12) சகோதரத்துவம்‌ ஏற்படுத்துதல்‌

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவிற்கு வந்தவுடன்‌ சொத்து, சுகம்‌ அனைத்தையும்‌ இழந்து ஹிஜ்ரத்‌ செய்த
முஹாஜிர்களுக்கும்‌ , அவர்களுக்கு அடைக்கலம்‌ கொடுத்த அன்சாரிகளுக்கும்‌ மத்தியில்‌ சகோதரத்துவம்‌ ஏற்படுத்தினார்கள்‌. அன்சாரிகளில்‌ ஒருவர்‌ மரணித்து விட்டால்‌ முஹாஜிர்களில்‌ ஒருவரே அவருடைய சொத்திற்கு வாரிசாகும்‌ அளவிற்கு இந்தச்‌ சகோதரத்துவ ஒப்பந்தம்‌ வலிமையாக இருந்தது. பிறகு அல்லாஹ்‌ இந்தச்‌ சட்டத்தை மாற்றினான்‌.

இரத்த பந்தமுடையோர்‌ ஒருவர்‌ மற்றவருக்கு அல்லாஹ்வின்‌ வேதத்தில்‌ உள்ளபடி நெருக்கமானவர்கள்‌. அல்லாஹ்‌ ஒவ்வொரு பொருளையும்‌ அறிந்தவன்‌. (அல்குர்‌ஆன்‌ 8 : 75)

அன்சாரிகள்‌ சொத்துக்களில்‌ பாதியைக்‌ கொடுப்பதற்கும்‌, இரண்டு மனைவிகளில்‌ ஒருவரை தலாக்‌ செய்து முஹாஜிருக்கு திருமணம்‌ செய்து வைப்பதற்கும்‌ தயாராக இருந்தார்கள்‌ என்பதை அப்துர்‌ ரஹ்மான்‌ பின்‌ அவ்‌ஃப்‌ (லி) மற்றும்‌ ஸஃது பின்‌ ரபீஆ (ரலி) ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சம்பவத்திலிருந்து நாம்‌ அறிந்து கொள்ளலாம்‌. இது(புகாரி: 2049)வது செய்தியாக இடம்‌ பெற்றுள்ளது.

குரைஷிகளின்‌ அச்சுறுத்தல்‌

முஸ்லிம்கள்‌ மதீனாவிற்கு வந்த பிறகும்‌ குறைஷிகள்‌ முஸ்லிம்களை அச்சுறுத்தும்‌ காரியங்களில்‌
ஈடுபட்டனர்‌.

மக்காவிற்கு உம்ராவிற்காக வரும்‌ போது குரைஷிகள்‌ அவர்களை மிரட்டத்‌ துவங்கினர்‌. இதனை பின்வரும்‌ சம்பவத்திலிருந்து நாம்‌ அறிந்து கொள்ளலாம்‌.

(ஹிஜ்ரத்‌ நடைபெற்று) நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனா வந்து சேர்ந்த சமயம்‌, உம்ரா செய்யும்‌ நோக்கத்தில்‌ சஅத்‌ (ரலி) அவர்கள்‌ மக்காவிற்குச்‌ சென்ற போது உமய்யாவிடம்‌ தங்கினார்கள்‌. ( அப்போது நடந்ததை ௪அத்‌ ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌; இறையில்லம்‌ கஅபாவை வலம்‌ (தவாப்‌, வருவதற்கு (ஏதுவாக ஆள்‌ நடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக்‌ கூறு என்று நான்‌ உமய்யாவிடம்‌ கேட்டேன்‌.

(மக்கள்‌ ஓய்வெடுக்கும்‌) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில்‌ என்னுடன்‌ உமய்யா புறப்பட்டார்‌. நான்‌ தவாஃப்‌ செய்து கொண்டிருந்த போது) எங்களை அபூஜஹ்ல்‌ சந்தித்து உமய்யாவின்‌ குறிப்புப்‌ பெயரைச்‌ சொல்லி) அபூ ஸூஃப்வானே! உன்னோடு இருக்கும்‌ இவர்‌ யார்‌? என்று கேட்டார்‌. உமய்யா, இவர்‌ தான்‌ சஅத்‌ என்றார்‌. அப்போது என்னிடம்‌ அபூஜஹ்ல்‌, மதம்‌ மாறிச்‌ சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக்‌ கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்‌) தஞ்சமளித்த நீங்கள்‌ கொஞ்சமும்‌ அஞ்சாமல்‌ மக்கா(விற்குள்‌) வந்து (கஅபாவை) சுற்றிக்‌ கொண்டிருப்பதை நான்‌ காண்பதா…? அல்லாஹ்வின்‌ மீதாணையாக! அபூஸஃப்வா னோடு முட்டும்‌) நீ இல்லாவிட்டால்‌ நீ உன்‌ விட்டாரிடம்‌ சுகமாகப்‌ போய்ச்‌ சேர்ந்திருக்க மாட்டாய்‌ என்று சொன்னார்‌.

அதற்கு அபூஜஹ்லைப்‌ பார்த்து, நான்‌ உரத்த குரலில்‌, அல்லாஹ்வின்‌ மீத ராக! (கஅப்‌ ச்‌) சுற்ற
விடாமல்‌ மட்டும்‌ என்னை நீ தடுத்தால்‌, நீ (வாணிபக்‌ குழுவுடன்‌ கடந்து) செல்லும்‌ மதீனாவின்‌ தடத்தை நான்‌ இடைமறிப்பேன்‌. இதை விட அது உனக்கு மிகவும்‌ கடினமானதாயிருக்கும்‌ என்று சொன்னேன்‌. நூல்‌ : (புகாரி: 3950)

இதுமட்டுமல்லாமல்‌ மதீனாவிற்குள்ளும்‌ முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்‌ விடுத்தனர்‌.

இதைப்‌ பற்றி உபை இப்னு கஅப்‌ (ரழி) கூறுகிறார்கள்‌:

நபி (ஸல்‌) அவர்களும்‌, முஹாஜிர்‌ தோழர்களும்‌ மதீனாவிற்கு வந்த போது அன்சாரிகள்‌ அவர்களுக்கு
அடைக்கலம்‌ தந்தனர்‌. மதீனாவில்‌ அன்சாரிகளின்‌ ஆதரவைப்‌ பெற்றுக்‌ கொண்டதைச்‌ சகித்துக்கொள்ள முடியாமல்‌ குறைஷிகளும்‌, மற்ற அரபுகளும்‌ ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர்‌. இதன்‌ காரணமாக நபித்தோழர்கள்‌ இரவு தூங்கும்‌ போதும்‌ காலையில்‌ விழிக்கும்‌ போதும்‌ தற்காப்புக்காக ஆயுதங்களைத்‌ தங்களுடன்‌ வைத்திருந்தனர்‌.                                                          நூல்‌ : ஹாகிம்‌ (3512) பாகம்‌ : 2 பக்கம்‌ : 434

மதீனாவில்‌ நபியவர்களுக்குப்‌ பாதுகாப்பு

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவிற்கு வந்த பிறகும்‌ அவர்களை அழித்து விட வேண்டுமென்று குரைஷிகள்‌
திட்டமிட்டு செயல்பட்டார்கள்‌. இதனால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவில்‌ தமக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்‌ கொண்டார்கள்‌. பின்வரும்‌ சான்று இதனை உறுதிப்‌ படுத்துகிறது.

ஆயிஷா ருலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌ :

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ (மதீனாவுக்கு வந்த புதிதில்‌) ஒர்‌ இரவில்‌ கண்‌ விழித்திருந்தார்கள்‌. பின்னர்‌ (ஒரு நாள்‌, “இரவில்‌ என்னைக்‌ காவல்‌ காப்பதற்கு என்‌ தோழர்களில்‌ தகுதியான ஒருவர்‌ வேண்டுமே?” என்று கூறினார்கள்‌.

அப்போது நாங்கள்‌ ஆயுதத்தின்‌ ஒசையைக்‌ கேட்டோம்‌. அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌, “யார்‌ அது?” என்று கேட்டார்கள்‌. வந்தவர்‌, “அல்லாஹ்வின்‌ தூதரே! (நான்தான்‌) சஅத்‌ பின்‌ அபீவக்‌ காஸ்‌, தங்களைக்‌ காவல்‌ காப்பதற்காக வந்தேன்‌” என்று கூறினார்‌. பிறகு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌, நான்‌ குறட்டைச்‌ சப்தத்தைக்‌ கேட்குமளவுக்கு (நிம்மதியாக) உறங்கினார்கள்‌. ரு
நூல்‌ : (முஸ்லிம்‌: 4786)

நபித்தோழர்கள்‌ தினந்தோறும்‌ நபியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்‌. பின்னர்‌ அல்லாஹ்‌ உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்‌. (அல்குர்‌ஆன்‌ 5 : 67) என்ற வசனத்தை அல்லாஹ்‌ அருளி நபியவர்களின்‌ பாதுகாப்பிற்கு அல்லாஹ்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்டான்‌. இதன்‌ பிறகு நபித்தோழர்கள்‌ யாரும்‌ நபியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.

முஸ்லிம்களுக்கு போர்‌ கடமையாக்கப்படுதல்‌

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களும்‌ அவர்களின்‌ தோழர்களும்‌ தம்முடைய வீடு வாசல்‌, சொத்து, சுகங்கள்‌ அனைத்தையும்‌ எதிரிகளிடம்‌ பறிகொடுத்து விட்டு கொண்டு மக்காவை விட்டூ வெளியேறி மதீனாவிற்கு வந்தார்கள்‌.

இதன்‌ பிறகும்‌ மக்காவாசிகள்‌ படையெடுத்து வந்ததாலும்‌, மக்காவில்‌ இருந்த முஸ்லிம்களைத்‌
துன்புறுத்தியதாலும்‌, சிலரைக்‌ கொன்று குவித்ததாலும்‌ போர்‌ செய்வதை இறைவன்‌ கடமையாக்கினான்‌.

“போர்‌ தொடுக்கப்பட்டோர்‌ அநீதி இழைக்கப்பட்டுள்‌ ர்‌ு என்ற த்தால்‌ அவர்களுக்கு (எதிர்த்துப்‌
போரிட) அனுமதியளிக்கப்பட்டூள்ளது. அல்லாஹ்‌ அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்‌ (அல்குர்‌ஆன்‌ 22:39)

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ மதத்தலைவராக மட்டுமின்றி மதீனாவின்‌ அதிபராகவும்‌ இருந்தார்கள்‌. நாட்டின்‌ அதிபராக இருப்பவர்‌ தமது குடிமக்களைக்‌ காக்கும்‌ பொறுப்பில்‌ இருப்பதால்‌ எதிரிகள்‌ போருக்கு வரும்‌ போது அவர்களை எதிர்‌ கொண்டுதான்‌ ஆகவேண்டும்‌. அதுவும்‌ சொந்த ஊரை விட்டு விரட்டி அடித்தது மட்டுமின்றி வேறு இடத்தில்‌ நிம்மதியாக வாழும்போது போருக்கு வந்தால்‌ அவர்களை எதிர்க்கும்‌ கடமையும்‌ உரிமையும்‌ உண்டு. இதனடிப்படையில்‌ தான்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ போரிட்டார்கள்‌.

எந்த ஒரு நாடும்‌ வம்பு செய்யும்‌ மற்றொரு நாட்டுடன்‌ கடைப்பிடிக்கும்‌ கடினப்‌ போக்கை விட மிகக்‌
குறைந்த அளவே இஸ்லாம்‌ கடினப்போக்கை மேற்கொண்டது.

“கொல்லுங்கள்‌” வெட்டுங்கள்‌’ என்று கூறப்படும்‌ கட்டளைகள்‌ போர்க்களத்தில்‌ நடைமுறைப்படுத்த
வேண்டியவை. போர்க்களத்தில்‌ இப்படித்தான்‌ நடக்க வேண்டும்‌.

* வம்புச்‌ சண்டைக்கு வருவோருடன்‌ தான்‌ போர்‌! (அல்குர்‌ஆன்‌ 2:190, 9:13)

* சொந்த ஊரை விட்டூ விரட்டியடித்தவர்களுடன்‌ தான்‌ போர்‌! (அல்குர்‌ஆன்‌ 2:191, 22:40)

* போரிலிருந்து விலகிக்‌ கொள்வோருடன்‌ போர்‌ இல்லை! (அல்குர்‌ஆன்‌ 2:192)

* அநீதி இழைக்கப்படும்‌ பலவீனமான ஆண்கள்‌, பெண்கள்‌ மற்றும்‌ சிறுவர்களுக்காகவே போர்‌! (அல்குர்‌ஆன்‌4:75, 22:39-40)

* சமாதானத்தை விரும்புவோருடன்‌ போர்‌ இல்லை! (அல்குர்‌ஆன்‌ 8:61)
* மதத்தைப்‌ பரப்ப போர்‌ இல்லை! (அல்குர்‌ஆன்‌ 2:256, 9:6, 109:6)
என்று திருக்குர்‌ஆன்‌ கூறுகிறது.

நியாயமான காரணம்‌ இருந்தால்‌ மட்டும்‌ முஸ்லிம்‌ அரசாங்கம்‌ போர்‌ செய்யலாம்‌ என்று போர்‌ தொடர்பான சட்டங்களை அல்லாஹ்‌ திருமறைக்குர்‌ஆனில்‌ அருளினான்‌.

சொந்த நாட்டை விட்டூ விரட்டப்பட்டவர்கள்‌ போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும்‌ குறை கூற முடியாது. அதனடிப்படையில்‌ தான்‌ மக்காவின்‌ மீது போர்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ போர்‌
தொடுத்தனர்‌.

போரின்‌ நோக்கம்‌ பூமியில்‌ அமைதி ஏற்படுத்துவதுதான்‌. இதனை பின்வரும்‌ வசனம்‌ தெளிவுபடுத்துகிறது. அவர்களுக்கு பூமியில்‌ நாம்‌ வாய்ப்பளித்தால்‌ தொழுகையை நிலைநாட்டுூவார்கள்‌. ஸகாத்தும்‌ கொடுப்பார்கள்‌. நன்‌ 1 ஏவுவார்கள்‌. தீ 1த்‌ தடுப்பார்கள்‌. காரியங்களின்‌ முடிவு அல்லாஹ்வுக்கே உரியது (அல்குர்‌ஆன்‌ 22:41)

படைப்பிரிவுகளை அனுப்புதல்‌

போருக்கான அனுமதி அல்லாஹ்வின்‌ புறத்திலிருந்து கிடைத்தவுடன்‌ முஸ்லிம்களை அழிப்பதற்காக திட்டம்‌ தீட்டும்‌ மக்காவாசிகளின்‌ வியாபாரப்‌ பாதையை நோக்கி ஒன்றுக்குப்‌ பின்‌ ஒன்றாக பல படைப்‌ பிரிவுகளை நபி (ஸல்‌) அவர்கள்‌ அனுப்பினார்கள்‌.

“அந்தப்‌ படைப்பிரிவுகளின்‌ விபரங்கள்‌ வருமாறு :

1. ‘ராபிக்‌: 2. ‘கர்ரார்‌ 3. ‘அப்வா (அ ‘வத்தான்‌’ 4. பூவாத்‌’ 5. ‘ஸஃப்வான்‌’ 6. ‘துல்‌ உஷைரா: 7. ‘நக்லா 8.
சீஃபுல்‌ பஹ்ர்‌’ போன்றவையாகும்‌.

கிப்லா மாற்றம்‌

ஹிஜ்ரி 2, ஷஅபான்‌ மாதம்‌ (கி.பி. 624 பிப்ரவயில்‌) அல்லாஹ்‌ ‘பைதுல்‌ முகத்தஸின்‌’ திசையிலிருந்து
கஅபாவின்‌ பக்கம்‌ கிப்லாவை மாற்றிக்‌ கொள்ளுங்கள்‌ என கட்டளையிட்டான்‌.

பராஉ பின்‌ ஆஸிப்‌ ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌ :

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில்‌ (ஜெரூசலேமிலுள்ள) பைத்துல்‌ மக்திஸ்‌ நோக்கி
பதினாறு மாதங்கள்‌’ அல்லது பதினேழு மாதங்கள்‌ தொழுதார்கள்‌. மக்காவிலுள்ள இறையில்லம்‌ கஅபாவே தொழுகையில்‌ தாம்‌ முன்னோக்கும்‌ திசையாக இருக்க வேண்டும்‌ என்பதே அவர்களின்‌ விருப்பமாக இருந்தது. (பிறகு கஅபாவை முன்னோக்கித்‌ தொழும்படி, இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது. (கஅபாவை முன்னோக்கி) நபி (ஸல்‌) அவர்கள்‌ தொழுத முதல்தொழுகை அஸ்ர்‌ தொழுகையாகும்‌. (அந்தத்‌ தொழுகையை) நபி (ஸல்‌) அவர்களுடன்‌ மற்ற சிலரும்‌ தொழுதனர்‌. அவர்களில்‌ ஒருவர்‌ அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளி வாசலில்‌ (தொழுது கொண்டு) இருந்தவர்களைக்‌ கடந்துசென்றார்‌. அப்போது அங்கிருந்தவர்கள்‌ ௬க௨’ செய்து கொண்டிருந்தனர்‌. உடனே அவர்‌, அல்லாஹ்வின்‌ மீதாணையாக! நான்‌ அல்லாஹ்‌ வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்களுடன்‌ சேர்ந்து மக்காவிலுள்ள கஅபா)வை நோக்கித்‌ தொழுதேன்‌ என்று சொல்ல, அவர்கள்‌ (அனைவரும்‌) அப்படியே (ர௬கூஉவிலிருந்தபடியே சுழன்று) கஅபாவை நோக்கித்‌ திரும்பிக்‌ கொண்டார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ பைத்துல்‌ மக்திஸை நோக்கித்‌ தொழுதுவந்தது (கண்டு) யூதர்களுக்கும்‌ மற்ற
வேதக்காரர்களுக்கும்‌ மகிழ்ச்சியாகவே இருந்துவந்தது. (தொழுகையில்‌) தமது முகத்தை நபி (ஸல்‌) அவர்கள்‌ கஅபாவை நோக்கித்‌ திருப்பிக்‌ கொண்டவிட்ட போது அதை அவர்கள்‌ வெறுத்தார்கள்‌.      நூல்‌ : (புகாரி: 40)

(புதிய கிப்லாவான கஅபாவை நோக்கி) கிப்லா மாற்றப்படூவதற்கு முன்‌ (பழைய பைத்துல்‌ மக்திஸ்‌)
கிப்லாவை நோக்கித்‌ தொழுத காலத்திலேயே சிலர்‌ இறந்து விட்டிருந்தனர்‌; சிலர்‌ கொல்லப்பட்டுவிட்டனர்‌. அவர்கள்‌ விஷயத்தில்‌ நாங்கள்‌ என்ன கூறுவது என்று எங்களுக்குத்‌ தெரியவில்லை என்று கூறினர்‌. அப்போது உயர்ந்தோன்‌ அல்லாஹ்‌, அல்லாஹ்‌ உங்கள்‌ நம்பிக்கையை (அதாவது தொழுகையை) விணாக்குபவன்‌ அல்லன்‌ எனும்‌ (2:1/3ஆவது) வசனத்தை அருளினான்‌

நூல்‌ : (புகாரி: 40)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கஅபாவை நோக்கித்‌ திரும்பியதும்‌ யூதர்கள்‌ அதனை கடுமையான விமர்சித்தனர்‌. அவர்களுக்கு திருக்குர்‌ஆன்‌ பின்வருமாறு பதிலளித்த்து.

. (முஸ்லிம்கள்‌) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும்‌ ஏன்‌ திரும்பி விட்டனர்‌?” என்று மனிதர்களில்‌ அறிவிலிகள்‌ கேட்பார்கள்‌. “கிழக்கும்‌, மேற்கும்‌ அல்லாஹ்வுக்கே உரியன. அவன்‌ நாடியோரை நேரான வழியில்‌ செலுத்துகிறான்‌” என்று கூறுவீராக!

இவ்வாறே நீங்கள்‌ (மற்ற) மக்களுக்கு எடுத்துச்‌ சொல்வோராகத்‌ திகழவும்‌, இத்தூதர்‌ (முஹம்மத்‌)
உங்களுக்கு எடுத்துச்‌ சொல்பவராகத்‌ திகழவும்‌ உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம்‌. வந்த வழியே திரும்பிச்‌ செல்வோரிலிருந்து இத்தூதரைப்‌ பின்பற்றுவோரை அடையாளம்‌ காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர்‌ நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்‌. அல்லாஹ்‌ யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத்‌ தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ்‌ உங்கள்‌ நம்பிக்கையைப்‌ பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ்‌ இரக்கமுடையோன்‌; நிகரற்ற அன்புடையோன்‌.

(முஹம்மதே! உம்முடைய முகம்‌ வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக்‌ காண்கிறோம்‌. எனவே
நீர்‌ விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத்‌ திருப்புகிறோம்‌. எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல்‌ ஹராமின்‌ திசையில்‌ திருப்புவீராக! நீங்கள்‌ எங்கே இருந்தாலும்‌ உங்கள்‌ முகங்களை அதன்‌ திசையிலேயே திருப்பிக்‌ கொள்ளுங்கள்‌! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்று வேதம்‌ கொடுக்கப்பட்டோர்‌ அறிவார்கள்‌. அவர்கள்‌ செய்பவற்றை அல்லாஹ்‌ கவனிக்காதவனாக இல்லை.

வேதம்‌ கொடுக்கப்பட்டோரிடம்‌ அத்தனை சான்றுகளையும்‌ (முஹம்மதே) நீர்‌ கொண்டு வந்தாலும்‌
அவர்கள்‌ உமது கிப்லாவைப்‌ பின்பற்ற மாட்டார்கள்‌. நீர்‌ அவர்களின்‌ கிப்லாவைப்‌ பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலேயே ஒருவர்‌ மற்றவரின்‌ கிப்லாவைப்‌ பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம்‌ வந்த பின்‌அவர்களின்‌ மனோ இச்சையை நீர்‌ பின்பற்றினால்‌ அநீதி இழைத்தவராவீர்‌!(அல்குர்‌ஆன்‌ 2 : 141-145)

இந்தக்‌ கிப்லா மாற்றத்தின்‌ மூலம்‌ முஸ்லிம்களைப்‌ போன்று நடித்துக்‌ கொண்டிருந்த சிலர்‌ மீண்டும்‌ மதம்‌ மாறிச்‌ சென்றனர்‌. இதன்‌ மூலம்‌ உண்மையான முஸ்லிம்கள்‌ யார்‌ என்று அடையாளம்‌ காணப்பட்டது. நயவஞ்கர்கள்‌ மற்றும்‌ மோசடிக்‌ காரர்களிடமிருந்து முஸ்லிம்கள்‌ பிரிக்கப்பட்டனர்‌.