12) தந்தைக்காகப் பாவ மன்னிப்பு தேடுதல்

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

 

وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ

என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிகேடர்களில் ஆகிவிட்டார்.

(அல்குர்ஆன்: 26:86)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)

(அல்குர்ஆன்: 14:41)

இப்ராஹீம் நபி தன் தந்தையின் மீது கொண்ட அன்பின் காரணமாக அல்லாஹ்விடம் அவர்களுக்காக மன்னிப்பை வேண்டுகிறார்கள்.

பின்னர் அவர்கள் இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு மன்னிப்பு தேடுவது தவறானது என்று தெரிந்த பின்பு அவற்றிலிருந்து விலகி விட்டார்கள்.

பொதுவாக பெற்றோர்களுக்காகப் பிள்ளைகள் பிரார்த்திப்பது மார்க்கம் வலியுறுத்திய ஒன்றாகும். வழிகாட்டிய,

(“என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது அவ்விருவரும் என்னை(ப் பரிவுடன்) வளர்த்தது போல் நீ அவர்களுக்குக் கருணை காட்டுவாயாக!” என்று பிரார்த்திப்பீராக!

(அல்குர்ஆன்: 17:24)

(“என் இறைவனே! என்னையும், பெற்றோரையும், என் இறைநம்பிக்கையாளராக என் வீட்டிற்குள் நுழைந்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக!

(அல்குர்ஆன்: 71:28)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன.

1. நிலையான அறக்கொடை,

2. பயன்பெறப்படும் கல்வி,

3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

(முஸ்லிம்: 3358)

அனைத்தும் இந்த ஆதாரங்கள் பெற்றோர்களுக்காகப் பிரார்த்திப்பதை வழிகாட்டுகின்றன. எனவே நாம் நமது பெற்றோர்களுக்காக அதிகம் துஆ செய்யக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

இருப்பினும் நமது பெற்றோர் (தாய், தந்தை) அல்லாஹ்விற்கு இணைவைக்கும் நபர்களாக இருந்து, அதிலேயே மரணித்திருந்தால் அப்போது நாம் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யக்கூடாது.

நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த நமது தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தனது தாய், தந்தை ஆகியோருக்காகப் பாவமன்னிப்பு கேட்க முடியவில்லை. காரணம் அவர்கள் ஏசுத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆகவே நாம் நமது பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், அதையும் கன கச்சிதமாக இப்ராஹீம் நபி செய்தார்கள்.

இவ்வாறு மார்க்கம் காட்டித்தந்த அடிப்படியில் நமது தந்தையோ. தாயோ மரணித்திருந்தால் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம். அதே போன்று உயிரோடு வாழும் போதும் அவர்கள் நேர்வழியை அடைவதற்காகவும் பிரார்த்தனை செய்யலாம். அவர்கள் இணைவைப்பவர்களாக இருந்தால் ஒருபோதும் பாவமன்னிப்பு தேட முடியாது.

மேலும் இவற்றில் இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கும் மன்னிப்பை வேண்டுகிறார்கள். தனது பாவம் மட்டும் மன்னிக்கப்பட வேண்டும். தனது உறவுகளின் பாவம் மட்டும் மன்னிக்கப்பட வேண்டும் என்று சுயநலமாக இல்லாமல் அனைத்து இறைநம்பிக்கையாளர்களின் பாவமும் மன்னிக்கப்பட்ட பிரார்த்தனை செய்கிறார்கள்.

அவர்களுக்குப் பின் வந்தோர் ” எங்கள் இறைவனே! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திக் கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!

(அல்குர்ஆன்: 59:10)

(நபியே!) உமது பாவத்திற்காகவும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் கோருவீராக! பாவ மன்னிப்புக்

(அல்குர்ஆன்: 47:19)

மற்றவர்களுக்காகவும், கொண்டவர்களுக்காகவும் இறைநம்பிக்கை பிரார்த்தனை செய்ய மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது. நாம் நமது வாழ்க்கையை மட்டும் நினைக்காமல் மற்றவர்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். நம்மோடு வாழ்ந்தவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக பல தியாகங்களை செய்தவர்கள் எத்தனையோ நபர்கள் மரணித்துவிட்டார்கள். அவர்களின் மறுமை வாழ்க்கைக்கு அவர்களால் எந்த நன்மையையும் இப்போது செய்யமுடியாது. அவர்களின் பாவத்திற்கு மன்னிப்பும் தேடமுடியாது. எனவே அவர்களுக்காகவும் இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் துஆ செய்வோமாக!