11) ஸஅத் பின் முஆத் (ரலி)
1) இவர் மக்காவுக்கு உம்ராச் நிறைவேற்றச் சென்ற போது அறியாமை கால நண்பர்களில் ஒருவரான உமய்யா பின் கலஃபிடம் தங்கினார்கள். (புகாரி: 3632)
2) உஹதுப் போரின் போது அனஸ் பின் நள்ர் (ர-லி) அவர்கள் இவரைப் பார்த்து நான் சுவனத்தின் வாடையை நுகர்கிறேன் என்றார்கள். (புகாரி: 2805)
3) அல்லாஹ்வின் மீதாணையாக! கஃபாவை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று அபூ ஜஹ்லுக்கு எச்சரிக்கை விடுத்தவர். (புகாரி: 3632)
4) மக்காவில் இவர் கஅபாவை வலம் வந்து கொண்டிருப்பதைக் கண்ட அபூ ஜஹ்ல் இவருக்கு எச்சரிக்கை விடுத்தான். (புகாரி: 3632)
5) பனூ குரைழாக்கள் இவரின் தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக நபியவர்களுக்கு கூறினார்கள். (புகாரி: 3043, 3804)
6) அகழ்போரின் போது இவரது நாடி நரம்பு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. (புகாரி: 463)
7) இவரை நபியவர்கள் பக்கத்தில் இருந்து நலம் விசாரிப்பதற்காக மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் கூடாரம் ஒன்றை அமைக்கும் படி கட்டளையிட்டார்கள். (புகாரி: 463)
8) பனூ கிஃபார் கோத்திரத்தார் இவரின் உடலில் இருந்து வழிந்தோடிய இரத்தத்தினால் திடுக்குற்றனர். (புகாரி: 436)
9) ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றி அவதூரில் சம்பந்தப்பட்ட உபை பின் சலூலை தண்டிக்க இவர் நபியவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். (புகாரி: 4141, 2661)
10) இவருக்கு சுவனத்தில் கிடைக்கும் கைக்குட்டை மிகவும் தரமானவையாக இருக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள்.