07) ஸவ்தா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

வயது 55

விதவைப் பெண்மணி

  திருமணத்தின் போது நபியின்     வயது 50

ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் இவர் ஒருவர். இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டங்களில் எதிரிகளின் புறத்திலிருந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர்.

குறைஷிகளின் கடும் எதிர்ப்பு. அளவிலாத் தொல்லைகள் இவற்றையெல்லாம் மீறி. அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் அவர்களுடைய கணவர் ஸக்ரான் (ரலி) அவர்களும் உண்மை மார்க்கத்தை ஏற்றார்கள். இதனால் தம் இனத்தவரான அப்துஷ்ஷம்ஸ் கூட்டத்தினரின் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

கொடுமைகள் எல்லை மீறிய காரணத்தால் தங்களின் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள, இரண்டாவதாக அபீசீனியா சென்ற குழுவோடு அவர்களும் சென்றார்கள். இதனால் குறைஷிகள் மற்றும் தம் சமூகத்தாரின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றனர்.

மக்காவில் எதிர்ப்பு குறைந்து மக்கள் இஸ்லாத்தில் இணைகிறார்கள் என்ற தவறான தகவலின் அடிப்படையில் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும், அவர்களது கணவர் ஸக்ரான் (ரலி) அவர்களும் மக்கா திரும்பினர். சில ஆண்டுகளில் ஸக்ரான் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். ஐந்து அல்லது ஆறு குழந்தைகளுடன் அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் விதவையாக மக்காவில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.

கணவனை இழந்து ஐந்தாறு குழந்தைகளுடன் 55 வது வயதில் ஆதரவற்று நின்ற நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் இப்பெண்மணிக்கு வாழ்க்கை அளித்து ஆதரவு அளித்துள்ளார்கள்.

கதீஜா அவர்களின் இறப்பிற்கு பிறகு நபிகள் நாயகம் அவர்கள் திருமணம் புரியாமல் இருந்த போது உஸ்மான் பின் மழ்ஊன் அவர்களின் மனைவி கல்லா அவர்கள் தான் ஸவ்தா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொள்ளலாமே என்று கூறி வலியுறுத்தினார்கள்.

இதனடிப்படையில் இந்த திருமணம் நடைபெற்றது.

(பார்க்க பைஹகீ 13526, (அஹ்மத்: 24587), தப்ரானீ, பாகம்: 24. பக்கம்: 30)