைத்தார்கள். நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருக்க நான்
அவர்களிடம் சென்று அழைத்தேன். அவர்கள் தமது தோழர்களுடன் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு விட்டுச் சென்றார்கள்.
ஹதீஸ் சுருக்கம்.அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல் : (புகாரி: 5450, 422, 3578, 5381, 6688) (முஸ்லிம்: 3801, 3802) (திர்மிதீ: 3563) (அஹ்மத்: 12034, 12806, 12946, 13058).
இந்தச் செய்தியில் நபியவர்களை விருந்துக்கு அழைத்தவர் சிறுவர் அனஸை அனுப்பி அழைப்பு விடுத்துள்ளார். நபியவர்களும் அதற்காக முகம் சுளிக்கவில்லை. மரியாதைக்குறைவு என்றெல்லாம் கருதவும் இல்லை. எனவே இதுபோன்ற போலித்தனமான மரியாதைகளை விட்டொழிக்க வேண்டும். அதே நேரத்தில் அனைவரையும் நேரில் சென்று அழைத்த ஒருவர் நம்மை உதாசீனப்படுத்தும் நோக்கத்தோடு, பிறர் மூலமாக நம்மை அழைத்தால் அது பரிசீலனைக்கு உரியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இயன்றால் பெண்களையும் சேர்த்து அழைத்தல் பெரும்பாலான விருந்துகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நிலை உள்ளது. ஒருவர் நம்மை விருந்துக்கு அழைக்கும் போது நமது குடும்பத்து பெண்களையும் அழைத்துச் செல்ல வாய்ப்பிருந்தால் அவரிடம் நமது பெண்களையும் அழைக்கச் சொல்லலாம்.
நபி (ஸல்) அவர்களின் பக்கத்து வீட்டில் பாரசீகத்தைச் சேர்ந்த ஒருவர் வசித்து வந்தார். அவர் ருசியாகச் சமையல் செய்வார். (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதருக்காக உணவு தயாரித்து வைத்து விட்டு நபி (ஸல்) அவர்களை விருந்துக்காக அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிக்ஷாவை அழைக்குமாறு சைகை செய்தார்கள். அவர் மறுத்துவிட்டு நபியை மட்டும் அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் முன்பு போல (ஆயிக்ஷாவை அழைக்குமாறு) சைகை
செய்தார்கள். அவர் இரண்டாம் முறையும் மறுத்துவிட்டு நபியை மட்டும் அழைத்தார். பிறகு நபி (ஸல்) அவர்கள் மூன்றாம் முறையும் அதேபோல செய்தார்கள். அப்போது அவர் ஆயிக்ஷா(ரழி) அவர்களையும் விருந்துக்கு அழைத்தார். இருவரும் எழுந்து அவர் வீட்டுக்குச் சென்று (விருந்தில் பங்கேற்றார்கள்) அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : (முஸ்லிம்: 3798) (நஸாயீ: 3382)
(அஹ்மத்: 11799, 1336).
விருந்துக்காக அழைக்கப்பட்டால் இயன்ற வரை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்பதால் ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படலாம். நமது அன்றாட நடவடிக்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலை வரலாம். அவற்றை நினைத்துக் கொண்டு விருந்தழைப்பை புறக்கணித்து விடக்கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் விருந்தை ஏற்பது ஒரு
முஸ்லீம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்கிற கடமைகளில் ஒன்று என்கிறார்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை, சலாமுக்குப் பதில் சொல்லுதல். நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின்
தொடர்தல், விருந்தழைப்பை ஏற்றுக் கொள்ளுதல், தும்மியவருக்கு மறுமொழி கூறுதல் ஆகியவைகளாகும் என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி) நூல் : (புகாரி: 1240, 2445, 5175),
5635, 5863, 6222) (முஸ்லிம்: 4022, 4023) (திர்மிதீ: 2661) (நஸாயீ: 1912) (அபூதாவூத்: 4375) (இப்னு மாஜா: 1425) (அஹ்மத்: 8047, 10543).
(தக்க காரணமின்றி) விருந்தழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி) நூல் : (முஸ்லிம்: 2586).
நபி (ஸல்) அவர்கள் மார்க்க வரம்பிற்கு உட்பட்டு அழைக்கப்பட்ட அனைத்து விருந்துகளிலும் பங்கெடுத்துள்ளார்கள்.
அபூஉசைத் (ரழி) தமது மணவிருந்துக்காக நபி (ஸல்) அவர்களையும் ஸஹாக்களையும் அழைத்திருந்தார்.
இவர்களுக்கான உணவை அபூஉசைத் (ரழி)யின் மனைவி உம்முஉசைத் (மணப்பெண்) அவர்களே தயாரித்துப்
பரிமாறினார்கள் (முதல்நாள்) இரவில் கல் பாத்திரம் ஒன்றில் ஊறவைக்கப்பட்ட பேரீச்சம் பழத்தை சாறு பிழிந்துஎடுத்து
அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு(குடிக்கக்) கொடுத்தார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃது (ரழி) நூல் : (புகாரி: 5176, 5182, 5183, 5591, 5597, 6685) (இப்னுமாஜா: 1902) (அஹ்மது: 15482) (முஸ்லீம்: 3746)
இதுபோன்ற நபியவர்கள் சென்று பங்கெடுத்த விருந்துகள் குறித்த பல செய்திகள் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருந்து நடக்கும் சபைகளில் சிலர் எவ்வித அழைப்புமின்றி உள்ளே நுழைந்து விடுகின்றனர். நாகரிகமற்ற இந்தச் செயலால் விருந்தளிப்பவர் பெரும் சங்கடத்திற்கு ஆளாகிவிடுகிறார். அழையா விருந்தாளிகளால் ஏற்கனவே முறைப்படி அழைக்கப்பட்டவரை சரிவர கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அழையா விருந்தினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விருந்து கொடுப்பவர் பெரும் மனச்சுமைக்கு ஆளாக நேரிடுகிறது.
நபி(ஸல்) அவர்கள் இதில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டிருக்கிறார்கள்.
(ஒருநாள்) அபூக்ஷ{ஐப் (ரழி) தமது ஊழி யரிடம் வந்து நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன். எனவே, அவர்களுடன் சேர்த்து ஐந்துநபர்களுக்கு உணவைத் தயார்செய் என்று கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாத) இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். இவர் எங்களைப் பின் தொடர்ந்து வந்துவிட்டார். நீர் இவருக்கு அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதிப்பீராக! இல்லாவிட்டால் இவர் திரும்பச் சென்று விடுவார் என நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூக்ஷ{ஜப் (ரழி) இவருக்கும் அனுமதி அளிக்கிறேன் என்றார். அறிவிப்பவர் : அபூக்ஷ{ஜப் (ரழி)(புகாரி: 2081, 2456, 5434, 5461)முஸ்லீம் : 3797 திர்மிதி : 1018.
நபி (ஸல்) அவர்கள் அழைக்கப்படாமல் தம்முடன் வந்தவரையே பிரித்துக் காட்டி அனுமதி கோரியிருக்கிறார்கள் என்றால் நாமே அப்படிப்பட்ட அழையா விருந்தாளியாக இருக்கலாமா? என்பதை யோசிக்க வேண்டும். சில தருணங்களில் நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்படும் போது அழைக்கப்படாத தம் தோழர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு நம்மை அழைத்தால் நம்முடனிருப்பவர்களையெல்லாம் கூட்டிச் செல்லலாம் என எண்ணிக் கொள்ளக்கூடாது. ஏனெனில்
நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு அழைத்துச் சென்ற அனைத்து தருணங்களிலும் விருந்துக்கு அழைத்தவர் செய்து வைத்திருக்கும் உணவை எதிர்பார்த்து அழைத்துச் செல்லவில்லை. மாறாக இறைவனின் புறத்திலிருந்து நிகழப்போகும் அற்புதத்தை எதிர்பார்த்துத் தான் அழைத்துச் சென்றுள்ளார்கள். உதாரணமாக அபூதல்ஹா (ரழி) அவர்களின் வீட்டுக்குச்
செல்லும் போது உங்களுக்கு மட்டும் தானே உணவு உள்ளது என்று அவர் கூற அதற்காக உம்மீது எந்தச் சுமையும் இல்லை
என்று கூறினார்கள். முஸ்லிமின் 3802வது அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் மட்டும் வந்தால் அவர்களின் பசி போக்கலாம். அவர்களுடன் இன்னொருவரும் வந்துவிட்டால் அவர்களுக்கு நமது உணவு போதாது என உம்மு சுலைம் அவர்கள் கூறிய செய்தி
பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டுமே போதுமான அளவில் இருந்த உணவில் ஏறத்தாழ எழுபது, எண்பது
பேர் சாப்பிட்டு முடித்தார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரழி),(புகாரி: 3578, 5381, 5450, 6688), திர்மிதி : 3563 அஹ்மது : 12946, 1305முஸ்லீம் : 3801, 3802.
அகழ்ப்போரின் போது ஜாபிர் (ரழி) அவர்கள் வீட்டில்கொஞ்சம் உணவை தயாரித்துக் கொண்டு நபியவர்களை
விருந்துண்ண வருமாறு அழைத்தார். அனைவரையும் அழைத்துச் சென்றால் உணவு தரமுடியாது என்பதால் தமது அழைப்பை மிக இரகசியமாக நபியிடம் முன் வைத்தார். அதைக் கேட்ட நபியவர்களோ உரத்தக்குரலில் தம் தோழர்களை அழைத்து ஜாபிர் உங்களை விருந்துக்கு அழைக்கிறார் வாருங்கள் என்றார்கள். பிறகு ஜாபிரைப் பார்த்து நான் வரும் வரை சட்டியை
அடுப்பிலிருந்து இறக்க வேண்டாம் குழைத்த மாவில் ரொட்டியும் சுட வேண்டாம் எனக்காக காத்திருங்கள் என்று
கூறினார்கள் பிறகு வீட்டிற்கு வந்ததும் அந்த உணவில் இறையருளை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு தம்மோடு ஒரு பணியாளரை வைத்துக் கொண்டு அவர்களே ரொட்டி சுட்டுத் தந்தார்கள். வந்திருந்த அனைவரும் பசியாறினர் அதில்
பங்கெடுத்தவர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேர். ஹதீஸ் சுருக்கம் அறிவிப்பவர் ஜாபிர் (ரழி) நூல் : புகாரி
: 4102, 4101 முஸ்லீம் : 4101 முஸ்லீம் : 3800 ,அஹ்மது : 14497.
நபியவர்கள் தாமாக அழைத்துச் சென்ற அனைத்து தருணங்களுமே இதுபோன்ற அற்புதத்தின் வெளிப்பாடாய் அமைந்தவை தான். எனவே, இதை ஆதாரமாக வைத்து அழைக்கப்படாத விருந்துக்கு நாம் செல்வதோ (அ) பிறரை அழைத்துச் செல்வதோ கூடாது.
விருந்தின் நாட்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் தனது
விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும் அவரது கடமையை (நிறைவேற்றட்டும்) என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கடமை என்றால் என்ன? எனத் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு ஒரு இரவு ஒரு பகல் (உபசரிப்பதாகும்) விருந்து என்பது மூன்று
தினங்களாகும். அதற்கு மேல் உள்ளது அவருக்கு தர்மமாக அமையும். மேலும் விருந்தளிப்பவரை சிரமப்படுத்தும் அளவுக்கு
அவரிடம் தங்குவது விருந்தினருக்கு ஹலால் ஆகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி)(புகாரி: 6135, 6019, 6476)முஸ்லீம் : 69, 3255, 1890 திர்மிதி : 1890, 1891 அபுதாவ+து : 3256இப்னுமாஜா : 3662 அஹ்மது : 15775, 25906, 25908
உயர்ந்த தரத்தில் அதிகப்படியான பொருட்செலவில் பலவகைப் பதார்த்தங்களைத் தயாரித்து வழங்குவது தான் விருந்து எனும் கருத்து மக்களின் மனங்களை ஆக்கிரமித்துள்ளது. இஸ்லாம் காட்டும் நாகரிக மரபின்படி ஒருவர் தனது வீட்டில் எதைச் சாப்பிடுகிறாரோ அதுவே விருந்தளிக்கப் போதுமானதாகும். ஒரு ஆட்டின் கால் குளம்பையோ (அ) விலா எலும்பையோ
(சமைத்து வைத்துக் கொண்டு) நான் அழைக்கப்பட்டாலும். கலந்து கொள்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி)(புகாரி: 2858, 5178)அஹ்மது : 9121, 9822, 9853, 10239 திர்மிதி : 1258முஸ்லீம் : 2582.
ஒருவரின் வீட்டிலிருக்கும் பிஸ்கட், பேரீத்தம் பழம், முறுக்கு, பழைய கஞ்சி, ரசம் சோறு என உண்பதற்கு தகுதியான
அனைத்தும் விருந்தளிக்கப்போதுமானது தான் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். வசதி படைத்த ஒருவர் தமது விருந்தினருக்காக அறுசுவை உணவு கொடுக்கலாம். அதற்காக விருந்து என்றாலே உயர்தர உணவாகத் தான் இருக்க வேண்டும் எனக் கருதுவது தவறாகும். ஒருநாள் நபி (ஸல்), அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகிய மூவரும், ஒரு அன்சாரித் தோழரின் வீட்டுக்குச் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரையும் அவர்களின் இரு தோழர்களையும் கண்ட அவர் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இன்று என்னை விடச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் எவரும் இல்லை என்று கூறினார். பின்னர் நன்கு கனிந்ததும், கனியாததும் நிறம் மாறிய செங்காய்களும் கலந்திருந்த பேரீச்சங்குலையுடன் வந்து அதைச் சாப்பிடச் சொன்னார். (ஆட்டை அறுத்து விருந்து சமைப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் தரும் ஆட்டை அறுப்பதை விட்டும் உன்னை எச் சர ிக்கிறேன் என்று கூறினா ர்கள் . மூவரும் ஆட்டிறைச்சியையும், பேரீத்தம் பழத்தையும் சாப்பிட்டுவிட்டு
தண்ணீர் அருந்தி தாகம் தணிந்தனர் அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி)(முஸ்லிம்: 3799), திர்மிதி : 2292.
இங்கே அன்சாரித் தோழர் பேரீச்சங்குலையுடன் ஆட்டையும் சமைத்து விருந்து படைத்துள்ளார். வசதிபடைத்த ஒருவர் இதுபோன்ற உயர்தர உணவின் மூலம் விருந்தளிப்பதை மார்க்கம் ஏற்றுக்கொள்கிறது. அதேநேரத்தில் பால்தரும் ஆட்டை அறுத்துவிடாதே எனும்
நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை கவனத்திற்குரியது. நமக்கு அவர் தரும் விருந்து அவரின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதாகவோ= , வருமானத்தி ற்கு இழப்பு ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடக்கூடாது எனபதில் நபி (ஸல்) அவர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதுவிளங்குகிறது. இன்று சமூகத்தில் பலர் கடன் வாங்கி விருந்து வைக்கிறார்கள்.
வீட்டுப்பொருட்களை அடமானம் வைக்கிறார்கள். வீடு வாசலை எல்லாம் விற்பனை செய்து விட்டு வாழ்வாதாரமே சிதைந்து வீதியில் நிற்கின்றனர், இவ்வாறு சிரமப்பட்டு விருந்தளிக்க வேண்டிய தேவை என்ன வந்தது? அன்றாடச் செலவுக்கே அல்லாடும் ஒருவர் விருந்து எனும் பெயரில் தாங்க முடியாத சுமையை சுமந்து கொள்வதை மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
மார்க்கத்தின் சட்டங்கள் அனைத்தும் மனிதனின் இயலாமையும், பலஹீனத்தையும் அறிந்து வைத்துள்ள இறைவனால்
அருளப்பட்டவை. எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அல்குர் ஆன் 2:286, 65:7
எளிதானதை மேலும் உமக்கு எளிதாக்குவோம். :(அல்குர்ஆன்: 87:8) ➚
அல்லாஹ் உங்களுக்கு எளிதானதைையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். அல்குர் ஆன் 2:185
நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை யாரேனும் (தம்மீது) சிரமமாக ஆக்கிக் கொண்டல் அவரை
அது மிகைத்துவிடும். எனவே நடுநிலையைக் கடைபிடியுங்கள் இயன்றதைச் செயயுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி)(புகாரி: 39, 6463, 5673)நஸயீ : 4949 அஹ்மது : 7902, 9866, 10517
விருந்துக்காகப் பலர் ஒன்று கூடும் போது இடப்பற்றாக்குறை ஏற்படலாம். அப்போது ஒருவருக்கொருவர் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இயன்றவரை நமது உடலைக் குறுக்கி பிறருக்கு இடமளிக்க வேண்டும். நம்பிக்கை கொண்டவர்களே சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள் என்று உங்களடம் கூறப்பட்டால் இடமளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான்
எழுந்துவிடுங்கள் எனக் கூறப்பட்டால் எழுந்துவிடுங்கள். அல்குர் ஆன் : 58:11
நபி (ஸல் அவர்களிடம் ஹர்ரா என்ற (பெரிய) தட்டு ஒன்று இருந்தது. நான்கு பேர் சேர்ந்து சுமக்கும் அளவுள்ள அந்த பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் (இறைச்சியும், ரொட்டியும் கலந்த) தக்கடி வைக்கப்பட்டது. (அனைவரும்)அதைச் சுற்றி அமர்ந்தார்கள். எண்ணிக்கை அதிகமாகி (இட நெருக்கடி ஏற்பட்ட போது) ரசூல் (ஸல்) அவர்கள் தமது கால்களை மடக்கி முட்டிக்காலின் மீது மண்டியிட்டு (அத்தஹிய்யாத்தில் இருப்பது போல்) அமர்ந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் இது என்ன
இருக்கை? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை கண்ணியமான அடியானாக ஆக்கியுள்ளான். பிடிவாதம் கொண்ட அடக்குமுறை செய்பவனாக என்னை ஆக்கவில்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) நூல் : அபூதாவ+து : 3281, இப்னுமாஜா : 3254
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்த போது குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்காக நாங்கள் ஒரு ஆட்டில் பால் கறந்தோம். பிறகு எங்களின் இந்தக் கிணற்று நீரை அதில் கலந்து கொடுத்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடதுபுறம் அபூபக்கர்(ரழி) அவர்களும் வலதுபுறம் ஒரு கிராமவாசியும் எதிரில் உமர் (ரழி) அவர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலைக்குடித்து முடித்ததும், உமர் (ரழி) அவர்கள் இதோ அபூபக்கர்என்று கூறி (மீதமிருந்ததை அவருக்கு கொடுக்கச் சொன்னார்). ஆனால், நபி (ஸல்) அவர்களோ மீதத்தை கிராமவாசிக்கு கொடுத்தார்கள். பிறகு வலது புறத்திலிருப்பவர் முன்னுரிமை பெற்றவர். எனவே, வலது புறத்திலிருப்பவருக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி)(புகாரி: 2371, 2332, 5612, 5619)முஸ்லீம் : 3783, 8784, 3785, திர்மிதி : 1815அபூதாவ+து : 3238, இப்னுமாஜா : 3416, அஹ்மது : 121634, 12565, 12941, 13025
பெரும்பாலும் நம்முடைய அவைகளில் இமாம்கள், தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என பார்த்து முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நெருங்கிய தோழர்களான அபூபக்கர், உமரை விடுத்து வலதுபுறம் எனும் சபை ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அனுமதி பெற்று இடதுபுறம் ஒருவேளை இடதுபுறத்தில் உள்ளவருக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பினால் வலப்புறத்தாரின் அனுமதி பெற்று கொடுக்கலாம். (ஒருநாள்) நபி (ஸல்) அவர்களின் வலதுபுறம் கூட்டத்தில் சிறிய வயதுடையவரும் இடதுபுறம் மூத்தவர்களும் அமர்ந்திருந்தனர்அப்போது ஒரு கோப்பையில் பால் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிதளவு பருகினார்கள்.
(பிறகு வலதுபுறத்தில் இருந்த சிறுவனிடம்) சிறுவனே இதைப் பெரியவர்களுக்கு கொடுப்பதற்கு என்னை நீ அனுமதிப்பாயா? எனக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கும் மீதத்தை யாருக்கும் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டார் நபியவர்கள் மீத(ப்பாலை) அந்தச் சிறுவனுக்கே கொடுத்துவிட்டார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅது (ரழி)(புகாரி: 2351, 2366, 2451, 2602, 2605, 5620, 2366)முஸ்லீம் : 3786,அஹ்மது : 21758, 21797
இடப்புறத்தில் உள்ளவருக்கு கொடுக்க அனுமதிப்பாயா? என நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து
அவர் அனுமதித்தால் வழங்கலாம் என்பது விளங்குகிறது. சமமாகப் பரிமாறுதல் விருந்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரே அளவில் உணவளிக்க முடியாது. ஒவ்வொருவரின் தேவையைப் பொறுத்து கூடுதலாகவோ (அல்லது) குறைவாகவோ அமையும். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால் சிலருக்கு கிடைத்தும் சிலருக்கு கிடைக்காமல் போய்விடலாம். அது போன்ற தருணங்களில் குறைந்த அளவாக இருந்தாலும் இருப்பதை அனைவருக்கும் கிடைக்குமாறு இருப்பதை சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அக்ஷ்அரிய்யா (எனும் குலத்தார்) போருக்குச் செல்லும் போதும் அல்லது ஊரில் இருக்கும் போதும் அவர்களின் குடும்பத்துக்கு தேவையான உணவு குறைவாக இருந்தால் தங்களிடம் இருப்பதை ஒரு துணியில் ஒன்று திரட்டுவார்கள். பிறகு பாத்திரத்தைக் கொண்டு அதைத் தமக்கிடையே சமமாகப் பங்கிட்டு கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் நான் அவர்களைச் சேர்ந்தவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரழி) நூல் : முஸ்லீம் : 4556,(புகாரி: 2486).
விருந்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உணவு வழங்கப்படும் போது நமக்கு வழங்கப்பட்டதை நாம் சாப்பிடுவோம். அனைவரும் சேர்ந்து சா ப்பிடும் வி தத்தில் உணவுப்பண்டங்களைப் பொதுவில் வைத்தால் மற்றவர்களைக்
கவனித்து நமக்குரிய பங்கை எடுக்க வேண்டும். உதாரணமாக பிஸ்கட், வாழைப்பழம், பேரீத்தம்பழம் போன்றவை வைக்கப்படுகிறது. அனைவரும் ஒவ்வொன்றாக (அ) இரண்டிரண்டாக எடுத்துச் சாப்பிடும் போது ஒருவர் மட்டும் நான்கு, ஐந்து என அதிகப்படியாக எடுத்து உண்ணக் கூடாது.
அப்துல்லாஹ் இப்னு ஜ{பைர் (ரழி) அவர்கள் (ஹிஜாஸின் ஆட்சியாளராக) இருந்த போது எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்கு பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். அதை நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது எங்களை கடந்து சென்ற இப்னுஉமர் (ரழி) அவர்கள் இரண்டு (பழத்தை ஒன்றாகச்) சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (ஒருவர் தம்முடன் சாப்பிடும்) சகோதரனின் அனுமதி பெறாமல் சேர்த்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜபலாபின் சுஹைம் (ரஹ்)(புகாரி: 5446, 2455, 2489, 2490)(முஸ்லிம்: 3809, 3810)திர்மிதி : 1736 அபுதாவ+து : 3337இப்னுமாஜா : 3322 அஹ்மது : 4284, 4794, 4819, 4995, 5178, 5274, 5540, 5874.
உணவளித்தவருக்காக நபி (ஸல்) அவர்கள் கீழ்காணும் பிரார்த்தணையை செய்வார்கள் அல்லாஹ{ம்ம பாரிக் லஹ{ம் ஃபீமா ரஸக்தஹ{ம் வக்ஃ பிர் லஹ{ம் வர்ஹம்ஹ{ம்.
பொருள்: இறைவா! இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்புரிவாயாக! இவர்களை மன்னித்து இவர்களுக்கு இரக்கம் காட்டுவாயாக! அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் புஸ்ர்(ரழி)(முஸ்லிம்: 4149)
சில நேரங்களில் அல்லாஹ{ம்ம அத்யிம் மன் அத்அமனீ வஸ்கீ மன் ஸகானீ என்றும் ஓதியிருக்கிறார்கள்.
பொருள்: இறைவா!எனக்கு உணவளித்தவருக்கு நீஉணவளிப்பாயாக! எனக்கு நீர் கொடுத்தவருக்கு நீ நீர் புகட்டுவாயாக! அறிவிப்பவர் : மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரழி)(முஸ்லிம்: 4177)
விருந்து முடிந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் சாப்பிட்ட பிறகும் அங்கே அமர்ந்திருப்பது விருந்து கொடுப்பவருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்துவிடும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜைனப் பின்த்
ஜஹ்ஷ் (ரழி) அவர்களை மணமுடித்த போது மக்களை (விருந்துக்கு) அழைத்தார்கள். விருந்து முடிந்த பிறகு மக்கள்
பேசிக் கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை)
காட்டினார்கள். ஆனால் மக்கள் எழுந்திருக்கவில்லை. இறுதியாக நபி (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டார்கள்.
அவர்கள் எழுந்ததும் மற்றவர்களும் எழுந்துவிட்டார்கள். அதில் மூன்று பேர் மட்டும் அமர்ந்து கொண்டேயிருந்தார்கள். நபி
(ஸல்) அவர்கள் ஜைனப் (ரழி) அவர்களிடம் செல்ல முற்பட்டார்கள் அப்போதும் அவர்கள் எழவில்லை. பிறகு (சிறிதுநேரம் கழித்து) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் அவர்கள் போய்விட்ட செய்தியை நபியிடம் தெரிவித்தேன்.
வந்து பார்த்த நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள். நானும் உள்ளே செல்ல நினைத்தேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் திரையைப் போட்டு விட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் (கீழ்காணும்) வசனத்தை இறக்கினான். இறை நம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில்உங்களுக்கு அனுமதிக்கப்பட்டாலே தவிர உண்பதற்கு நுழையாதீர்கள் அவரது பாத்திரத்தை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள் மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள் உணவு உண்டதும் எழுந்து சென்று விடுங்கள் பேச்சிலே லயித்து விடாதீர்கள். இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விக்ஷயத்தில் அல்லாஹ் வெட்கப்படமாட்டான்.(அல்குர்ஆன்: 33:53) ➚அறிவிப்பவர் : அனஸ்பின் மாலிக் (ரழி)(புகாரி: 4791, 4792, 4793, 4794, 5154, 5166, 5466, 6238, 6239, 6271)(முஸ்லிம்: 2565, 2567, 2570, 2572, 2573)திர்மிதி : 3142, 3143