13) மூஸா (அலை)

நூல்கள்: மறைவான ஞானம் இறைவனுக்கே !

குச் ஆனில் கூறப்பட்ட நபிமார்களிலேயே அதிக இடங்களில் கூறப்பட்ட சிறப்புக்குரிய நபியான மூஸா (அலை) அவர்களுக்கு எல்லா விசயங்களும் தெரிந்ததா? மறைவான விசயங்கள் அறிந்திருந்தார்களா? என்பதை கீழ்காணும் வசனத்தை சிந்திக்கும் போது விளங்கலாம்.

மூஸாவே உம்முடைய வலதுகையில் இருப்பது என்ன? என்று அல்லாஹ் கேட்டான் (அதற்கவர்) இதுஎன்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்ற என்று கூறினார். அதற்கு (அல்லாஹ்) மூஸாவே அதை கீழே எறியும் என்றான் (அவ்வாறே அவர் அதனை கீழே எறிந்தார் அப்போது அது ஊர்ந்து செல்லும் பாம்பாயிற்று. அதைபிடியும் பயப்படாதீர்; நாம் அதைபழைய நிலைக்கு கொண்டு வருவோம். (அல்குர்ஆன்: 17:2)

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களின் கைத்தடியைப் பற்றி கேட்டபோது அதன்மூலம் சாய்ந்து கொள்வேன். ஆடுகளை ஒட்டுவேன். இலைகளை ஆடுகளுக்கு பறித்துப்போடுவேன் என்றுதான் பதிலளிக்கிறார்கள். அல்லாஹ் இப்போது போடச் சொல்வான் அது பாம்பாக மாறும் என்ற மறைவான விசயம் மூஸா (அலை) அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் பாம்பாக மாறிய உடன் மூஸா (அலை) பயந்து விடுகிறார்கள், அல்லாஹ் பயப்படவேண்டாம் என்று கூறுகிறான்.

முன்சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன? என்று (ஃபிர் அவ்ன்) கேட்டான். இது பற்றிய ஞானம் என்னுடைய இறைவனின் பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறி விடவும் மாட்டான் மறக்கவும் மாட்டான் என்று (மூஸா (அலை-பதில்) கூறினார்கள். (அல்குர்ஆன்: 2:51), 52)

முந்தைய சமுத சயத்தின் நிலைஎன்ன என்ற கேள்விக்கு மூஸா (அலை) அவர்கள் அதுபற்றி என் இறைவனுக்குத்தான் தெரியும் என்று சொன்னதன் மூலம் தனக்கு அவ்விசயம் தெரியாது என்பதை தெரிவிக்கிறார்கள். மறைவான விசயங் கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் என்

இறைவனுக்குத்தான் தெரியும் என பதிலளித்திருக்க மாட்டார்கள். மாறாக அவர்களின் நிலைமையை விளக்கி யிருப்பார்கள். மூஸா வே! நீர் எறிகின்றீரா! எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா? என்று (சூனியக்காரர், கேட்டனர். அவ்வாறன்று நீங்களே (முதலில்) எறியுங்கள் என்று மூஸா கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால், நிச்சயமாக அவைகள் நெளிந்தோடுவது பேர்ல் அவர்களுக்கு தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார். நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்! என்று நாம் சொன்னோம். (அல்குர்ஆன்: 65:68)

சூனியக்காரர்களின் கயிறுகளும், தடிகளும், பாம்பாகக் கூட மாறவில்லை. பாம்பைப் போன்ற தோற்றம்தான் அளித்தது. இதை உண்மையான பாம்பு என எண்ணி மூஸா (அலை) பயந்தே விடுகிறார்கள். இது பாம்பு இல்லை. வெறும் மாயைதான் எனத்தெரிந்தால் பயப்பட்டு இருப்பார்களா? இதுவும் மூஸா (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரிந்திருக்க முடியாது என்பதற்கு போதுமாவு சான்றாகும்.
மூஸா (அலை) அவர்கள் பனி இஸ்ராயில்களுக்கு சொற் பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது மனிதர்களில் அதிகம் தெரிந்தவர் யார் என்று கேட்கப்பட்டபோது “நான்” என்று மூஸா (அலை) கூறினார்கள். இந்த தவறான கூற்றை கண்டிக்கும் வண்ணம் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் உன்னைவிட மிக அறிந்த என் அடியார் ஒருவர் இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறார் அங்கு செல், என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறும் ஹதீஸ் புகாரியில் மிகத்தெளிவாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடரில்தான் கஹ்ஃப் எனும் அத்தியாயத்தில் 60வசனத்திலிருந்து 82வது வசனம்வரை விளக்கப்படுகிறது இதில் ஹிழ்ர் (அலை) கப்பலில் ஒட்டை போட்டது. ஒரு குழந்தையைக் கொன்றது. ஒரு சுவரை சரிசெய்து கூலி வாங்காமல் இருந்தது. இவைகள் எதற்கு செய்தார்கள் என்பதை ஹிழ்ர் (அலை) விளக்கும் வரை மூஸா, (அலை) அவர்களுக்கு தெரியவில்லை. இந்நிகழ்ச்சி மூஸா (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றது.