09) முஆவியா பின் அபூ சுப்யான் (ரலி)
1.அல்லாஹ் யாருக்கு நல்லவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான் என்ற நபி மொழியை அறிவித்தவர். (புகாரி: 71)
2 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் நபியவர்கள் தொழுது முடித்த பின் ஓதும் துஆவை இவர்களுக்கு எழுதி அனுப்பினார்கள். (புகாரி: 6330)
3 ஒட்டு முடியின் விபரீதத்தைப் பற்றி மதீனா வாழ் மக்களுக்கு அறிவுறுத்தியவர்.
4 உம்மு ஹராம் பின்தி மில்ஹான் (ரலி) அவர்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் கடல் போர் வீராங்கனையாக கலந்து கொண்டார்கள். (புகாரி: 2788)
5 இவருடைய தந்தை நபி (ஸல்) அவர்களிடம் தம் மகனை தங்களின் எழுத்தாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (முஸ்லிம்: 4914)
6 நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் சகோதரர் இவர். (முஸ்லிம்: 4914)
7 பாங்கு சொல்லக்கூடியவருக்குரிய சிறப்பைப் பற்றி அறிவித்த நபித்தோழர். (முஸ்லிம்: 631)
8 நபியவர்களின் செய்திகளை வரையரையின்றி அறிவிப்பதைப் எச்சரித்தவர்கள். (முஸ்லிம்: 1876)
9 நபிகளார் காலத்தில் ஏழையாக இருந்தவர். (முஸ்லிம்: 2965)
10 உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றபோது இணைவைப்பாளராக இருந்த அவர்களின் மனைவியரில் ஒருவரை தலாக் விட்டார்கள். அவர்களிள் ஒருவரை இவர் திருமணம் முடித்திருந்தார். (புகாரி: 2731)