09) உஹுத்‌ யுத்தம்‌

நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

பத்ரு யுத்தத்தில்‌ மிகப்‌ பெரும்‌ பாதிப்பிற்கு உள்‌ளாகியிருந்த குரைஷிகள் முஸ்லிம்களை எப்படியாவது பழிக்குப் பழிவாங்க வேண்டும்‌ என்று வெறிகொண்டிருந்தனர்‌. முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய போரை  நடத்த வேண்டும்‌ என்று ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில்‌ இறங்கினர்‌.

உஹதுப்‌ போர்‌ தொடர்பாக நபி கண்ட கனவு

உஹதுப்‌ போருக்கு முன்பாக நபியவர்கள்‌ ஒரு கனவினைக்‌ கண்டார்கள்‌. அதில்‌ வாள்‌ ஒன்றை அசைக்க அதன்‌ முனை உடைவது போன்றும்‌, மற்றொரு முறை அசைக்கும்‌ போது அது முன்பிருந்தபடியே ஒட்டிக்‌ கொள்வது போன்றும்‌ கண்டார்கள்‌. மேலும்‌ சில காளை மாடுகள்‌ அறுக்கப்படுவது போன்றும்‌ கனவில்‌ கண்டார்கள்‌. இது உஹது போர்‌ தொடர்பான கனவுதான்‌ என்று நபியவர்கள்‌ பின்னர்‌ விளக்கமளித்தார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: எனது கனவில்‌ நான்‌ (எனது) வாள்‌ ஒன்றை அசைக்க, அதன்‌ முனை உடைந்து விடுவதாகக்‌ கண்டேன்‌. அது உஹுதுப்‌ போரின்‌ போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக்‌ குறித்தது. பிறகு (அதே கனவில்‌) மற்றொரு முறை அந்த வாளை நான்‌ அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும்‌ (ஒட்டிக்‌ கொண்டு) அழகாகி விட்டது. அது அல்லாஹ்‌ (அதே உஹுதுப்‌ போரில்‌) கொணர்ந்த உறுதிப்பாட்டையும்‌ (சிதறி ஓடிய) முஸ்லிம்கள்‌ (மீண்டும்‌)
ஒன்று திரண்டதையும்‌ குறித்தது. அந்தக்‌ கனவில்‌ நான்‌ சில காளை மாடுகளை பார்த்தேன்‌. (உஹுதில்‌ கொல்லப்பட்டவர்களுக்கு) அல்‌ லாஹ்‌ அளித்த அந்தஸ்து (அவர்கள்‌ இந்த உலகில்‌ இருந்த நிலையை விட அவர்களுக்குச்‌) சிறந்ததாகும்‌. எனவே, (அந்த மாடுகள்‌, உஹுதுப்‌ போரின்‌ போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக்‌ குறிப்பவையாகும்‌. நூல்‌ : (புகாரி: 3622)

நபிமார்கள்‌ காணும்‌ கனவு இறைச்‌ செய்தியாகும்‌. உஹதுப்‌ போரில்‌ முஸ்லிம்களுக்கு மிகப்‌ பெரும்‌ பாதிப்பு ஏற்படும்‌ என்பது முன்னதாகவே நபியவர்களுக்கு இறைவன்‌ புறத்திலிருந்து அறிவிக்கப்பட்டுவிட்டது.

நபித்தோழர்களுடன்‌ ஆலோசனை

குரைஷிகள்‌ முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்‌ பெரும்‌ படைதிரட்டி வருகிறார்கள்‌ என்ற செய்தி நபியவர்களை எட்டியது. எனவே மக்கா காஃபிர்களுடன்‌ எவ்வாறு போரை அமைத்துக்‌ கொள்வது என்பது தொடர்பாக நபித்தோழர்களுடன்‌ ஆலோசனை செய்தார்கள்‌ நபியவர்கள்‌ மதீனாவிலிருந்து வெளியேறாமல்‌ போரை எதிர்‌ கொள்ளலாம்‌ என்று ஆலோசனை கூறினார்கள்‌ ஆனால்‌ நபித்தோழர்கள்‌ மதீனாவிற்கு வெளியில்தான்‌ போரை நடத்த வேண்டும்‌ என்று நபியவர்‌ வலியுறுத்தி! அவர்களின்‌ கோரிக்கையை ஏற்று நபியவர்கள்‌ போருக்கு புறப்படுவதற்காக கவச ஆடையை அணிந்தார்கள்‌.

இந்நிலையில்‌ நாம்‌ நபியவர்களுக்கு கருத்துக்கு எதிராக அவர்களை வலியுறுத்தி விட்டோமோ என்று எண்ணிய ஸஹாபாக்கள்‌ நபியவர்களிடம்‌ வந்து அவர்களின்‌ எண்ணப்படி மதீனாவிற்கு இருந்தே போரைச்‌ சந்திக்கலாம்‌ என்று கூறினர்‌. ஆனால்‌ நபியவர்கள்‌ அதனை ஏற்க மறுத்துவிட்டனர்‌. நபியவர்கள்‌ செய்த ஆலோசனை தொடர்பாக(புகாரி: 739)வது ஹதீஸிற்கு முந்தைய பாடத்தில்‌ பின்வரும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது

உஹுதுப்‌ போரின்‌ போது நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ தோழர்களிடம்‌, ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின்‌ படையை எதிர்‌) கொள்ளலாமா? அல்லது பகைவர்களின்‌ படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப்‌ போகலாமா? என்று ஆலோசனை கேட்க அவர்கள்‌, (ஊருக்கு) வெளியே புறப்பட்டுப்‌ போகலாம்‌ என்று நபி (ஸல்‌) அவர்களிடம்‌ கருத்துத்‌ தெரிவித்தார்கள்‌. உடனே நபி (ஸல்‌) அவர்கள்‌ தமது கவச ஆடையை அணிந்து கொண்டூ (ஊருக்கு வெளியே செல்ல)
உறுதி கொண்டு புறப்பட்ட போது, தோழர்கள்‌ ஊரிலேயே தங்கி விடுங்கள்‌ என்று (மாற்று யோசனை, சொன்னார்கள்‌ ஆனால்‌, உறுதி கொண்டு விட்ட பின்னால்‌ அவர்களுக்கு நபி (ஸல்‌) ர்கள்‌ செவிசாய்ச்‌ ப ). மாறாக, நபி (ஸல்‌) அவர்கள்‌, (போருக்குப்‌ புறப்படத்‌ தயாராகி) தமது கவச ஆடையை அணிந்து கொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும்‌ அல்லாஹ்‌ தீர்மானிக்கும்‌ வரை அதைக்‌ கீழே வைப்பது முறையாகாது என்று சொன்னார்கள்‌. (புகாரி) (அஹ்மத்‌ 14260)

நயவஞ்சகர்களின்‌ துரோகம்‌

நபியவர்கள்‌ தமது படையை அழைத்துக்‌ கொண்டு உஹீதை நோக்கி புறப்பட்ட நேரத்தில்‌ நயவஞ்சகனான இப்னு உபை படையில்‌ மூன்றில்‌ ஒரு பகுதியினரான 300 வீரர்களை அழைத்துக்‌ கொண்டு போர்‌ செய்யாமல்‌ திரும்பினான்‌. முஸ்லிம்களுக்கு மத்தியில்‌ குழப்பத்தை ஏற்படுத்தி எதிரிப்‌ படைகள்‌ வெற்றி பெற உதவி செய்ய வேண்டும்‌ என்பதே அந்த முனாபிக்கின்‌ எண்ணமாக இருந்தது

ஸைத்‌ பின்‌ ஸாபித்‌ ரலி) அவர்கள்‌ கூறியதாவது: நபி (ஸல்‌) அவர்கள்‌ உஹுதுப்‌ போருக்குப்‌ புறப்பட்ட போது அவர்களின்‌ தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்‌) சிலர்‌ (போரில்‌ பங்கெடுக்காமல்‌) திரும்பலானார்கள்‌. நூல்‌ : (புகாரி: 1684)

இந்நிலையில்‌ அவ்ஸ்‌ குலத்தவரில்‌ (ஹாஸா’ என்ற குடும்பத்தினரும்‌ கஸ்ரஜ்‌ கூட்டத்தினரில்‌ “ஸலமா’ என்ற குடும்பத்தினரும்‌ கோழைகளாகி போரிலிருந்து திரும்பிடலாம்‌ என்று உறுதியாக எண்ணினர்‌. ஆனால்‌, அல்லாஹ்‌ அவ்விரு குடும்பத்தினரும் பாதுகாத்து அவர்களுக்கு மத்தியில்‌ ஏற்பட்ட சலசலப்பை அகற்றி அவர்களின்‌ உள்ளங்களில்‌ துணிவையும்‌ வீரத்தையும்‌ ஏற்படுத்தினான்‌. இதை அல்லாஹ்‌ குர்ஆனில்‌ குறிப்பிடுகிறான்‌: