11) உணவில் பரகத்தை பெறும் வழிகள்

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை

நமது உணவை பரகத் நிறைந்ததாக ஆக்கிக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நம்பிக்கையோடு அவற்றை கடைபிடித்தால் நமது உணவும், இறையருள் நிறைந்ததாக மாறிப் போகும்.

1. அளந்து சமைக்க வேண்டும்:

உங்கள் உணவை (தேவைக்கேற்ப) அளந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பரகத் செய்யப்படும்.
அறிவிப்பாளர்: மிக்தாம் (ரழி) நூல்: (புகாரி: 2128), (அஹ்மத்: 16548).

2. நடுவில் உள்ளதை சாப்பிடக் கூடாது:

உணவின் நடுப்பகுதியில் பரகத் இறங்குகிறது. எனவே அதன் ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள். நடுவிலிருந்து சாப்பிடாதீர்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: (திர்மிதீ: 1727), (அபூதாவூத்: 3280), (இப்னு மாஜா: 3268, 3045, 3261, 17018).

3. பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் ஆறு பேருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கே வந்த கிராமவாசி ஒருவர் அதிலிருந்து இரண்டு கவள உணவைச் சாப்பிட்டார்.
இவர் பிஸ்மில்லாஹ் கூறியிருந்தால் ஒரு கவளமே இவருக்குப் போதுமானதாக இருந்திருக்கும் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆயிக்ஷா(ரழிநூல்: (திர்மிதீ: 1781)(இப்னு மாஜா: 3255)(அஹ்மத்: 23954, 24895, 25089).

4. மீதமின்றிச் சாப்பிட வேண்டும்:

விரல்களை சூப்பியும், தட்டையை வழித்தும் சாப்பிடுங்கள். ஏனெனில் எதில் பரகத் இருக்கிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் (ரழி) நூல்: (முஸ்லிம்: 3792, 3793, 3794), (இப்னு மாஜா: 3261), (அஹ்மத்: 13705, 14025, 14101, 14410, 14689).

5. பகிர்ந்து உண்ண வேண்டும்:

ஒருவர் உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவர் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எட்டு பேருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர் (ரழி) நூல்: (முஸ்லிம்: 3836, 3837, 3838),   (இப்னு மாஜா: 3245),   (அஹ்மத்: 13706, 13870, 14572)

பசித்தோருக்கு உணவளித்தல்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு பசித்தோருக்கு உணவளிப்பதும், நீ அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும் என பதில் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல்: (புகாரி: 12, 28),
6236) (முஸ்லிம்: 56),   (திர்மிதீ: 1778)   (நஸாயீ: 4914),   (அபூதாவூத்: 4520),   (இப்னு மாஜா: 3244)   (அஹ்மத்: 6293).

கியாமத் நாளில் அல்லாஹ் (ஒரு மனிதனை அழைத்து) ஆதமின் மகனே உன்னிடத்தில் பசியுடன் வந்த எனக்கு நீ உணவளிக்கவில்லையே (எனக் கேட்பான்) என் இறைவா அகிலத்தின் அதிபதியாகிய உனக்கு நான் எப்படி உணவளிக்க முடியும்? என்பான் அதற்கு அல்லாஹ் என்னுடைய இன்ன
அடியான் உன்னிடம் பசியுடன் வந்தான். அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. அவனுக்கு கொடுத்திருந்தால் அதன் பலனை என்னிடம் அடைந்திருப்பாய் என்று இறைவன் கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: (முஸ்லிம்: 4661), (அஹ்மத்: 8874)

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள் என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.   (அல்குர்ஆன்: 36:47)

அவனைப் பிடியுங்கள் அவனுக்கு விலங்கு மாட்டுங்கள். பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள். பின்னர்எழுபது முழச் சங்கிலியால் அவனைப் பிணையுங்கள். (ஏனெனில்) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பவில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டவும் இல்லை. இன்று இங்கே
அவனுக்கு உற்ற நண்பன் யாரும் இல்லை.   (அல்குர்ஆன்: 69:30-31)

சொர்க்கச்சோலைகளில் இருப்போர் குற்றவாளிகளிடம் உங்களை நரகில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போரகவும் இருக்கவில்லை (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். எங்களுக்கு மரணம் வரும் வரை தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம் என்று (பதில்) கூறுவார்கள்.   (அல்குர்ஆன்: 74:40-47)

(சொர்க்கத்திற்குரியோர்) அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதி பலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம் (என்று கூறுவார்கள்).   (அல்குர்ஆன்: 76:8-10)

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனை நீர் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான், ஏழைக்கு உணவளிக்க தூண்டுவதில்லை. (அல்குர்ஆன்: 107:1-3) (சொர்க்கம் செல்வதற்கு இடையில் உள்ள கணவாயை அவன் கடக்கவில்லை) கணவாய் என்பது என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், நெருங்கிய உறவுடைய அனாதைக்கும் வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாயாகும்).         (அல்குர்ஆன்: 90:11-17)

யாசித்து உண்ணுதல்

பிறரிடம் யாசித்து உண்பதை இஸ்லாம் அருவருப்பாகக் கருதுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியக் கோட்பாடுகளை தம் தோழர்களிடம் எடுத்துச் சொல்லி அதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என உறுதி மொழி (பைஅத்) எடுத்த போது யாசிக்கக் கூடாது என்பதையும் அதில் ஒன்றாக
சேர்த்துக் கொள்வார்கள். அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது (தினமும்) 5 வேளைத் தொழ வேண்டும். கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறிவிட்டு சற்று குரலைத் தாழ்த்தி மனிதர்களிடம் எதையும் யாசித்துப் பெறக்கூடாது என்பதையும் சேர்த்துக் கூறி உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரழி)நூல்:  (முஸ்லிம்: 1729)(நஸாயீ: 456)(அபூதாவூத்: 1399)(இப்னு மாஜா: 2858)(அஹ்மத்: 22868).

மனிதர்களிடம் எதையும் யாசித்துப் பெறமாட்டேன் என்று என்னிடம் உறுதியளிப்பவர் சுவனம் செல்வதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஸவ்பான் (ரழி) நான் (உறுதியளிக்கிறேன்) என்றார். அதன் பின் யாரிடமும் எதையும்
கேட்காதவராகவே அவர் ஆகிவிட்டார். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரழி) நூல் (அபூதாவூத்: 1400) (இப்னு மாஜா: 1827).

மனிதர்களிடம் யாசிப்பவன் கியாமத் நாளில் முகத்தில் சதையில்லாமல் (எலும்பும் தோலுமாக) வருவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)நூல்: (புகாரி: 1475), (முஸ்லிம்: 1724, 1725),  (நஸாயீ: 2538)(அஹ்மத்: 4409, 5359).

ஓரிரு கவள உணவுக்காக அலைபவன் ஏழை இல்லை. மாறாக தன் வாழ்வுக்கு போதிய செல்வம் இல்லாவிடினும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகிறவனும், அல்லது (அப்படிக்
கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) நூல்: (புகாரி: 1476, 1479),        (முஸ்லிம்: 1722, 1723), (நஸாயீ: 2524, 2525, 2526), (அபூதாவூத்: 1390), (அஹ்மத்: 7225, 7840, 8748, 8779, 9370, 9422, 9510, 9687).

ஒருவர் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைப் போல தனது வாரிசுகளுக்கும் அது போன்ற நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். மரணத் தருவாயில் இருந்த ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கச் சென்றார்கள்.அவர்களிடம் ஒரேயொரு பெண் மகளை தவிர சந்ததிகள் ஏதுமற்ற நான் என் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை
தர்மம் செய்திடட்டுமா? என ஸஃது (ரழி) கேட்டார்கள். நபியவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே சொத்தின் பாதியைக் கொடுக்க அனுமதி கேட்டார்கள்.

அதுவும் கூடாது என்று சொல்லவும் மூன்றில் ஒரு பங்கிற்கு அனுமதி கேட்டார்கள் அதற்கு அனுமதி கொடுத்த நபி (ஸல்) அவர்கள்அவருக்கு ஓர் உபதேசம் செய்தார்கள். நீ உன் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்ற செல்வந்தர்களாக விட்டுச் செல்வது சிறந்ததாகும்.அறிவிப்பவர்: ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி) நூல்: (புகாரி: 1296, 2742, 3936, 4409, 5354, 5668, 6733) (முஸ்லிம்: 3076, 3079), (திர்மிதீ: 2042), (நஸாயீ: 3567, 3568, 3569, 3570), (அபூதாவூத்: 2480), (அஹ்மத்: 1363, 1442, 1464, 1513).

இருப்பது போதும் என நினைப்பதும் எந்தவொரு நிலையிலும் யாசிக்கமாட்டேன் என உறுதியேற்பதும்
யாசிப்பதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். யாசிப்பது தான் நம் தேவையை நிறைவேற்றுவதற்குரிய
வழி என ஒருவர் முடிவெடுத்து விட்டால் அவர் யாசிப்பதற்குரிய வாசலை அல்லாஹ் திறந்து விட்டு விடுவான். யாசகம் கேட்காமல் என் தேவை நிறைவேறுவதற்குரிய ஹலாலான வழியை அல்லாஹ் காட்டுவான் என நல்லெண்ணம் கொண்டு அதற்காக முயற்சித்தால் அதற்குரிய வழியை அல்லாஹ் எளிதாக்குவான்.

அல்லாஹ்வை குறித்து நாம் எவ்வாறு எண்ணுகிறமோ அவ்வாறே அல்லாஹ் நம்மிடம் நடந்து கொள்வான். யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான். யார் பிறர் (செல்வத்தில்) தேவையற்றவராக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு பெற்றவராக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சிக்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளராக ஆக்குவான். மேலும் பொறுமையை விடச் சிறந்த விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) நூல்: (புகாரி: 1469, 6470),
(முஸ்லிம்: 1745), (திர்மிதீ: 1947), (நஸாயீ: 2541), (அபூதாவூத்: 1401), (அஹ்மத்: 10566, 10582, 10669, 10973, 11011, 11456).

நீங்கள் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தால் பறவை உணவளிக்களிக்கப்படுவதைப் போல் நீங்களும் உணவளிக்கப்படுவீர்கள். அவைகள் காலையில்
பசியுடன் செல்கின்றன. மாலையில் நிரம்பிய வயிறுடன் திரும்புகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரழி) நூல்: (திர்மிதீ: 2266).

உழைத்து உண்ணுதல்:

ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது. நபி தாவ+து (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மிக்தாம் (ரழி) நூல்: (புகாரி: 2071), (அஹ்மத்: 16560).

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். (யாசித்தல்) மக்கள் அவருக்கு கொடுக்கவும் செய்யலாம் மறுக்கவும் செய்யலாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜ{பைர் பின் அவ்வாம் (ரழி) நூல்: (புகாரி: 1471, 1470, 2373). (இப்னு மாஜா: 1826), (அஹ்மத்: 1333, 1354).

இறைத் தூதர்கள் அனைவரும் உழைத்துத்தான் பொருளீட்டியிருக்கிறார்கள்

அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அப்படியானால் நீங்கள்? எனத் தோழர்கள் கேட்டனர் அதற்கு ஆம் நானும் சில சில்லறைக் காசுக்காக மக்காவில் ஆடு மேய்த்துள்ளேன் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: (புகாரி: 2262), (இப்னு மாஜா: 2140).

பச்சை வெங்காயமா? பள்ளிக்கு வர வேண்டாம்
சமைக்கப்படாத வெள்ளைப் பூண்டு, வெங்காயம், சீமைப் பூண்டு போன்ற துர்வாடையுள்ள பொருட்களை சாப்பிட்டவர் அதன் வாடை நீங்கும் வரை பள்ளிக்குச் செல்லலாகாது. இந்த(ப்பூண்டுச்) செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்கவோ, பூண்டின் வாடையால் நமக்கு தொல்லை தரவோ வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) 
நூல்:(முஸ்லிம்: 873), (இப்னு மாஜா: 1005), (புகாரி: 854), (திர்மிதீ: 1728), (அஹ்மத்: 7267, 7292, 9178, 14538).
ஆதமின் மக்கள் எதில் வேதனை அடைகின்றனரோ அதில் மலக்குகளும் வேதனையடைகி றா ர்கள் (எனவே துர்வாடையுடன் தொழுகைக்கு வரவேண்டாம்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி)                   நூல்: (முஸ்லிம்: 876, 874), (நஸாயீ: 700), (அஹ்மத்: 14483, 14626).

இந்த வாடை தரும் செடியிலிருந்து சாப்பிட்டவர் தொழுமிடத்தில் நமக்கருகே நெருங்க வேண்டாம் என
நபியவர்கள் கூறியதும் மக்கள் வெள்ளைப்பூண்டு தடை செய்யப்பட்டு விட்டது. தடை செய்ய்பட்டு விட்டது என்று கூற ஆரம்பித்து விட்டனர் . விக்ஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது மக்களே அல்லாஹ் அனுமதித்த ஒன்றைத் தடை செய்யும் உரிமை எனக்கு இல்லை. இருப்பினும் அந்தச் செடியின் துர்வாடையை நான் வெறுக்கிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரழி) நூல்: (அபூதாவூத்: 3327), (முஸ்லிம்: 877) (அஹ்மத்: 10662, 11154).

அனுமதிக்கப்பட்ட பொருளாக இருந்தாலும் அதன் கெட்ட வாடையுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்றால்
அனுமதிக்கப்படாத பீடி, சிகரெட் போன்ற கேடு விளைவிக்கும் பொருட்களின் நாற்றத்தோடு தொழுகையின் வரிசையில் வந்து நிற்கலாமா? அதன் மூலம் மலக்குகளுக்கும், மனிதர்களுக்கும் குமட்டலை ஏற்படுத்தலாமா? என்பதை சம்பந்தப்பட்டோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமைத்தவருடன் சேர்ந்து சாப்பிடுதல்

உங்களில் ஒருவருக்கு அவரது பணியாளர் உணவு சமைத்து வந்து சாப்பிடக் கொடுத்தால் அவரையும் தன்னுடன் அமரச் செய்து சாப்பிட வைக்கட்டும். உணவு குறைவாக இருந்தால் ஓரிரு கவள உணவையாவது அவர் கையில் கொடுத்து சாப்பிடச் சொல்லட்டும். ஏனெனில் அதை சமைப்பதற்காக அவர் தானே நெருப்புச் சூட்டில் கக்ஷ்டப்பட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரழி) நூல்: (முஸ்லிம்: 3142), (புகாரி: 2557), (திர்மிதீ: 1776) (இப்னு மாஜா: 3280, 3281), (அஹ்மத்: 7201, 7401, 7472, 7640)

ஊதியம் பெற்று சமைத்துப் போடும் வேலைக்காரர் தானே என்று சிலர்சமைப்பவர்களை உதாசீனப்படுத்தி விடுகின்றனர் .அவர்கள் நபியவர்களின் கூற்றுப்படி நெருப்பின் உக்ஷ்ணத்தை
சிந்தித்துப் பார்க்க வேண்டும். பணியாளர்களிடமே கடைபிடிக்க வேண்டிய இந்த பண்பாடு.
பல வீடுகளில் மனைவிமார்களுக்குக் கூட்த் தரப்படுவதில்லை ஆண்கள் சாப்பிட்டு முடித்தபின் மீதமிருந்தால் அவர்கள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் தண்ணீரைக் குடித்துவிட்டு ஒட்டிய வயிறோடு பட்டினி கிடக்க வேண்டும்.இதுவே பல குடும்பங்களின் நிலையாகும்.

பல நேரங்களில் குடும்ப வாழ்வின் விரிசல்களுக்கு இதுபோன்ற பக்குவமற்ற நடத்தையே காரணமாக அமைந்து விடுவதும் உண்டு. அதனால், தான் கணவன், மனைவி சேர்ந்து சாப்பிடுவதை நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் அல்லாஹ்வின் தூதரே எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று கேட்டேன். அதற்கு நீ உண்ணும் போது அவளை உண்ணச் செய்ய வேண்டும்.
நீ உடுத்தும் போது அவளுக்கு உடுத்தக் கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. வீட்டில் தவிர (வெளியில்) அவளை வெறுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : முஆவியா (ரழி) நூல்  (அபூதாவூத்: 1830, 1831, 1832(இப்னு மாஜா: 1840).

உணவுத் திருநாள்

நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜ{ப் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாள் தினங்களும் உண்டு பருகி மகிழ்ந்திருக்க வேண்டிய நாட்களாகும். அந்தநாளில் அல்லாஹ்விற்காக நோன்பிருக்கிறேன் என்று
கூட பட்டினி கிடக்க அனுமதியில்லை. இவை (பெருநாள் தினங்கள்) உண்ணுதல், பருகுதலுக்கு
உரிய நாட்களாகும். எனவே, அதில் எவரும் நோன்பு நோற்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீபின் அபீதாலிப் (ரழி) நூல் :  (அஹ்மத்: 670, 780, 783, 945).

கணவன் மனைவி ஊட்டி மகிழ்தல்

கணவன் மனைவி இருவரும் தமக்கிடையில் உணவை ஊட்டி விட்டுக் கொள்வது இல்லற இன்பத்தையும் மறுமை நன்மையையும் பெற்றுத் தரும் காரியமாகும். அல்லாஹ்வின் திருப்தியை நாடி உன் மனைவியின் வாயில் ஊட்டி விடுகிற (உணவு) உட்பட அனைத்து தர்மத்திற்கும்
கண்டிப்பாக கூலி வழங்கப்படும் என நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் :  (புகாரி: 56, 5354, 5668, 6373, 6733, 1296, 2742(முஸ்லிம்: 3076), (திர்மிதீ: 2042), (அபூதாவூத்: 2480), (அஹ்மத்: 1442, 1464).

முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்றால்……..

முஸ்லீம்களின் வீடு, கடைகளில் சாப்பிட நேர்ந்தால் அவர்கள் பிஸ்மில்லாஹ் கூறி முறையாக அறுத்துள்ளார்களா? என்பதைப் பற்றி ஆராயத் தேவையில்லை. இவ்வாறு அறுத்து தான் உண்ண வேண்டும் என்ற சட்டம் தெரியாமல் இருந்தால்.? என்றெல்லாம் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அல்லாஹ்வின் தூதரே! புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எங்களுக்கு இறைச்சி உணவைக் கொண்டு வருகிறார்கள். அதில் அல்லாஹ்வின் பெயர்கூறினார்களா? இல்லையா? என்று எங்களுக்குத் தெரியாது. அப்போது நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். அதற்கு
நபியவர்கள் அதன் மீது நீங்கள் பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடுங்கள் என்றார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிக்ஷா(ரழி)நூல் :  (புகாரி: 2057, 5507, 7398),  (நஸாயீ: 4360)  (அபூதாவூத்: 2446)(இப்னு மாஜா: 3165)

வீணாகும் உணவுப் பண்டங்கள்

உண்ணுங்கள், பருகுங்கள், விரயம் செய்யாதீர்கள்.  (அல்குர்ஆன்: 7:31)

பல வீடுகளில் தமது எண்ணிக்கைக்கு ஏற்ப அளந்து சமைப்பதில்லை. அதனால், ஏராளமான உணவுப்பொருள் வீணாகிறது. விருந்துகளின் போது சீரழியும் உணவுப் பண்டங்கள் கணக்கிலடங்காதவை.அதிக வெரைட்டிகளை சமைக்கும் பழக்கமுள்ளகுடும்பங்களில் ஒவ்வொரு பதார்த்ததிலும் கொஞ்சம் கொஞ்சம் கை வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தும் குப்பைத்
தொட்டிக்கே.அருகில் எத்தனையோ ஏழைகள் கால்வயிற்று கஞ்சிக்குக் கூட வழியின்றி பசியில் உழன்று கொண்டிருக்க அவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையின்றி இவர்களின் ஆடம்பரத்தாலும், ஆணவத்தாலும் வீணடிக்கப்படுவது உணவுப் பொருள் மட்டுமல்ல போற்றப்பட வேண்டிய மனிதநேயமும் தான்.

செல்வ வளம் கொடுக்கப்பட்டோர் தமது வசதிக்கேற்ப உண்டு மகிழ்ந்து வாழ்வை அனுபவிப்பதில் மார்க்கம் தடையேதும் விதிக்கவில்லை. ஆனால் தானும் பயன்படுத்தாமல் பிறரும் பயன்பெற முடியாமல் வீணாக்கப்படுவதை எங்ஙனம் ஏற்க முடியும்? இது ஷைத்தானிய சிந்தனையின் கொடூர வெளிப்பாடு. இவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான். விரயம் செய்வோர் க்ஷைத்தான்களின் உடன்பிறப்புகளாக உள்ளனர். க்ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி
கெட்டவனாக இருக்கிறான்.      (அல்குர்ஆன்: 17:27)

உண்ணும் போது தவறுதலாக கீழே விழுந்து விட்ட உணவைக் கூட அப்படியே விட்டு விடக்கூடாது.என்றும் இயன்றால் சுத்தப்படுத்தியாவது அதைச் சாப்பிட்டு விட வேண்டும் என்றும் நபியவர்கள் நமக்கு கட்டளையிடுகிறார்கள். ஏனெனில் வீணாகும் உணவுப் பண்டங்கள் க்ஷைத்தானை கொழுக்க வைக்கும் தீனியாகும் என்கிறார்கள்.. உங்களில் ஒருவரது ஒரு கவள உணவு கீழே விழுந்து விட்டால், அதை அவர் எடுக்கட்டும் அதில் பட்ட அசுத்தத்தை நீக்கட்டும் (பிறகு) அதைச் சாப்பிடட்டும். க்ஷைத்தானுக்காக அதை விட்டு விட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரழி) நூல் : (முஸ்லிம்: 3793, 3794), (அஹ்மத்: 13869, 14025, 14101, 14410, 14701).

உணவும் இருக்கிறது அதற்காக செலவு செய்ய பணமும் இருக்கிறது என்ற எண்ணம் தான் உணவுப் பொருளை வீணடிப்பதற்கான முக்கிய காரணம் . இன்றிருக்கும் பொருளாதார நிலை இறுதி வரை நீடிக்கும் என யாரும் எதிர் பார்க்க முடியாது.இருக்கும் போது வீணாக்காமல் பயன்படுத்தப் பழகிக் கொண்டால் அப்படி ஒரு மாற்றம் வரும் போது அது நம்மை பெரிய அளவில் பாதிக்காது.

அதிலும் பணம் காசு இருந்து உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் பணக் கட்டுகளை கிழித்தா தின்ன முடியும்?
உளூச் செய்யும் உறுப்புகளை மூன்று தடவைக்கு மேல் கழுவக்கூடாது என்பது நபியின் எச்சரிக்கை. கடலிலே செய்தாலும் இதுவே சட்டம். மூன்று தடவையல்ல முந்நூறு தடவை செய்தாலும் கடல் என்ன, குறையவாப் போகிறது.? பிறகு ஏன் இந்தக் கட்டுப்பாடு? இந்தப் பழக்கம் நாளையும் தொடரக்கூடாது என்பதாகத் தான் இருக்க முடியும், இந்த அடிப்படையை புரிந்து நடந்தால் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை எளிதாகக் கடந்து செல்ல்லாம்.

இதற்கு உதாரணம் சொல்வதாக இருந்தால் ரக்ஷ்யர்களைக் குறிப்பிடலாம். உணவுப் பண்டங்கள் வீணாவதை கனவில் கூட நினைத்துப் பார்த்திராதவர்கள்,சோவியத் ரக்ஷ்யாவின் இரும்புத் திரை கிழிந்து தனித் தனி தேசங்களாக அவை உடைந்து போன பின் அவர்களின்
சமூகப் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள உலகமே ஆர்வம் காட்டியது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் ரக்ஷ்யாவை நோக்கி படையெடுத்தனர். உணவுப் பழக்கத்தைப் பற்றி மட்டும் இரு நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் (களைமநசகைழசளமெைபெ)என்ற கடல் வாழ் உயிரினங்கள் ஆய்வு மையம் நடத்திய ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.

2006 நவம்பரில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் அதன் நிபுணர் குழுவை வியப்பிலாழ்த்திய விக்ஷயம் ஒன்று கூறப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி சாப்பிட்டு முடிந்த பின் அவரது தட்டையை அப்படியே எடுத்துச் சென்று அடுத்த வேளை உணவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அந்த அளவுக்கு சுத்தம். ஒரு பெண் மட்டுமல்ல ஆய்வில் பங்கேற்ற அத்தனைப் பெண்களுமே இப்படித் தான் இருந்துள்ளனர். ஒட்ட வழித்துச் சாப்பிடுவது,ச ிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவது, தேவையான
அளவு மட்டுமே சமைப்பது என்பதை இயல்பாகவே கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து விட்டு ஆண்களைப் பற்றி ஆய்வு செய்யும் திட்டமில்லாமல் இருந்தவர்கள் அவர்களையும் ஆய்வின் வட்டத்திற்குள் கொண்டு வந்தனர். ஆச்சர்யம் என்னவென்றால்
அவர்களிடமும் இந்தப் பழக்கம் எந்த வித்தியாசமுமின்றி இருந்துள்ளது. இந்தப் பழக்கத்திற்கு ஒரு நூறாண்டு கால வரலாற்றுப் பின்ணணி உண்டு. இயல்பில் ரக்ஷ்யர்கள் ஒரு வேளைக்கு பத்து முதல் பதினைந்து வெரைட்டிகள் செய்து டாம்பீகமாக சாப்பிட்டு விட்டு எஞ்சியதை அள்ளிக் கொட்டும்
பழக்கமுடையவர்களாகத்தான் இருந்துள்ளனர். ஸ்டாலினின் ஆட்சியில் தேசத்தின் உணவு உற்பத்தி மற்றும் வினியோகம் அனைத்தையும் அரசுடமையாக்கினார். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் (?) என்ற கம்யூனிச சித்தாந்தத்தின் படி இருப்பதை அனைவருக்கும் சமமாக அளந்து கொடுத்தார்.

வேறு வழியில்லாமல் இதுவே நாளடைவில் அவர்களின் அளந்து சாப்பிடும் நடைமுறைக்கு அடிப்படையாயிற்று. சோவியத் உடைந்து பல்வேறு நாடுகளாக துண்டான போது ரக்ஷ்யப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்தது. எவ்வளவு விவரித்தாலும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒற்றை ரொட்டிக்காக நாள் முழுவதும் வரிசையில் காத்துக் கிடக்கும் அவலம்.

பல வருடங்களுக்கு நீடித்த இந்த சோகம் அவர்களின் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை தலைகீழாக மாற்றிவிட்ட்து. மேலும் இன்றளவும் அங்கே உணவுப் பொருட்களின் விலையும் மிகவும் அதிகம்.எனவே எது தேவையோ அதை மட்டும் வாங்கி துளியும் வீணாக்காத பழக்கத்திற்கு
சொந்தக்காரர்களாகி விட்டனர் ரக்ஷ்யர்களுக்கு ஏற்பட்ட இந்த அவலங்களிலிருந்து நாம்
பாடம் படித்துக் கொள்ள வேண்டும் விரயம் செய்வோர் இறைவனின் நேசத்தை விட்டும் தூரமாகி போகும் துர்பாக்கியசாலிகள் என்கிறது திருக்குர்ஆன்.

அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள். அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத்) கடமையை வழங்கிவிடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்கமாட்டான்   (அல்குர்ஆன்: 6:141)

உண்ணாதிருத்தல் ஆரோக்கியமே

தேவைக்கு அதிகமாக உண்பது எண்ணற்ற பல நோய்களுக்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது.உடல் பருமன்,இதய நோய்,மூளைத் தேய்மானம், போன்ற பல நோய்களிலிருந்து விடுதலை பெற வாரம் இரண்டு நாள் நோன்பு வைப்பது சிறந்த வழிமுறையாகும் என்கின்றனர்
மருத்துவ விஞ்ஞானிகள்.

இதன் மூலம் மூளையின் உயிரணுக்களுக்கு இடையிலான தொடர்புகளும் .செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன என்றும்,புதிய உயிரணுக்களின் உற்பத்தி வேகமெடுக்கின்றன என்றும்,உளைச்சல் மற்றும் பாதிப்புகளைத் தாங்கும் திறன் வளர்கின்றன என்றும் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் பல்கலைகழகத்தில் மூன்று விதமான ஆய்வுகள் நடத்தப்பட்டது.முதலாவது சிலருக்கு எந்த கட்டுப்பாடுமின்றி உணவளிக்கப்பட்டது.அடுத்த சிலருக்கு அவர்களின் வயது,எடை, உயரம் அனைத்தையும் கவனித்து முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான முறையில்
உணவளிக்கப்பட்டது.மூன்றாம் பிரிவினருக்கு விரும்பிய அனைத்தையும் உண்பதற்கு அனுமதியளித்து வாரத்தில் இரண்டு நாட்கள் எதையும் சாப்பிடாமல் பட்டினி போடப்பட்டனர்.

இம்மூன்று பிரிவினரிடத்திலும் நடத்தப்பட்ட ஆய்வில் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கமுடையவர்களின் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போயிருந்தது. முறையாக சாப்பிட்டவர்கள் ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்தனர். விரும்பியதை சாப்பிட்டு வாரம் இருநாள் பட்டினி இருந்தவர்கள் இரண்டாம் பிரிவினரின் ஆரோக்கியத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில் ஆரோக்கியத்தோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நமது ஆரோக்கிய வாழ்வை உத்தரவாதப்படுத்துகிற இந்த காரியத்தை உலகம் இன்றைக்குத் தான் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதே காரியத்தை இறைத் தூதின் வழியாக பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே கற்றுத்தந்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு வைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்:ஆயிக்ஷா (ரர்ி) நூல் :   (நஸாயீ: 2324, 2325, 2326).