12) ஹதீஜா பின்த் குவைலித் (ரலி) 

நூல்கள்: நபித்தோழரை அறிந்து கொள்வோம்

உம்முல் மூஃமினீன் (أمّ المؤمنين)

1) நபி(ஸல்) அவர்களால் உலகத்துப் பெண்களில் சிறந்தவர் என்று சொல்லப்பட்ட பெண்மணி. (புகாரி: 3432)

2) இவருடைய சகோதரி பெயர் ஹாலா (هالة) (புகாரி: 3821)

3) நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மண முடிப்பதற்கு முன்னர் இவர்கள் மரணித்து விட்டார்கள். (புகாரி: 3817)

4) நபியவர்கள் வீட்டில் இறைச்சி சமைத்தால் நபிகளாரின் இந்தப் பெண்மனியின் தோழிகளுக்கு அன்பளிப்பாக வழங்கும் படி கூறுவார்கள். (புகாரி: 3816)

5) நபி(ஸல்) அவர்கள் இந்தப் பெண்மனிக்கு சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று வழங்கப்படும் என்று கூறினார்கள். (புகாரி: 3817)

6) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்தப் பெண்மனிக்கு ஸலாம் சொல்லும் படி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.(புகாரி: 3820)

7) நபியவர்கள் ஹிரா மலையில் இருக்கும் போது உணவு முடிந்து விட்டால் இந்தப் பெண்மனியிடம் வந்து உணவு பெற்றுச் செல்வார்கள். (புகாரி: 4953)

8) நபியவர்களுக்கு முதன் முதலில் வஹி இறங்கும் போது ஆறுதல் கூறி ரவணைத்தவர். (புகாரி: 03)

9) வரகா பின் நவ்ஃபலிடம் கூட்டிச் சென்று நபியவர்களின் முதல் வஹீ தொடர்பான விளக்கத்தை பெற உறுதுணையாக இருந்தவர். (புகாரி: 6982)

10) இப்பெண்மணியை நபிகளார் அதிகமதிகம் நினைவு கூர்ந்ததால் ஆயிஷா (ரலி) அவர்கள் அதிகம் ரோஷப்பட்டார்கள்.

(புகாரி: 3821)

ஹதீஜா பின்த் குவைலித் (ரலி)