11) நன்மையை ஏவி தீமையை தடுப்பார்
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் (இனி தலைதூக்கவி ருக்கும்) ஃபித்னா (சோதனை/குழப்பம்) பற்றி அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன்.
உமர் (ரலி) அவர்கள், “(அதைக்கூறுங்கள்)நீங்கள்தான் “நபி (ஸல்) அவர்களிடம்’ அல்லது “(நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றின் மீது’ துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள்” என்று சொன்னார்கள்.
நான், “ஒரு மனிதன் தன் குடும்பத்தார், தனது சொத்து, தனது பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (இறைவழிபாட்டிலிருந்து தனது கவனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை (புரியும்படி கட்டளையிட்டு)-தீமை(யிலிருந்து தடுத்தல்) ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும்” எனளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகனச் சொன்னேன்.
நூல் : (புகாரி: 525)