09) நூஹ் (அலை)
950 வருடங்கள் வாழ்ந்து மக்களின் பல இன்னல்களுக்கு இலக்கானவர் என திருக்குர்ஆன் கூறும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரிந்திருந்ததா என்பதை கீழ்க்காணும் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.நூஹ் (அலை) தன் இறைவனிடம் என் இறைவனே! நிச்சயமாக என்மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது.
நீதி வழங்குவோர்களி. லல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய் எனக்கூறினார். அதற்கு இறைவன் கூறினான்; நூஹே உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன் ,நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லா செயல்களையே செய்து கொண்டிருந்தேன். ஆகவே நீர் அறியாத விசயத்தைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்.
நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உக்க்கு உபதேசம் செய்கிறேன். என் இறைவா! எனக்கு எதைப்பற்றிஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் நீ என்னை மன்னித்து அருள் புரியவில்லை. யானால் நான் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன் என்று கூறினார். (அல்குர்ஆன்: 1:45-47) ➚
இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் ‘நீர் அறியாத விசயத்தைப் பற்றி என்னிடம் கேட்கவேண்டாம்” என்ற வாசகமும், நூஹ் (அலை) கூறும் ‘எனக்கு எதைப்பற்றி ஞானம் இல்லையோ’ என்ற வாசகமும் நூஹ் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக் கின்றன என்று நான் உங்களிடம் கூறமாட்டேன்.
மறைவான விசயத்தை நான் அறிபவனும் அல்லன் நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் கூறமாட்டேன். (அல்குர்ஆன்: 11:31) ➚ நூஹ் (அலை) அவர்களை, தனக்கு மறைவனே விசயம் தெரியாது என்று , அல்லாஹ் கூறச் செய்ததன் மூலம் ஐயத்திற்கிடமின்றி நூஹ் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பது தெளிவாகின்றது.