11) அன்றாட வாழ்வில் அரங்கேறும் பித்அத்கள்
உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள். அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள். அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள். குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன்: 07:03) ➚
இஸ்லாம் முஸ்லிம்களுக்கான ஒட்டு மொத்த வாழ்க்கைத் திட்டம். மார்க்க அடிப்படையில் நாம் செய்ய வேண்டிய ஒவ்வொரு காரியங்களைப் பற்றியும் இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது. இறை வேத்திலும், இறைத்தூதர் போதத்திலும் விளக்கப்படாத சட்டங்களே இல்லை எனலாம். அதை உள்ளது உள்ளபடி பின்பற்றி விட்டால் உலகோருக்கு எவ்வித பாதகமும் இல்லை. இறைச் சட்டத்தில் ஒன்றை நீக்கவோ புதிதாக ஒன்றைச் சேர்க்கவோ எவருக்கும் அதிகாரமில்லை.
உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள். அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள். குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 07:03) ➚
இஸ்லாத்தின் இத்தகைய தூய வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாக மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை தங்களின் அன்றாட வாழ்வில் சிலர் அரங்கேற்றி தங்களின் வணக்கங்களை பாழ்படுத்தி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.
»குழந்தை பிறந்தவுடன் ஒரு காதில் பாங்கு மற்றொரு காதில் இகாமத் கூறுதல்.
»குழந்தை பிறந்து ஏழாவது நாள் நீங்கலாக மற்ற தினங்களில் கொடுக்கப்படும் அகீகாக்கள்.
»குழந்தையின் முதல் முடியைக் களையும் போது முடிக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்தல்.
»குழந்தைகளுக்கு கத்னா செய்யும் போது செய்யப்படும் பித்அத்கள்.
»குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு வைத்தல். »புதுவீட்டிற்கு குடிபோகும் போது அங்கு ஓதப்படுபவைகள்.
»நோயாளிகள் நலம் பெற தண்ணீரில் சிலவற்றை ஓதி ஊதுதல் இன்னும் இது போன்ற மார்க்கத்தில் இல்லாதவற்றை நடைமுறைப்படுத்துதல்.
»புதிய கடை திறப்பின் போது ஓதப்படும் பாத்திஹாக்கள்.
» கடைகளில் பரக்கத் வேண்டி வியாழன் இரவுகளில் ஓதப்படும் பாத்திஹாக்கள்.
»கடைகளில் ஆண்டு தோறும் புதுக்கணக்கு துவங்கும் போது ஓதப்படும் பாத்திஹாக்கள்.
»வெளிநாட்டு பயணத்தின் போது ஹஜ்ரத்தை அழைத்து ஓதப்படும் பாத்திஹாக்கள்.
»ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது மக்களை திரட்டி ஓதப்படும் பாத்திஹாக்கள்.
»வீட்டில் பாம்பு நுழைந்தால் மூஸா நபி பாத்திஹா ஓதுதல்.
»மக்தப் மதரஸாக்களில் பயிலும் குழந்தைகளுக்கு போதிக்கப்படும் ஐந்து கலிமாக்களில் உள்ள பித்அத்கள்.
»நபிகளாரின் பிறந்த தினம் எனக்கூறி மீலாது விழா என்ற பெயரில் நடைபெறும் காரியங்கள்.
»மிஃராஜ் இரவு என்ற பெயரில் செய்யப்படும் வணக்கங்கள் அனைத்தும்.
»பராஅத் இரவு என்ற பெயரில் செய்யப்படும் வணக்கங்கள் அனைத்தும்.
இன்னும் இது போன்ற மார்க்கத்தில் இல்லாத பல பித்அத்களை மக்கள் நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: (புகாரி: 2697)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்கத்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : (நஸாயி: 1560)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையாக(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி) நூல்: (அஹ்மத்: 16519)
நபி (ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் மக்கள் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுக்கப்படும் என்று எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.
தவறான புரிதலின் அடிப்படையிலும் இவ்வாறு செய்வதற்கு அதிக நன்மை கிடைக்கும் என்று எண்ணியும் தான் மார்க்கத்தில் இல்லாத பல விதமான பித்அத்களை மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்தி வருகின்றனர். இது தவறாகும். இதை விட்டும் மக்கள் விலகிட வேண்டும். எனவே மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக