08) பிரார்த்தனை முடிந்தபின் முகத்தில் கைகளை தடவலாமா?

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முக்கியாமான வணக்கம் பிரார்த்தனையாகும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். என்றாலும்  சிலர் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஆதாரமற்றசெய்திகளின் அடிப்படை யில் செயல்பட்டு வருகிறார்கள். அதில் பிரார்த்தனை செய்து முடித்ததும் இரு கைகளையும் முகத்தில் தடவுவதும் ஒன்றாகும். இந்த பழக்கம் இஸ்லாமியர் களில் ஏராளமானோரிடம் காணப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு சான்றாக ஏழு ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அவையனைத்தும் பலவீனமான ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதை பின்வரும் விளக்கங்களிலிருந்து நீங்கள் அறியலாம்.

ஆதாரம்:1

உள்ளங்கையால் (அதாவது உள்ளங்கை உங்கள் முகத்திற்கு நேராக இருக்குமாறு) அல்லாஹ்விடம் கேளுங்கள். புறங்கையால் கேட்காதீர்கள். நீங்கள் (பிரார்த்தனையை) முடிக்கும்போது கைகளை உங்கள் முகங்களில் தடவிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : (அபூதாவூத்: 1270), (இப்னு மாஜா: 1171)

இதே செய்தி ஹாகிம், பைஹகீ, இப்னு ஹிப்பான், தப்ரானீ ஆகிய நூல்களி லும் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. இச்செய்தியை பதிவு செய்த இமாம் அபூதாவூத் அவர்கள் இச் செய்தி முஹம்மத் பின் கஅப் மூலமாக பல விதங்களில் அறிவிப்பட்டுள்ளது. அவை அனைத்தும் முற்றிலும் பலவீனமா தாகும். இந்த அறிவிப்பாளர் வரிசைதான் ஓரளவு சரியானதாகும். என்றாலும் இதுவும் பலவீனமானதாகும் என்று அந்த செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த செய்தி அனைத்தும் முஹம்மத் பின் கஅப் அல்குரழி என்பவரிடமி ருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அபூதாவூத் அறிவிப்பில் முஹம்மத் பின் கஅப் அல்குரழி இடமி ருந்து அறிவிப்பவரின் பெயர் குறிப்பிடவில்லை. மேலும் அதற்கு அடுத்த அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் யஃகூபும் அவரை தொடர்ந்து இடம் பெறும் அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் முஹம்மத் பின் அய்மன் என்பரும் யாரென அறியப்படாதவர்கள். ஆக அபூதாவுதின் அறிவிப்பு முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

இதே செய்தி இப்னு மாஜாவின் அறிவிப்பில் முஹம்மத் பின் கஅப் அல்குரழி என்பவரிடமிருந்து ஸாலிஹ் பின் ஹஸ்ஸான் என்பவர் அறிவித் துள்ளார். இவர் பலவீனமானவர் என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளார்கள் என்பதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள், ஸாலிஹ் பின் ஹஸ்ஸான் என் பவர் நம்பகமானவரின் பெயரைப் பயன்படுத்தி இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று குறிப்பிட்டதை ஹாபிழ் இப்னு ஹஜர் தனது தல்கீஸுல் ஹபீர் என்ற நூலில் கூறியுள்ளார்கள்.

இதே கருத்துள்ள செய்தியை இப்னு ராஹவைஹீ அவர்கள் முஹம்மத் பின் கஅப் அல்குரழி என்பவரிடமிருந்து ஈஸா பின் மைமூன் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஈஸா பின் மைமூன் என்பவர் பலவீனமானவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களும் இமாம் புகாரி அவர்கள், இவர் மறுப்படவேண்டியவர் என் றும் இவர் நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதே செய்தி ஹாகிமில் இடம் பெற்றுள்ளது. ஹாகிமின் அறிவிப்பில் ஸயீத் பின் ஹுபைரா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி இட்டுக்கட்டி செய்திகளை அறிவிப்பவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியதாக தஹ்பீ அவர்கள் தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஆதாரம்: 2

உங்கள் இறைவன் எப்போதும் உயிருடன் உள்ளவன்; கண்ணிமிக்கவன், ஒரு அடியான் இரு கைகளை உயர்த்தி (எதையாவ கேட்ட பின்னர் எதை கொடுக்காமல்) பூஜ்ஜியமாக திருப்பி அனுப்புவதை அல்லாஹ் வெட்கப்படு கின்றான். நீங்கள் (பிரார்த்தனைக்காக ) கைகளை உயர்த்தினால் “யா ஹைய் யுல் கையூம் லாயிலாஹ இல்லா அன்த்த யா அர்ஹமர் ராஹின்” என் மூன்று முறை கூறட்டும். (பிரார்த்தனை முடிக்கும்போது) “யா ஹய் யா கைய்யூம் லாயிலாஹ இல்லா அன்த்த யா அர்ஹமர்ராஹிமீன்” என்ற மூன்று தடவைச் சொல்லட்டும். பின்னர் தம் கைகளை திருப்பிக் கொள்ளும்போது (அதாவது துஆவை முடிக்கும்போது) அந்த நன்மையை முகத்தில் (தடவிக்) முடித்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : தப்ரானீ – கபீர், பாகம் : 12, பக்கம் : 423