08) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-8
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : காலணி அணியும் போது முதலில் வலது காலில் அணியுங்கள்; கழற்றும் போது இடது காலில் முதலில் கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது எது?” என கேட்டேன். “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன் “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன். “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு வலது பக்கம் கிராமவாசி ஒருவரும், இடது பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். நபியவர்கள் அருந்திய மீதியை கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணிய உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்கு கொடுங்கள், “எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு, “வலதுக்கே முன்னுரிமை” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதி வரை அல்லது அதற்குச் சற்று முன்பு பின் வரை உறங்கினார்கள். விழித்து எழுந்ததும் தமது கரத்தால் முகத்தில் தடவித்தூக்கத்தைப் போக்கினார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190 – 200) ஓதினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
ஒளு செய்தாலோ, ஆடை அணிந்தாலோ வலது புறத்திலிருந்து ஆரம்பியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)