11) கேலி செய்தல் & புறம்பேசுதல்
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்யவேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப் பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
புறம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் அறிந்தவர்கள் என்று (நபித் தோழர்கள்) கூறினர். உன் சகோதரன் பற்றி அவன் வெறுப்பதை நீர் கூறுவதாகும். நான் சொல்வது என் சகோதரனிடம் இருந்தால்…? என்று கேட்க்கப்பட்டது. நீர் கூறியது அவனிடம் இருந்தால் நீ புறம் பேசிவிட்டாய். அவனிடம் (அந்த குறை) இல்லையென்றால் நீ அவதூறு கூறிவிட்டாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : (முஸ்லிம்: 4690)