09) பாவமன்னிப்பின் வாசல் அடைக்கப்படும்
மலக்குகள் உயிரை கைப்பற்றுவதற்காக வருவதற்கு முன்பே தாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் கையேந்தினால் அந்த பிரர்த்தனைக்கு மதிப்பு இருக்காது. எனவே ஒவ்வொருவரும் மரண வேளையை அடைவதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.
அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு, அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவளாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்க் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தவருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
(அல்குர் ஆன்: 4:17,18)
(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர் பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கை யோடு நல்லறங்கள் செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன்தராது. “நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறுவீராக!
ஃபிர்ஆவ்ன் என்ற கொடிய அரசன் மரணிக்கும் தருவாயில் ஈமான் கொண்டு விட்டதாகக் கூறினான். மரணம் சம்பவிக்கும் போது இவ்வாறு அவன் கூறுவதால் அல்லாஹ் அவனுடைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால் அவன் மண்ணறையிலும், மறுமையிலும் தண்டிக்கப்படுகிறான்.
இஸ்ராயீலின் மக்களை கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் வேர்களைப் பின்தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்” என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய் (என்று கூறினோம்.)
குற்றம் புரிபவர்கள் மரணிப்பதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமைநாளில் தாரால் ஆன (கீல்) நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
அறிவிப்பவர்:அபூமாலிக் கஅப் பின் ஆஸிம்