14) பலவீனங்களை விட்டும் அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துதல்.
பலவீனங்களை விட்டும் அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துதல்.
அல்லாஹ் பசி, தாகம், உணவு, உறக்கம், மலம், ஜலம் கழித்தல் போன்ற அனைத்து தேவைகளை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன் (அல்குர்ஆன்: 102:1-2)➚
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ் விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன். (அல்குர்ஆன்: 35:15)➚
அல்லாஹ் மறதி என்ற பலவீனத்தை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (அல்குர்ஆன்: 19:64)➚
என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” (அல்குர்ஆன்: 20:52)➚
அல்லாஹ் பசி, தாகம் போன்ற பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” (அல்குர்ஆன்: 6:14)➚
தூக்கம் என்பது இறைத்தன்மைக்கு எதிரானதாகும். அல்லாஹ் இத்தகைய பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. (அல்குர்ஆன்: 2:255)➚
அல்லாஹ்விற்கு பெற்றோர்கள், மனைவி , மக்கள் யாரும் கிடையாது. அல்லாஹ் இவற்றை ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. (அல்குர்ஆன்: 112:3)➚
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (அல்குர்ஆன்: 72:3)➚
அல்லாஹ்விற்கு உதவியாளர்களோ, கூட்டாளிகளோ யாரும் கிடையாது. அவன் தனித்தவன், இணையற்றவன். அவனுக்கு நிகராக யாருமில்லை.
ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை” (அல்குர்ஆன்: 17:111)➚
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன்: 112:4)➚