09) ஐவேளைத் தொழுகை கடமையானது
கேள்வி ; விண்ணுலகப் பயணத்தில் ஏழாம் வானத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தபின்னர் நபிகளார் எங்கு சென்றார்கள்?
பதில் : வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான ஸித்தரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு சென்றார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : அதன் பழங்களும் எவ்வாறு இருந்தன?
பதில் : (யமன் நாட்டில் உள்ள) ஹஜர் எனுமிடத்தில் (உற்பத்தியாகும் மண்) கூஜாக்களைப் போன்றிருந்தது. (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : அதன் இலைகள் எவ்வாறு இருந்தன?
பதில் : யானைகளின் காதுகள் போன்றிருந்தது. (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : அதன் வேர்பகுதியில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன?
பதில் : மொத்தம் நான்கு ஆறுகள், (ஆதாரம் :(புகாரீ: 3887)
பதில் : அவைகளின் பெயர்கள் என்ன?
பதில் : ஸைஹான், ஜைஹான், புராத், நைல் (ஆதாரம் :(முஸ்லிம்: 5073),(புகாரீ: 3887)
கேள்வி : ஸித்ரத்துல் முன்தாஹாவில் வேறு எந்த காட்சியைப் பார்த்தார்கள்?
பதில் : ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களின் உண்மையான தோற்றத்தில் பார்த்தார்கள். (ஆதாரம் : அல்குர்ஆன் 53;13,14,(முஸ்லிம்: 287)
கேள்வி : அவர்களின் உண்மையான தோற்றம் எவ்வாறு இருந்தது?
பதில் : அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருக்கும். (ஆதாரம் :(முஸ்லிம்: 287)
கேள்வி : ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு எத்தனை இறக்கைள் இருந்தன?
பதில் : 600 இறக்கைகள். (ஆதாரம் :(புகாரீ: 4857),(அஹ்மத்: 4164)
கேள்வி : பின்னர் எந்த இடத்திற்கு சென்றார்கள்?
பதில் : பைத்துல் மஃமூர் எனும் இடத்திற்கு சென்றார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : பைத்துல் மஃமூரின் சிறப்பு என்ன?
பதில் : பைத்துல் மஃமூர் எனுமிடத்தில் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் வானவர்கள் தொழுவார்கள். ஒரு தடவை வந்தவர்கள் மறுதடவை வரமாட்டார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3207)
கேள்வி : பின்னர் நபிகளாருக்கு என்ன வழங்கப்பட்டது?
பதில் : பாலும் தேனும் மதுவும் வழங்கப்பட்டது. (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எதை தேர்ந்தெடுத்தார்கள்?
பதில் : பாலைத் தேர்ந்தெடுத்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : மதுவைத் தேர்வு செய்யாமல் பாலைத் தேர்வுசெய்ததால் இது தான் நீங்களும் உங்கள் சமூதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும் என்று கூறினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : பின்னர் நடந்தது என்ன?
பதில் ; ஒரு நாளைக்கு 50 நேரங்கள் தொழவேண்டுமென கட்டளையிடப்பட்டது.
கேள்வி : இந்த தொழுகைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் விசாரித்த நபி யார்?
பதில் : மூஸா (அலை) அவர்கள் (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : 50 நேரத்தொழுகை கடமையாக்கப்பட்டதை தெரிந்த மூஸா (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : உங்கள் சமூதாயத்தார் ஒரு நாளைக்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன், பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குப்பட்டுள்ளேன். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமூதாயத்தினருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி ; இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
பதில் : நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று முறையிட்டு ஐம்பதிலிருந்து பத்தைக் குறைத்து வந்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : இதை அறிந்த மூஸா (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : முன் போலவே இன்னும் குறைத்து வரும்படி கூறினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : இறுதியாக எத்தனை நேரங்களாக குறைக்கப்பட்டது?
பதில் : ஐந்தாக குறைக்கப்பட்டது. (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : இதை அறிந்த மூஸா (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில : ஒவ்வொரு நாளும் ஐந்து நேரத் தொழுகைகளை உங்கள் சமூதாயத்தினர் தாங்க மாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப் பட்டுவிட்டுள்ளேன். நான் பனூஇஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்து தரும்படி கேளுங்கள் என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : இதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : நான் (கடமையான தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டுவிட்டேன். ஆகவே நான் திருப்தியடைகிறேன். (இந்த எண்ணிக்கை) ஒப்புக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : பின்னர் என்ன கூறப்பட்டது?
பதில் : நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கி விட்டேன் என்று (அசரீரிக்) குரல் ஒலித்தது. (ஆதாரம் :(புகாரீ: 3887)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் இந்த பயணத்தை குறைஷிகள் ஏற்றுக் கொண்டார்களா?
பதில் : ஏற்றுக் கொள்ளவில்லை. (ஆதாரம் :(புகாரீ: 3886)
கேள்வி : எவ்வாறு மறுத்தார்கள்?
பதில் : அபூஜஹ்ல் நபிகளாரிடம் வந்து இன்று ஏதேனும் செய்தி உண்டா? என்று கிண்டலாக கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் இன்றிரவு இங்கிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்று வந்தேன் என்றார்கள். (ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : அதற்கு அபூஜஹ்ல் என்ன கூறினான்?
பதில் : இரவில் சென்று விட்டு இன்று காலை எங்களிடம் வந்துவிட்டீர் என்று (கிண்டலாக) கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறினார்கள். (ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : பின்னர் அபூஜஹ்ல் என்ன கூறினான்?
பதில் : என்னிடம் சொன்னதை உன் கூட்டாத்தாரிடம் நீர் சொல்வாயா என்று கேட்டான். நபி (ஸல்) அவர்களும் சரி என்றார்கள். (ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : அபூஜஹ்ல் யாரை அழைத்தான்?
பதில் : பனூ கஅப் பின் லுவை கூட்டத்தாரை அழைத்தான்.பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் நீர் என்னிடம் கூறியதை இவர்களிடம் கூறும் என்றான்.(ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : நபிகளார் அந்த செய்தியை கூறியபோது அக்கூட்டத்தார் என்ன கூறினார்கள்?
பதில் : (வெகுதூரத்தில் உள்ள) பைத்துல் மக்திஸ் பள்ளிக்கு இரவில் சென்று விட்டு கலையில் எங்களிடம் வந்து வீட்டீரா? என்று கிண்டலாக கேட்டனர். (ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : அவர்களின் கிண்டல் எவ்வாறு அமைந்திருந்தது?
பதில் : சிலர் கைத்தட்டினர், சிலர் தலையில் தங்கள் கைகளை வைத்துக் கொண்டனர். (ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : வேறு என்ன கேள்விகளை அவர்கள் கேட்டார்கள்?
பதில் : அவர்களில் சிலர், அந்த ஆலயத்திற்கு சென்று வந்திருந்தால் அதன் அடையாளத்தைக் கூறும் என்றனர். (ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : இந்த கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள்?
பதில் : கஅபத்துல்லாவில் ஹிஜர் எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் நிற்க அல்லாஹ் தஆலா பைத்துல் மக்திஸ் ஆலயத்தை எடுத்துக் காட்டினான். அதைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் அதன் அடையாளத்தை கூறினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 4710),(அஹ்மத்: 2680)
கேள்வி : நபிகளாரின் பைத்துல் மக்திஸ் பற்றி வர்ணணைப்பற்றி அம்மக்கள் என்ன கூறினார்கள்?
பதில் : நபிகளாரின் இந்த வர்ணனை சரியானதே என்று கூறினார்கள். (ஆதாரம் :(அஹ்மத்: 2680)
கேள்வி : விண்ணுலுகப் பயணம் நடந்தது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனரா?
பதில் : ஈமான் கொண்டவர்களில் சிலர் இதை ஏற்றுக் கொள்ளாமல் காபிர்களாக மாறினர். (ஆதாரம் :(ஹாகிம்: 4488)
கேள்வி : பைத்துல் மக்திஸ் பயணம் பற்றி மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியபோது அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் ; நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ஆம் என்றனர். அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால் அவர்கள் உண்மையே கூறியுள்ளார்கள் என்றார்கள். (ஆதாரம் :(ஹாகிம்: 4488)
கேள்வி : இதற்கு மக்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் : இரவில் பைத்துல் மக்திஸிக்கு சென்று விடிவதற்குள் இங்கு வந்ததை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டனர். (ஆதாரம் :(ஹாகிம்: 4488)
கேள்வி : இதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் : இதைவிட தூரமான செய்தியைக் கூறியிருந்தாலும் அதையும் நான் உண்மைப்படுத்துவேன் என்று கூறினாôர்கள். (ஆதாரம் :(ஹாகிம்: 4488)
கேள்வி : இவ்வாறு அபூபக்ர் (ரலி) கூறியதால் கிடைத்த பட்டம் என்ன?
பதில் : ஸித்தீக் (உண்மையாளர்) என்ற அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம் :(ஹாகிம்: 4488)