13) நற்பெயரை வேண்டுதல்

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

 

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

பின் வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!

(அல்குர்ஆன்: 26:84)

சிலர் மறுமை வாழ்வில் வெற்றிப் பெற்றால் போதுமானது என்று நினைக்கின்றனர் இவ்வுலகத்தை அலட்சியமாகக் கருதுகின்றனர். ஆனால் நமக்கு மார்க்கம் அவ்வாறு வழிகாட்டவில்லை. நபியவர்கள் இரண்டையும் இணைத்தே துஆ செய்தார்கள்

“எங்கள் இவ்வுலகிலும் இறைவனே! நன்மையை(த் மறுமையிலும் நன்மையைத் நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக!”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி).

நூல்:(புகாரி: 6389), (முஸ்லிம்: 5219)

இம்மை, மறுமை ஆகிய இருவாழ்க்கையிலும் நாம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றுதான் மார்க்கம் கற்றுத்தருகிறது. அதேபோன்று நாம் அல்லாஹ்விடம் நல்ல பெயரை பெற வேண்டும் என்பதற்காகதான் எல்லா நற்காரியங்களையும் செய்யவேண்டும். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய எல்லா நற்காரியங்களையும் சரிவர செய்து சகமனிதருக்குச் செய்யவேண்டிய காரியங்களை சரியாகச் செய்யாமல் அவர்களிடம் கெட்ட பெயரோடும். அவர்களின் சாபத்தோடும் சென்றுவிடக் கூடாது.

சில மக்களைப் பற்றி வெளியுலகில் விசாரித்தால் நல்லவர், வல்லவர் என்பார்கள். ஆனால் அவர்களின் குடும்பத்தார்களிடமோ, அக்கம், பக்கம் உள்ளவர்களிடமோ விசாரித்தால் அவரின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் நிலைதான் இருக்கும். அவர்களின் சாபத்திற்கும் ஆளான நிலையில் மரணத்தை அடைத்திருப்பார். ஒரு ஏகத்துவவாதி ஒருபோதும் இவ்வாறு வாழ்ந்துவிடக் கூடாது. அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை சரிவரச் செய்வதோடு மனிதர்களிடமும் இணக்கமாகவும். நற்குணத்தோடும். முறையில் பழக, வாழ வேண்டும். நல்ல

நாம் மரணித்த பின் நம்மைப் பார்த்து நான்கு பேர் நன்மை செய்ய, நமக்காகப் பிரார்த்தனை செய்ய முன்வர வேண்டும். அப்படிபட்ட வாழ்க்கையை வாழத்தான் இப்ராஹீம் நபி அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். நாம் வாழும்போது நம்மை ஆயிரம் பேர் புகழ்ந்தாலும் மரணத்திற்குப் பின் நம்மைத் தூற்றுவோராக இருக்கும் நிலையில்தான் பலர் வாழ்வதைப் பார்க்கின்றோம்.

ஆனால் நாம் மரணித்தாலும் நம்மீது நல்லெண்ணம் வைக்கும் நபர்கள் எத்தனை பேர் என்பது கேள்விக்குறியே! இந்த நிலையில் தாம் மரணித்து விடக்கூடாது என்ற ஆசையுடன் தான் இப்ராஹீம் நபி இவ்வாறு கேட்கிறார்கள். நாம் மரணித்த பின்பு நம்மை வெறுக்கும், சபிக்கும் சாபத்திற்குரியவர்களாக நாம் மாறி விடாமல் இருக்கவேண்டுமென்றால் இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையையும் நாம் செய்ய வேண்டும்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை பிறர் பாராட்ட, புகழ, பெருமைப்படுத்த வேண்டும் என பிற மக்களுக்காக நாம் வாழ்ந்துவிடக்கூடாது. அப்படி பிற மக்களின் மதிப்பைப் பெற வேண்டும் என அவர்களுக்காக ஒரு காரியத்தைச் செய்தால் அவை நிச்சயம் நம்மை நரகில் சேர்த்துவிடும். நாம் செய்யும் அனைத்து காரியத்தையும் கலப்பற்ற முறையில் அல்லாஹ்விற்காகத் தூய எண்ணத்துடன் செய்ய வேண்டும்.