07) வணக்கத்திற்கு வழிகாட்ட…

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

 

وَأَرِنَا مَنَاسِكَنَا

எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக!

(அல்குர்ஆன்: 2:128)

அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றாலும் நாம் நினைத்த வகையில் அல்லாஹ்வை வணங்கிவிட முடியாது. அவனை எப்படி வணங்கவேண்டும் என அவன்தான் நமக்குக் கற்றுத்தர வேண்டும். நாமாக எதையும் வணக்கம் என்று செய்திட முடியாது. அவ்வாறு நாமாக ஒன்றை வணக்கம் என்ற பெயரில் நன்மையை எதிர்பார்த்துச் செய்தாலும் அவை வணக்கமாக ஏற்றுக்கொள்ளவும் படாது, அதற்கு நன்மையும் வழங்கப்படாது. மாறாக அவை நம்மை நரகில் தள்ளும் பாவமாகத்தான் பார்க்கப்படும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். அந்தப் அதில்

(புகாரி: 2697)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை யாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

(நஸாயீ: 1560)

எனவே நாம் எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதை நமக்கு வணக்கத்திற்குரியவன் வஹீயால் வழிகாட்டுவாள்.

இதனால்தான் இப்ராஹீம் நபியவர்கள் இவ்வாறு துஆ செய்கிறார்கள். ஒரு தபியாகவே இருந்தாலும்கூட தயமாக ஒரு வணக்கத்தை வழிகாட்ட அதிகாரம் பெறமாட்டார்கள். அல்லாஹ் எதை வணக்கமாக வழிகாட்டினாலோ அதைத்தான் அவர்களும் செய்வார்கள். மக்களுக்கும் கற்றுக்கொடுப்பார்கள்.

ஆனால் இன்று மார்க்கம் காட்டித்தராத பலவற்றை மார்க்கம் என்ற பெயரில் பலர் செய்கிறார்கள். தங்களுக்கு இமாம்கள் வழிகாட்டினார்கள், முன்னோர்கள், மகான்கள் வழிகாட்டினார்கள் என்று கூறுபவர்களுக்கு இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனை சவுக்கடி கொடுக்கிறது.

அல்லாஹ்வின் தோழர் இப்ராஹீம் நபியே அல்லாஹ்விடம் தான் வணக்கத்தை வழிகாட்டக் கேட்கிறார்கள் என்றால் மற்றவர்களால் எப்படி வணக்கத்தை வழிகாட்ட முடியும்? மற்றவர்கள் சொல்வது எப்படி வணக்கமாக இருக்கமுடியும் என்பதைச் சிந்தியுங்கள். இந்தப் பிரார்த்தனையின் மூலமாக நான் அல்லாஹ்வின் அடிமையே! அல்லாஹ்தான் அரசன், அதிபதி அனைத்திற்கும் தகுதியானவன் என்பதை அழகாகக் கற்றுத் தருகிறார்கள்.”