08) நோய் நிவாரணம் அழிப்பவன் அவனே

நூல்கள்: இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்

 

حدثنا موسى بن إسماعيل ، حدثنا أبو عوانة عن منصور ، عن إبراهيم ، عن مسروق ، عن عائشة ، رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أتى مريضا ، أو أتي به- قال أذهب الباس رب الناس اشف وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.

 حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ ، حَدَّثَنَا النَّضْرُ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ : أَخْبَرَنِي أَبِي ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَرْقِي يَقُولُ امْسَحِ الْبَاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشِّفَاءُ لاَ كَاشِفَ لَهُ إِلاَّ أَنْتَ.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைத் துடைப்பாயாக! நிவாரணம் உன் கரத்தில்தான் உள்ளது. உன்னைத் தவிர துன்பத்தை நீக்குபவர் வேறு எவரும் இல்லை என்று கூறி ஓதிப்பார்த்து வந்தார்கள்.

நூல்: (புகாரி: 5744)