08) பத்ருப் போர்
பத்ர் என்பது மக்காவுக்கும் மதினாவிற்க்கும் இடையே உள்ள ஒரு இடமாகும் முஸ்லிம்களுக்கும்
காபிர்களுக்கும் இடையே போர் நடந்தது எனவே இப்போருக்கு பத்ரு போர் என்று பெயர் வந்தது இப்போர் ஹிஜிரி இரண்டாம் ஆம் ஆண்டில் ரமலான் மாதம் 17 ம் நாள் நடந்தது.
நபி (ஸல்) அவர்கள் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை பிடிப்பதற்காக பல்வேறு வகையான
படைப்பிரிவுகளை அனுப்பினார்கள் என்பதை நாம் முன்னர் கண்டோம்.
இந்நிலையில் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டம் அபூ சுஃப்யான் என்பவரின் தலைமையில் ஷாமிலிருந்து திரும்பி வரும் தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்து.
முஸ்லிம்களை அடியோடு அழிக்க நினைக்கும் மக்கா காஃபிர்களின் இந்த வியாபாரக் கூட்டத்தைப்
பிடித்தால்தான் அவர்களின் பொருளாதார வலிமையை விழ்த்த முடியும் என்ற எண்ணத்தில் நபி ஸல்)
அவர்கள் ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்தார்கள்.
அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு
எட்டியபோது (தம் தோழர்களிடம், ஆலோசனை கேட்டார்கள்.
அபூபக்ர் ரலி) அவர்கள் (தமது கருத்தைச் சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கண்டுகொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது கருத் தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.அப்போது (அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின் தலைவர் ௪அத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, “எங்(கள் அன்சாரி களின் கருத்து களையா நீங்கள் எதிர்பார்க்கி றீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணை யாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து தொலைவில் உள்ள) “பர்குல் ஃகிமாத்’ நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்” என்று கூறினார்கள்.நூல் : (முஸ்லிம்: 3649)
மதீனா வாசிகள் உறுதி மொழி கொடுத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் சிறிய படையுடன் புறப்பட்டார்கள் இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் மிகப்பெரும் போரினை சந்திக்க நேரிடும் என்று நபியவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் தம்மோடு வரவேண்டும் என்று நபியவர்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை. இதனால் அதிகமான நபித்தோழர்கள் மதீனாவிலேயே தங்கிவிட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து 310 க்கும் அதிகமான வீரர்களுடன் வெளியேறினார்கள்.
அதில் முஹாஜிர்கள் 80 க்கு அதிகமானவர்களும், 230 அன்சாரி ஸஹாபாக்களும் இருந்தனர்.
முஸ்லிம்களிடம் ஒன்றிரண்டு குதிரைகளும், குறைவான ஆயுதங்களுமே இருந்தன்.
மக்காவாசிகள் தங்களுடைய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக மிகப் பெரும் படையுடன்
புறப்பட்டனர்.
மக்கா காஃபிர்களின் படையில் 1300 வீரர்ரகள் இருந்தனர். அவர்களிடம் கவச ஆடைகளும், குதிரைகளும், அதிகமான ஒட்டகங்களும், ஏராளமான ஆயுதங்களும் இருந்தன்.
ஆனால் அபூ சுஃப்யான் தலைமையில் வந்த வியாபாரக் கூட்டம் முஸ்லிம்களிடத்தில் பிடிபடாமல்
வேறுவழியில் தப்பித்துச் சென்று விட்டனர். அவர் தம்முடைய வியாபாரக் கூட்டம் முஸ்லிம்களிடத்தில்
இருந்து தப்பித்துவிட்டதாகவும், எனவே மக்காவை நோக்கி திரும்பிச் செல்லுமாறும் குரைஷிகளுக்கு கடிதம் எழுதினார்.
இக்கடிதம் கிடைத்தவுடன் குரைஷிகள் மக்காவை நோக்கி திரும்ப நினைத்தனர். ஆனால் அபூ ஜஹ்ல் நாம் பத்ர் வரை சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். இதன் மூலம் முஸ்லிம்களை அச்சுறுத்த வேண்டும் என்பதே அவனது நோக்கமாக இருந்தது. அபூ ஜஹ்ல் வற்புறுத்திய காரணத்தினால் மக்காவின் படை பத்ர் களம் நோக்கி கிளம்பியது
வியாபாரக் கூட்டம் தப்பித்து விட்ட செய்தியும், குரைஷிகளின் படை பத்ரை நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தியும் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இந்நிலையில் என்ன முடிவு எடுப்பது? என்று நபி (ஸல்) அவர்கள் தமது படையினருடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் தாம் பத்ர் நோக்கி
புறப்படுவது தொடர்பாக ஆலோசனை செய்தார்கள். அபூ பக்கர் (ரலி) அவர்கள் தமது
ஆலோசனையைக் கூறினார்கள். பின்னர் உமர் தமது ஆலோசனையைக் கூறினார். பிறகும் நபி
(ஸல்) அவர்கள் அவர்களிடம் தமக்கு ஆலோசனை கூறுமாறு வேண்டினார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் “அன்சாரிகளே நபியவர்கள் உங்களுடைய கருத்தைத்தான் நாடுகிறார்கள்: என்று கூறினார்.
உடனே அன்சாரிகளில் ஒருவர் ; “அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுடைய கருத்தைத்தான்
எதிர்பார்க்கிறீர்களா? (இறைத்தூதர்) மூசாவின் சமுதாயத்தார். நீங்களும் உங்கள் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்’ நாங்கள் இங்கே உட்கார்ந்து கொள்கிறோம் என்று ௬கைப்பாகக்) கூறியது போல நாங்கள் கூற மாட்டோம். மாறாக, உங்களை உண்மையைக் கொண்டு அனுப்பியவன் மீது சத்தியமாக குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலை வில் உள்ள) “பர்குல் ஃ.கிமாத்’ நோக்கி (விரட்டிச்) சென்றாலும் நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம் என்று கூறினார்கள். (அஹ்மத்: 11584)
முஸ்லிம்களின் படையில் அன்சாரிகள் அதிகம் இருந்த காரணத்தினால்தான் நபி (ஸல்) அன்சாரிகள்
கருத்தை அறிவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அன்சாரிகள் போர் புரிய வேண்டும் என்று தமது கருத்துக்களைக் கூறியவுடன் நபி (ஸல்) அவர்கள் பத்ர்நோக்கிப் புறப்பட்டார்கள். மேலும் அல்லாஹ் வியாபாரம் கூட்டம் அல்லது குரைஷிகளின் படை இரண்டில் ஒன்றை வெற்றி கொள்ளும் பாக்கியத்தை வழங்கியுள்ளான் என்ற நற்செய்தியையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். இது தொடர்பாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.
“எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்” என்று அல்லாஹ்
உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான். (அல்குர்ஆன் 8 : 7)
முஸ்லிம்களின் படை பத்ரை வந்தடைந்ததும் எதிரிப் படையைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும் பணியில் நபித்தோழர்கள் ஈடுபட்டனர். இதனை பின்வரும் சான்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைப் புறப்படச் செய்தார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று பத்ர் எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான்.
நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூசுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் “அபூசு..ப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படை திரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாகரிக்கொண்டு) நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் “ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூசுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்’ என்று (பொய்) சொன்னான்.
அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால் “அபூசுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கல..ப் மக்க ளுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)” என்றுசொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) நின்று தொழுதுகொண்டி ருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வதை அவர்கள் கண்டதும் தொழு கையை சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவன் உண் மையைச் சொல்லும்போது அடிக்கிறீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!” என்று கூறினார்கள்.நூல் : (முஸ்லிம்: 3646)
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டூ வந்தனர். அவனிடம் நபி (ஸல்) அவர்கள் அந்தக்
கூட்டம் எவ்வளவு பேர் உள்ளனர்? என்று கேட்டார்கள். அதற்கவன் “அல்லாஹ்வின் மீதாணாயாக! அவர்கள் அதிக எண்ணிக்கையிலும், மிகப்பெரும் வலிமையிலும் உள்ளனர் என்று கூறினான். அவர்கள் எத்தனை பேர் என்று அவன் தனக்கு அறிவிக்க வேண்டும் என்று நபியவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் அவன் மறுத்துவிட்டான். பிறகு நபியவர்கள் “அவர்கள் எத்தனை ஒட்டகங்களை அறுக்கிறார்கள்” என்று அவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன் ” ஒவ்வொரு நாளும் பத்து ஒட்டகங்கள்’ என்று பதிலளித்தான். உடனே நபியவர்கள் “அந்தக் கூட்டம் ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு ஒட்டகம் நூறு பேருக்கு உரியதாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அலி ரலி) நூல் : (அஹ்மத்: 904)
நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போர் நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே நாளை போரில் யார்? யார்? எந்த இடத்தில் மரணிப்பார்கள்? என்று நபித்தோழர்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்கள்
உமர் ரலி) கூறுகிறார்கள் : பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டூ கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். “அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்” என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மாக்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர். (முஸ்லிம்: 5517)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது இன்ன மனிதர் மாண்டு விழும் இடம்” என்று கூறி,
பூமியில் தமது கையை வைத்து “இவ்விடத்தில் இவ்விடத்தில்’ என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர், அறிவிப்பவர் : அனஸ் (ரலி) முஸ்லிம்: 3646)
பத்ருப் போர் நடப்பதற்கு முந்தைய இரவில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சிறிய நிம்மதியான தூக்கத்தை அளித்தான். மேலும் மழை பொழிய வைத்தான் . இதன் மூலம் முஸ்லிம்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், பலம் பெற்றவர்களாகவும் மாறினர்.
உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். (அல்குர்ஆன் 8 ; 11)
பத்ரு யுத்தத்தில் முஸ்லிம்களின் படையும், காஃபிர்களின் படையும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட போது நபியவர்கள் போரில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
அபூ உஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : பத்ருப் போரின் போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்ற போது நபி (ஸல்) அவர்கள், (குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார்கள். நூல் : (புகாரி: 2900)
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், (எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் அவர்கள் மீது அம்பெய்யுங்கள். (அவர்கள் தூரத்திலிருக்கும் போது அம்புகளை எய்து வீணாக்கி விடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள் நூல் :(புகாரி: 3904)
எதிரிகள் உங்கள் சூழ்ந்து கொள்ளும் வரை வாட்களை உருவாதீர்கள் என்று நபியவர்கள் எங்களுக்க கட்டளை பிறப்பித்தார்க்ள. (அபூதாவூத்: 220)
அபூ ஜஹ்ல் முஸ்லிம்களைக் கண்டவுடன் நபிக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தான்
அப்துல்லாஹ் இப்னு ஸ௦ஃலபா அவர்கள் அறிவிக்கிறார்கள் : பத்ரு நாளில் அபூ ஜஹ்ல் பின்வருமாறு பிராரத்தித்தான்.
“அல்லாஹ்வே! (இந்த முகம்மத்) எங்களுடைய உறவுகளை அதிகம் துண்டிப்பவர். நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக் கொண்டு வந்தார். அவரை இன்று அழித்து விடு! அல்லாஹ்வே! எங்களில் உனக்கு யார் மிகவும் விருப்பமானவராகவும் உனது திருப்திக்கு உரியவராகவும் இருக்கிறாரோ அவருக்கு நீ உதவி செய்!” நூல் : (அஹ்மத்: 22551)
நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுதல் அல்லாஹ்வின் முன்னறிவிப்பும்.
நபி (ஸல்) அவர்கள் யத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, இறைவா! நான் உன்
உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகின்றேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்) என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு, போதும், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே
மன்றாடி விட்டீர்கள் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள்.
பிறகு இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களிடம் (கணக்கைத் தீர்த்திட வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடூமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும் என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (54:45,46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி) நூல் : (புகாரி: 2915)
உமர் பின் அல்கத்தாப் (லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான; இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) “கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
“இறைவா! எனக்கு நீ அளித்த வாக்கு றுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்தவாக்குறுதியை வழங்குவா யாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவி னரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை முட்டுமே, வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால் அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது
போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீங்கள் உங்கள் இறைவனிடம் பாது காப்புக்
கோரியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்’ என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” (8:9) எனும் வசனத்தை அருளினான். (முஸ்லிம்: 3621)
“நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!” (அல்குர்ஆன் 8 : 12)
என்று அல்லாஹ் வானவர்களுக்கு வஹீ அறிவித்தான்.
அல்லாஹ் வாக்களித்தவாறு நபி (ஸல்) அவர்களுக்கு வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உதவியளித்தான். அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைமறுப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் “*ஹைஸுும்। முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார்.
உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து விழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.
உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 3621)
இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல்! போர்த் தள வாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். (புகாரி: 3985)
நபி (ஸல்) அவர்களிடம் (வானவற்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே, ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று கூறினார்கள். (புகாரி: 3௦92)
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் பத்ருப் போரின் போது நான் படை) அணியில் நின்று கொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங் களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன் அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து, என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவிர்களா? என்று கேட்டார். நான், ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே! என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், அவன் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க
வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டே யிருப்பேன்) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்.
அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி க் கண்டு, இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி! என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட! செய்தியைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) ர்கள், உங்களில் யார் % கொன்றது? என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும், இ என்று பதிலளித்தார் நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு, நீங்கள் இ மே ந கொல் க்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹுக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் ருலி) அவர்களும் ஆவர். (புகாரி: 3141)
அனஸ் பின் மாலிக் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், மு௮வ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப்
பிடித்துக் கொண்டு, அபூஜஹ்ல் நீ தானே! என்று கேட்டார்கள்.
நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக அல்லது தன்னுடைய (சமுதாயத்து மக்களாலேயே
கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக… ஒருவன் உண்டா? என்று (குன்னைத் தானே பெருமைப்படுத்திய படி) அவன் கேட்டான். (புகாரி: 3962)
(முஸ்லிம்கள்) அன்றைய தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச்சிறைப்பிடித்தனர். (முஸ்லிம்: 3621)
அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்பத்ருப் போர் டந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகனமான ஒட்டகத்தின் மீது அதன் சிவிகையை ற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்)
அவர்கள் புறப்பட்டுச், சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும்அவர்களைப் பின் தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே ் நினைத்தோம்.
இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர் களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு,
இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த ர௬ுன்மைதனை உண்மையானதே என்று நாங்கள் கண்டூ கொண்டோம்.
உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (கண்டனைதனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா? என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை என்று கூறினார்கள். நூல் : (புகாரி: 3976)
இவ்வாறு பத்ரு யுத்தம் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது.
போரில் கைப்பற்ற பட்ட பொருட்கள் தொடர்பான சட்டம் இறங்குதல் போர் முடிந்து மதீனாவை நோக்கி திரும்பும் வழியில் போரில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பாக நபித்
தோழர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடூ ஏற்பட்டது உபாதா இப்னு ஸாமித் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
* நாங்கள் நபி (ஸல்) அவர;களுடன் பத்ர் போருக்குச் சென்றோம். போரில் அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்து முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களில் ஒரு சாரார் எதிரிகளை விரட்டி அடிப்பதிலும் அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொல்வதிலும் மும்முரமாக இருந்தனர். இன்னொரு சாரார் எதிரிகளின் பொருட்களை ஒன்று திரட்டினர். மற்றுறொரு சாரார் நபி (ஸல்) ர் எதிரிகள் ந் இருக்க அவர;களைச் சுற்றி பாதுகாத்தனர்.
இரவில் போர் முடிந்து மக்கள் ஒன்று சேர்ந்த போது பொருட்களை சேகரித்தவர்கள் “நாங்கள்தான் பொருட்களை ஒன்று சேர்த்தோம். எனவே, அதில் வேறு யாருக்கும் எவ்வித பங்கும் கிடையாது” என்றனர். எதிரிகளை விரட்டியவர்கள்,”எங்களைப் பார்க்கிலும் அதிகமாக உங்களுக்கு அதில் உரிமை இல்லை, நாங்கள்தான் எதிரிகளை துரத்தினோம், தோற்கடித்தோம். எனவே, எங்களுக்கே அது உரிமையானது. எங்களைவிட நீங்கள் அதற்கு உரிமையுடையவர்களாக இருக்க முடியாது” என்றனர்.
நபியவர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தவர்கள், “நபி (ஸல்) எதிரிகள் வருவார்கள் என்ற பயத்தால் நாங்கள் அவர்களை பாதுகாப்பதில் இருந்தோம். எனவேதான் உங்களுடன் எங்களால் செயல்படமுடியவில்லை ஆகவே எங்களுக்கும் அதில் பங்கு வேண்டும்” என்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான்.
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.”போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள் (பற்றி முடிவு செய்யும் ம) அல்லாஹ் இத்தூதருக்கும் உரியது” என்று கூறுவிராக! எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல்குர்ஆன் 8:1)
முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் ரலி)
அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை, கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்” என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?” என்று கேட்டார்கள்.
உமர் ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ் வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர் கள், அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்ற தன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)” என்று ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் ஸல்)
அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை ர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான
காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!” என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதே இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஒர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது” என்று தொடங்கி, “நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்” (அல்குர்ஆன்: 8:67-69) ➚ என்பது வரை மூன்று ங்களை அருளி 9. அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான். (முஸ்லிம்: 3621)
பத்ருப் போர் முடிந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பத்ருப் போரில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றி மதீனாவில் வாழ்ந்த யூதர்களுக்கு மிகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா குரைஷிகளுடன் சேர்ந்து பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினார்கள். இதன் காரணமாக நபியவர்கள் யூதர்களுக்கு எதிராகவும் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
யூதர்களில் ஒரு பிரிவைச் சார்ந்த ௧௮ப் பின் அஷ்ரஃப் என்பவன் கவிஞனாகவும், அழகானவனாகவும் இருந்தான். இவன் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்ட்டினான். நபியவர்களுக்கு எதிராக கவிதைகளைப் பாடூவதுடன் குரைஷிகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான். இவனது சதிவேலைகள் நாளுக்கு நாள் திகரிக்கவே நபியவர்கள் இவனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (குயாராயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான் என்று சொன்னார்கள். உடனே முஹம்மது
பின் மஸ்லமா ருலி) அவர்கள் எழுந்து, நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.
உடனே, முஹம்மத் பின் மஸ்லமா ருலி) அவர்கள், நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி
தாருங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (சரி) சொல் என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று, இந்த மனிதர் (முஹம்மத்-ஸல்),, எங்களிடம் மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார்.
எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார் என்று (நபி – ஸல் -அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன் என்றும் கூறினார்கள். கஅப் பின் அஷ்ரஃப், அல்லாஹ் வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள் என்று கூறினான்.
(அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டூ (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால் தான் அவருடன்
இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்) என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, நீ எங்களுக்கு ஒரு வஸக்கு ..அல்லது இரண்டு வஸக்கு…(பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம் என்று சொன்னார்கள்.
அப்போது ௧அப் பின் அஷ்ர:ப், சரி! நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள் என்று கூறினான். அதற்கு அவர்கள், நீ எதை விரும்புகிறாய் (கேஸ்? என்று கூறினர். கஅப் பின் அஷ்ரஃப், உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள் என்று சொல் 1 ர்கள், எங்கள் பென் எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை) என்று சொன்னார்கள். (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம்
வையுங்கள் என்று கூறினான். அதற்கு அவர்கள், எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது?
அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்’ என்றல்லவா ஏசப்படுூவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள் ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம் என்று கூறினார்கள். (அவன் ம்மதிக்கவே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்து விட்டுச் சென்றார்கள்.
(பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா ருலி) அவர்கள் இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூ நாயிலா ருலி)அவர்கள், கஅப் பின் அஷ்ர- ஃபிற்கு பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) ௧அப் பின் அஷ்ரஃப் பிறகு ர் நோக்கி அவனும் இறங்கி வந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறு யாருமல்ல.) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான் என்று பதிலளித்தான்.
அவனது மனைவி அவனிடம் “இந்நேரத்தில் நீ எங்கு செல்கிறாய்? இந்த சப்தத்தில் இரத்தம் சொட்டுவதை நான் கேட்கிறேன்” என்று கூறினாள்.அதற்கு கஅப், “வந்திருப்பவரோ எனது சகோதரர; முஹம்மது இப்னு மஸ்லமாவும், எனது பால்குடி சகோதரர; அபூநாம்லாவும்தான். வேறு யாருமில்லை. சங்கைமிக்கவர; ஈட்டி எறிய அழைக்கப்பட்டாலும் கூட அதையும் ஏற்று அங்கு செல்வார;” என்ற பழமொழியைக் கூறி மனைவியே சமாதானப்படுத்தினான். பிறகு அவர்களை சந்திக்க இறங்கினான்.
அவன் நன்கு நறுமணம் பூசி இருந்தான். அவனது தலை நறுமணத்தால் கமழ்ந்து கொண்டு இருந்தது.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம், கஅப் பின் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள் என்று (உபாயம்) கூறினார்கள்.
பிறகு கஅப் பின் அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டூ நறு மணம் கமழ இறங்கி வந்தான்.அப்போது முஹம்மத் பின் மஸ்லமா ருலி) அவர்கள், இன்று போல் நான் எந்த உயர்ந்த நறு மணத்தையும் நுகர்ந்து) பார்த்ததில்லை என்று அவர்கள் மேலும், முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்கள், (,அபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன், சரி நநுகர்ந்து பார் என்று கூறினான்.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் க் பும் நுகரச் சொன்னார்கள். (மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன், சரி (அனுமதிக்கிறேன்) என்று கூறினான். முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்த போது, பிடியுங்கள் என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்)
அவனைக் கொன்று விட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். நூல் : (புகாரி: 4037)
இவ்வாறே முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் எதிரியாகத் திகழ்ந்த ௧அப் பின் அஷ்ரஃப் எனும் கயவனின் கதை முடிக்கப்பட்டது.