08) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 6
கழுமரத்தில் ஏற்றப்பட்ட ஏசுவின் கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை.
அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
சங்கீதம் 34:20
செத்த பிணத்தின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டால் என்ன? உடைக்கப்படாவிட்டால் என்ன?
கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் பயன் உயிருள்ளவருக்குத் தானே! இறந்தவருக்கு அல்லது ஆவியாக மாறியவருக்கு எந்தப் பயனும் கிடையாது.
இந்த அழுத்தமான வாதத்தின்படி ஏசு உயிருடன் தான் இருக்கிறார் என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது.
ஏசுவின் கால் எலும்புகளை ரோமப் படையினர் ஏன் உடைக்காமல் விட்டனர்?
படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.
யோவான் 19:32, 33
ஏசுவின் இரு பக்கங்களில் கழுமரத்தில் தொங்க விடப்பட்டிருந்த இருவரின் கால்களை முறிக்கின்ற படை வீரர்கள், ஏசுவிடம் வருகின்றனர். அவர் ஏற்கனவே இறந்து போய் விட்டார் என்று எண்ணி அவரது கால்களை முறிக்கவில்லை.
ஏசு இறந்து விட்டார் என்பதை நவீன கால ஸ்டெதாஸ்கோப் மூலம் படைவீரர்கள் உறுதிப்படுத்தவில்லை. காலைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. நாடி பிடித்தும் பார்க்கவில்லை. அப்படி ஒரு சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் கடவுள் போட்டு ஏசுவைக் காப்பாற்றினான்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துமே ஏசுவை மரணத்திலிருந்து பாதுகாப்பதற்காகத் தான்.