10) உபை பின் கஅப் (ரலி)

நூல்கள்: நபித்தோழரை அறிந்து கொள்வோம்

1. நபி (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரிடம் திருக்குர்ஆனை ஓதிக்காட்டுமாறு கேட்டார்கள். (முஸ்லிம்: 1463)

2. இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என நபி (ஸல்) அவர்கள் இவரிடம் கேட்டார்கள். (முஸ்லிம்: 1476)

3. வீட்டுக்குள் நுழைவதற்கு மூன்று முறை அனுமதி கேட்டு நபி வழியை நடைமுறைப்படுத்தியவர். (முஸ்லிம்: 4355)

4. அபூதல்ஹா (ரலி) அவர்கள் பைருஹா தோட்டத்தின் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார்கள். (புகாரி: 2758)

5. அகழ்ப்போரின் போது இவர்களின் நாடி நரம்பில் அம்பு பாய்ந்துவிட்டது. (முஸ்லிம்: 4437)

6. நபி (ஸல்) அவர்களுடன் இப்னு ஸய்யாத் என்பவனை இவர்கள் சந்தித்தார்கள். (புகாரி: 1354)

7. இவர்கள் மது அருந்திய கொண்டிருந்த நேரத்தில்தான் மது தடைசெய்யப்பட்டது. (முஸ்லிம்: 4012)

8. கண்டடுக்கப்பட்ட பொருளுக்கு என்ன சட்டம் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவருக்கு கற்றுக் கொடுத்தார்கள். (புகாரி: 2426)

9. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பர்தாவின் சட்டத்தைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டவர். (முஸ்லிம்: 2802)

10. உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் இரவுத் தொழுகைக்கு இவரின் தலைமையில் கீழ் மக்கள் தொழும்படி ஏற்பாடு செய்தார்கள். (புகாரி: 2010)

உபை பின் கஅப் (ரலி) அவர்கள்!