12) நோயாளியைச் சந்திக் சென்றவர் செய்ய வேண்டிய காரியங்கள்
நூல்கள்:
நோயும் இஸ்லாம் கூறும் தீர்வும்
நோயாளியை சந்திக்கும்போது நல்லதைப் பேசுதல். அவர்களுக்கு பிராத்தனை செய்தல், உணவுகளைத் தயார் செய்தல், இது போன்ற காரியங்களை செய்வதற்கு அனுமதியுள்ளது. ஆனால் பெயர் தாங்கி முஸ்லிம்கள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களான யாஸீன், பாத்திஹா, குர்ஆன் ஓதுதல் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். இதற்கெல்லாம் அனுமதியுமில்லை. நன்மையும் இல்லை.
عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ، أَوِ الْمَيِّتَ، فَقُولُوا خَيْرًا، فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ»
நீங்கள் நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் “ஆமீன்’ கூறுகின்றனர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி), (முஸ்லிம்: 1677, 1678)