13) தாயத்து
தாயத்து
16781حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا قَالَ إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ وَقَالَ مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ رواه أحمد
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் வந்தனர். (அவர்களில்) ஒன்பது நபர்களிடம் நபியவர்கள் பைஅத் (உடன்படிக்கை) செய்தீர்கள். ஒருவரை விட்டு விட்டார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒன்பது பேரிடம் பைஅத் செய்தீர்கள் ஒருவரை விட்டு விட்டீர்களே? என்று கேட்டார்கள். (அதற்கு) அவர் மீது தாயத்து இருந்தது என்று நபியவர்கள் கூறிவிட்டு தனது கையை நுழைத்து அதை அறுத்தார்கள். (பிறகு) அவரிடம் பைஅத் செய்தார்கள். மேலும், யார் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: (அஹ்மத்: 16781)