10) மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்

நூல்கள்: ஷியாக்கள் ஓர் ஆய்வு

10) மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் இழிவுபடுத்துகின்ற யூதர்கள், மலக்குகளையும் இழிவுபடுத்தத் தவறவில்லை. இறைத் தூதர்களுக்கு மத்தியில் ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்தி வேறுபாடு கற்பிப்பது போன்று மலக்குகளான இறைத் தூதர்களுக்கு மத்தியிலும் வேறுபாடு கற்பிக்கின்றது யூத இனம்! இதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்கüடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள். பிறகு,

  1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
  2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது?
  3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “ஜிப்ரீலா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று பதிலüக்க, “வானவர்கüலேயே ஜிப்ரீல் தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

 

அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்” எனும் இந்த (அல்குர்ஆன்: 2:97) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்…. (சுருக்கம்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 4480)

அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 2:98)

இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று தெளிவுபடுத்தி, யார் ஜிப்ரீலுக்கு எதிரியோ அவர் தனக்கும் எதிரி என்று அல்லாஹ் பிரகடனப் படுத்துகின்றான். மலக்குகளை மட்டம் தட்டும் இந்த வழக்கம் யூதர்களின் ஈனப் புத்தியும் இழிவான பண்புமாகும்.

 

நூலைப் போல சேலை

தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை என்று சொல்வது போன்று யூத மதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியா மதமும் அந்த வேலையை அப்படியே செய்கின்றது.

“காதில் (இறைச் செய்தி) அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். கனவில் செய்தி அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். தட்டையில் விழும் மணியோசை போல் இறை அறிவிப்பு ஓசையைச் செவியுறுவோரும் நம்மில் உள்ளனர். ஜிப்ரயீல், மீகாயீலை விடப் பிரம்மாண்டமான தோற்றமுள்ள மலக்குகள் வரக் கூடியவர்களும் நம்மிடம் இருக்கிறார்கள்” என அபூ அப்துல்லாஹ் கூற நான் செவியுற்றேன்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஜிப்ரயீலை விட, மீகாயீலை விட சிறந்த மலக்குகள் இவர்களிடம் வருகிறார்களாம். இந்த ஷியாக்களுக்கு என்ன திமிர் பாருங்கள்.

ஜிப்ரயீல் (அலை) அவர்களை அல்லாஹ் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுகின்றான். அவர்களுக்கு மாபெரும் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் அளித்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.

இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும். வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர். வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

(அல்குர்ஆன்: 81:19-21)

 

அஷ்ஷுஃரா அத்தியாயத்தின் 193வது வசனத்தில் நம்பிக்கைக்குரிய உயிர் என்று நற்சான்று வழங்குகின்றான்.

அல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்த போது, அவர்களுக்குத் தன்னுடைய அற்புதங்களைக் காட்டினான். அந்த வரிசையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கும் காட்சியை வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றான்.

அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது.

தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

(அல்குர்ஆன்: 53:5-14)

 

வானவர்களில் அவருக்கு மேலானவர் இல்லை என்பதை இந்த வசனங்களும் 26:192, 2:253, 5:110, 16:102 ஆகிய வசனங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால் ஷியாக்களோ ஜிப்ரீலை விட சிறந்த மலக்கும் தங்களிடம் வருவதாகக் கூறுகின்றனர். இங்கு ஜிப்ரயீல் (அலை) அவர்களை மட்டும் இவர்கள் மட்டம் தட்டவில்லை. நபி (ஸல்) அவர்களையும் சேர்த்தே மட்டம் தட்டுகின்றனர் இந்த ஷியா ஷைத்தான்கள்.

முஹம்மதுக்கு வந்தவர் ஜிப்ரயீல்! அதாவது அவரது தரத்திற்கு ஜிப்ரயீல் வந்திருக்கிறார். எங்கள் இமாமுக்கு வந்தவர் ஜிப்ரயீலை விட, மீகாயீலை விட உயர்ந்தவர். அதாவது எங்கள் இமாமின் தரத்திற்குத் தக்க சிறந்த மலக்கு வந்திருக்கிறார் என்று கூற வருகின்றனர். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் தரத்தையும் காலில் போட்டு மிதிக்கின்றனர்.

ஷியாக்களின் இமாம்கள் நபிமார்களை விட உயர்ந்தவர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை! அதைப் பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் இடம் பெறவுள்ளது. இப்போது ஜிப்ரயீல் தொடர்பாக இவர்கள் கொண்டிருக்கும் மட்டரகமான சிந்தனையை மட்டும் பார்ப்போம்.

ஜிப்ரயீலை யாருக்குப் பிடிக்காது? யூதர்களுக்குப் பிடிக்காது. அதனால் யூதர்களின் கள்ளப்பிள்ளையான ஷியாக்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே தான் ஜிப்ரயீலை விட சிறந்த மலக்கு வருகிறார் என்ற பொய் தத்துவத்தை உதிர்க்கின்றனர்.

இந்தச் சிந்தனையைத் தான் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்ற பெயர் தாங்கிகளும் கொண்டிருக்கிறார்கள். ஷியாக்களின் கொள்கையைப் பிரதிபலித்து, ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள்.

 

மண் கேட்ட படலம்

ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களை பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம்.

அடுத்து மீகாயில் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராஃபீலை அனுப்பிய போது, அவர்களும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

இப்படியொரு கதை சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களால் பல மேடைகளில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் வெளியிடும் நூற்களிலும் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 3:83)

 

இந்த வசனத்திற்கும் இது போன்ற ஏராளமான வசனங்களுக்கும் மாற்றமாக, பூமி அல்லாஹ்வின் உத்தரவுக்குக் கட்டுப்படவில்லை என இந்தக் கதையில் கூறப்படுகின்றது. இது ஒரு புறமிருக்க, மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராபீல் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா?

மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள்; மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 16:49-50)

 

“‘அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 21:26-27)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 66:6)

சிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்? இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று  தெளிவாக்கும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இந்தக் கதை முரண்படுகிறது.

 

மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது. அந்தப் பணியைச் செய்து  முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர்.

இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும், அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.

யூதர்களைப் போன்று ஒரு மலக்கை உயர்த்தி, மற்றொரு மலக்கை மட்டம் தட்டுகிறார்கள். மண்ணைப் பிடுங்கி வருவதற்குக் கூட இவருக்குத் தகுதியில்லை என்று கூறி ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள். இந்தக் கதைகளை ஆதரிக்கும் மவ்லவிகள் தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வது தான் கேலிக் கூத்து.

இத்துடன் இவர்கள் நிற்கவில்லை. ஜிப்ரயீல் (அலை) அவர்களை ஒரு பாவியாகவும் நினைத்துப் பாடலும் பாடுகிறார்கள்.

 

என்னை அச்சுறுத்தும் அளவுக்கு அநீதி இழைக்கப் பட்டால், “தலைவர்களுக்கெல்லாம் தலைவரே! என் ஊன்றுகோலே!’ என்று நான் உங்களை அழைப்பேன். என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள். என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள். என்றென்றும் நிரந்தரமான திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அருளால் எனது குறைகளைக் காலா காலம் மறைத்து விடுங்கள். (சுப்ஹான மவ்லிது)

இவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பாடியதாக சுப்ஹான மவ்லிதில் கூறபட்டுள்ளது. மலக்குகளின் தலைவர், வலிமை மிக்கவர் என்று அல்லாஹ்வால் புகழ்ந்து பாராட்டப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களையே அச்சுறுத்தி அநீதி இழைத்திட மற்றவர்களால் முடியும் என்று இந்த மவ்லிது வரிகள் கூறுகின்றன.

மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைக்கக் கூடியவர் என்றும் குறைகள் உடையவர் என்றும் இந்த வரிகள் கூறுகின்றன. ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைப்பார்கள் என்று கூறினால் அவர்கள் கொண்டு வந்த வஹீயிலும் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி விடாதா?
இந்தத் தவறுகளையெல்லாம் விட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடம் பாதுகாப்பு தேடுவதாகக் கூறுவது தான் இதில் கொடுமை!

மனிதர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் கூட நபி (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கூறவில்லை. தன்னிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

 

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன்: 2:186)

அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் மூலமாக இந்த வசனத்தில் மக்களுக்கு அறிவிக்கச் சொல்கின்றான். மனிதர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்ட யாரிடமும் உதவி தேடக் கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் எனும் போது, இந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உதவி தேட வேண்டிய அவசியம் என்ன?

ஆக, ஜிப்ரீல் (அலை) அவர்களை பலவீனராகவும், தவறிழைக்கக் கூடியவராகவும் சித்தரித்து, அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததாகக் காட்டுவது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. மவ்லிதை இயற்றியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மீதுள்ள வெறுப்பு இங்கு அம்பலமாகின்றது.

 

ஜிப்ரீல் (அலை) அவர்களை முஃமின்கள் யாரும் வெறுக்க முடியாது. அப்படி வெறுப்பவர் உண்மை முஃமினாக இருக்க முடியாது. யூதர்கள் தான் ஜிப்ரீல் (அலை) அவர்களை வெறுப்பார்கள் என்பதை மேலே நாம் இடம் பெறச் செய்துள்ள(புகாரி: 4480)வது ஹதீஸில் காணலாம். இதனால் தான் ஜிப்ரீலின் எதிரி தனக்கும் எதிரி என்று அல்லாஹ் தன் திருமறையில் பிரகடனம் செய்கின்றான்.

ஆக இந்த அளவுக்கு அல்லாஹ்வினால் அந்தஸ்தும் மரியாதையும் வழங்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களை இந்த மவ்லிதுகள் எவ்வளவு மட்டரகமாக நடத்துகின்றன என்பதைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையில் உருவான கைச்சரக்கு தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது சொல்லுங்கள்! சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த மவ்லவிகள் யார்? இவர்களும் கடைந்தெடுத்த பக்கா ஷியாக்கள் தான். பகிரங்க பரேலவிகள், நரகத்திற்கு அழைத்துச் செல்லும் முகவர்களான இவர்களைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தியுங்கள்.