10) உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகும்

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையாகி விடும். விந்து வெளிப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்குறியும், பெண்குறியும் சந்தித்துவிட்டாலே இருவரும் குளிப்பது கடமை.

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!)

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),

(புகாரி: 291)