10) இப்ராஹீம் (அலை)
மிகச் சிறந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இவர்களின் கொள்கையை பின்பற்றுமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கட்டளையிடுகிறான். இப்ராஹீம் (அலை) அவர்களை தனது தோழனாக எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறான். தொழுகையில் நபி (ஸல்) அவர்களுக்கு துஆ செய்யும் போது இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அருள் புரிந்தது போல் அருள்புரிவாயாக எனக் கேட்கிறோம்.
இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையான ஹஜ்ஜின் பெரும்பான்மையான வ ண க் கங்க ளின் பின்னணி இப்ராஹீம் (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஏராளமான சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கூட மறைவான விசயங்கள் தெரிந்திருக்கவில்லை என கீழ்க்காணும் வசனம் விளக்குகிறது.
இப்ராஹீமின் கண்ணியமிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் பிரவேசித்தபோது ஸலாம் என்று கூறினார்கள் (அதற்கவர் உங்களுக்கு ஸலாம் என்று கூறினார். இவர்கள் (நமக்கு) அறிமுக மில்லா சமூகத்தவராக (இருக்கின்றார்களேளன்று எண்ணிக் கொண்டார்) உடன் அவர்தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று கொழுத்த காளைக் (கன்றைப் பொறித்து) கொண்டு வந்தார், அதை அவர்களிடம் கொண்டு வந்து நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கேட்டார். (அவர்கள் அதை சாப்பிடாததால்) அவருக்கு இவர்களைப் பற்றி (உள்ளுர ஓரி) அச்சம் ஏற்பட்டது. (இதனையறிந்த) அவர்கள் பயப்படாதீர் எனக் கூறினர். அவருக்கு அறிவுமிக்க புதல்வர் (பிறப்பார்) என்று”நன்மாராயம் கூறினர். (அல்குர் ஆன் 51:24-28)
தன் வீட்டிற்கு வந்துள்ள விருந்தாளிகளை இப்ராஹீம் (அலை) அவர்கள் (புதுமுகமாக) அறிமுகமில்லா சமூகத்தவராக இருக்கிறார்கள் என்று கூறியதன் மூலம் இவர்கள் யார் என்று தனக்கு தெரியவில்லை என்பதை தெரிவிக்கிறார்கள். அடுத்து மாமிசத்தை கொடுத்து அவர்கள் சாப்பிடாததை பார்த்க பயப்படவும் செய்கிறார்கள்.
மறைவான விசயம் (இவர்கள் வானவர்கள் என்ற விசயம்) தெரிந்திருந்தால் பயந்திருக்கமாட்டார்கள்மகிழ்ச்சி தான் அடைந்திருப்பார்கள். எனவே அறிமுகமில்லா சமூ கத்தவர்கள் என்று கூறியதும் பயந்ததும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியவில்லை என்பதை தெளிவாக விளங்கலாம்.