08) ஆதம் (அலை)
முதல் நபியும், வானவர்களால் சிறப்பிக்கப்பட்ட நபியும். இந்த மனித சமுதாயத்தின் மூலமுமான ஆதம் (அலை) அவர்களுக்கும் மறைவான விசயங்கள் தெரிந்திருக்கவில்லை என கீழ்க்காணும் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றன. முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். )رمه پهe (அவர் மறந்தார். அவரிடத்தில் நாம் உறுதியை காணி வில்லை. (அல்குர்ஆன்: 20:115) ➚
சொன்ன ஒரூ விசயத்தையே ஒருவர் மறந்திருக்கிறார் என்றால் இனி நடக்கப்போகும், யாருக்கும் தெரியாத பல கோடி விசயங்களை தெரியமுடியுமா? மறைவான விசயத்தை அறிந்தவர்கள் என்றால் எல்லா விசயங்களும் தெரிந்தவர். இவருக்கு தெரியாத, விளங்காத விசயங்கள் ஒன்று கூட இல்லைஎன்றுதான்பொருள். அல்லாஹ் குறிப்பிட்டவிசயத்தை ஆதம் (அலை) மறந்ததன் மூலம் அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியமுடியாது என்பதை விளங்கலாம்.
நீங்கள் ஆதமுக்கு ஸ”ஜெ”து செய்யுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறியபோது இப்லீஸைத் தவிர (மற்றவர்கள் ஸஜ்தாசெய்தார்கள். அவன் மாறுசெய்தான், அப்போது ஆதமே! நிச்சயமாகஇவன்உமக்கும் உம்முடைய மனைவிக்கும் மகைவனாவான். உங்களிருவரையும் இச். சுவனபதியிலிருந்து வெளியேற்ற (இடம்) தர வேண்டாம், இல்லையேல் நீர் இதில் பசியாகவோ, நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர் (எனக்கூறினோம்) ஆனால் ஷைத்தான் அவருக்கு குழப்பத்தை உண்டாக்கி ஆதமே நித்திய வாழ். வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத ஆட்சியையும் கூடியதை) உமக்கு அறிவிக்கட்டுமா எனக் கேட்டான்.
பின்னர் அவ்விருவரும் (இப்லீஸின் ஆசைவார்த்தைப். படி) அம் (மரத்)திலிருந்து புசித்தனர். உடனே அவ்விரு. வரின் வெட்கத்தலங்களும் வெளியாயின. ஆகவே அவ்விரு. வரும் ஜன்னத்தின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொண்டனர். இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறுசெய்வது, அதனால் வழி பிசகிவிட்டார் (அல்குர்ஆன்: 20:116) ➚,121)
இந்த வசனம் ஆதம் (அலை) ஏமாந்த வரலாறை கூறு கிறது. ஆதம் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரிந்தால் ஷைத்தானின் ஏமாற்று பசப்பு வார்த்தைகளை நம்பி அப்பழத்தை சாப்பிட்டிருப்பார்களா? நீ சொல்வது சுத்தப்பொய் இதை சாப்பிட்டால் நாங்கள் இந்த சொர்க் கத்திலிருந்து வெளியேற்றப்படுவோம். எங்கள் மர்மஸ்” தானங்கள் வெளியே தெரிந்துவிடும்.
இறைவனின் கோபம் எங்கள் மீது விழுந்து விடும் என்றல்லவா கூறியிருக்* வேண்டும்.
ஆனால் அப்படிக் கூறாமல், ஷைத்தானின் கூற்று உண்மையாகத்தான் இருக்கும் என நம்பி, தனக்கு அழிவில்லாத வாழ்வும், நிரந்தர ஆட்சியும் வேண்டும் என எண்ணி அப்பழத்தை சாப்பிட்டார்கள். இதிலிருந்து ஷைத்தானின் கூற்று பொய் என்ற விசயம் ஆதம் (அலை) அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதை தெளிவாகவே விளங்கலாம்.