11) புலம்பலும் சந்தோஷமும்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

11) புலம்பலும் சந்தோஷமும்

தனக்குக் கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறிக் கொண்டிருப்பார். தனக்குக் கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனே தீயவர்களின் புலம்பலும் நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகிறது.

இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

إِذَا وُضِعَتِ الجِنَازَةُ، فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا، أَيْنَ يَذْهَبُونَ بِهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الإِنْسَانُ لَصَعِقَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்; என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும்;

அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், “கைசேதமே! என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மணிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.

அறிவிப்பவர்:அபூசயீத் அல்குத்ரீ (ரலி

(புகாரி: 1380)