11) மதீனா பிரவேசம்‌

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

உறவினர்களுக்குத்‌ தகவல்‌ கொடுத்தல்‌

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ குபாவில்‌ பதினான்கு நாட்கள்‌ தங்கிய பிறகு மதீனாவிலிருந்த தனது உறவினர்களான பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள்‌. அவர்கள்‌ வாட்களைத்‌ தொங்கவிட்டபடி வந்து நபி (ஸல்‌) அவர்களிடமும்‌ அபூபக்ர்‌ ரலி) அவர்களிடமும்‌ ஸலாம்‌ கூறினார்கள்‌. பிறகு, “நீங்கள்‌ இருவரும்‌ அச்சம்‌ தீர்ந்தவர்‌ வும்‌ அதிகாரம்‌ படைத்தவர்‌ வும்‌ பயணம்‌ செய்யலாம்‌” என்று பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தினர்‌ கூறினார்கள்‌.

அதன்‌ பிறகு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது வாகனத்தில்‌ அமர்ந்திருக்க அபூபக்கர்‌ (ரலி)
அவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்களுக்குப்‌ பின்னால்‌ அமர்ந்திருந்தார்கள்‌. பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தினர்‌ அவர்களைச்‌ சுற்றிலும்‌ சூழ்ந்தவர்‌ க மதீ நோக்கிப்‌ புறப்பட்டார்கள்‌. (புகாரி: 3911, 3932)

மதீனாவில்‌ வரவேற்பு

மதீனாவில்‌ “அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ வந்து விட்டார்கள்‌” என்று கூறப்பட்டது. அவர்களை எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த மக்கள்‌, “அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ வந்து விட்டார்கள்‌! அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ வந்து விட்டார்கள்‌” என்று கூறத்‌ தொடங்கினார்கள்‌. சிறுவர்கள்‌ சந்தோஷமாகக்‌ குதித்தார்கள்‌. அபிசீனிய வீரர்கள்‌ போர்க்‌ கருவி & கொண்டு வீர வி ாட்டுக்களை விளையாடி அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்களை வரவேற்றனர்‌.

ஐநூறுக்கும்‌ மேற்பட்ட அன்சாரித்‌ தோழர்கள்‌ ஒன்று கூடி அவர்களை அழைத்து வந்தார்கள்‌. அவ்வாறு
அழைத்து வரும்‌ போது “நாங்கள்‌ உங்களுக்குக்‌ கட்டுப்‌ படுகிறோம்‌. உங்களுக்கு வழிபடுவோம்‌” என்று கூறிக்‌கொண்டு வந்தார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவின்‌ வீதிகளில்‌ வரும்‌ போது பெண்கள்‌ தங்கள்‌ மாடிகளின்‌ மேல்‌ ஏறிக்‌ கொண்டு பார்த்தார்கள்‌. “இந்தக்‌ கூட்டத்தில்‌ முஹம்மது யார்‌? முஹம்மது யார்‌?” என்று தங்களுக்குள்‌ கேட்டுக்‌கொண்டார்கள்‌. (புகாரி. அபூதாவூத்‌. அஹமத்‌)

மஸ்ஜிதுந்‌ நபவீ- விலைக்கு வாங்கிய நிலம்‌

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது ஒட்டகத்தில்‌ ஏறி மதீனாவின்‌ வீதியில்‌ சென்ற போது அந்த
ஒட்டகம்‌ ஓர்‌ இடத்தில்‌ போய்‌ மண்டியிட்டது. அந்நாளில்‌ முஸ்லிம்கள்‌ சிலர்‌ அங்கு தான்‌ தொழுது
கொண்டிருந்தார்கள்‌. அந்த இடம்‌ பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தைச்‌ சேர்ந்த சஹ்ல்‌, சுஹைல்‌ என்ற இரண்டூ
அனாதைச்‌ சிறுவர்களுக்குச்‌ சொந்தமான இடமாக இருந்தது. அந்த சிறுவர்கள்‌ ஸஅத்‌ பின்‌ சுராரா (ரலி) அவர்களின்‌ பொறுப்பில்‌ இருந்தார்கள்‌. அந்த இடத்தை பேரீச்சம்‌ பழத்தை உலர வைக்கும்‌ களமாகப்‌ பயன்படுத்தி வந்தார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்களின்‌ ஒட்டகம்‌ அந்த இடத்தில்‌ மண்டியிட்ட போது, “இன்ஷா அல்லாஹ்‌, இதுதான்‌ நமது தங்குமிடம்‌” என்று அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. பிறகு இடத்தின்‌ உரிமையாளர்களான இரண்டூ சிறுவர்களையும்‌ அழைத்து இந்தக்‌ களத்தைப்‌ பள்ளிவாசல்‌ அமைப்பதற்காக விலைக்குத்‌ தாருங்கள்‌” என்று கேட்டார்கள்‌. அதற்கு அவ்விருவரும்‌, “அல்லாஹ்வின்‌ தூதரே அதை உங்களுக்கு அன்பளிப்பாகத்‌ தருகிறோம்‌” என்று கூறினார்கள்‌. ஆனால்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ அச்சிறுவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்க மறுத்து விலை கொடுத்தே வாங்கினார்கள்‌. (புகாரி: 3906)

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனா பள்ளிவாசலில்‌ தான்‌ தங்கினார்கள்‌ என்று பிற்காலத்தில்‌ யாரும்‌ குறை கூற முடியாத அளவுக்கு மஸ்ஜிதுந்‌ நபவீ கட்டுவதற்கான நிலத்தை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள்‌. அம்மக்கள்‌ நிலத்தை அன்பளிப்பாகக்‌ கொடுப்பதற்குத்‌ தயாராக இருந்தாலும்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ வாங்க மறுத்து விட்டார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ வாங்கிய அந்த இடத்தில்‌ இணை வைப்பாளர்களின்‌ மண்ணறைகளும்‌ இடிபாடுகளும்‌ சில பேரிச்ச மரங்களும்‌ இருந்தன. ஆகவே அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ இணை வைப்போரின்‌ கல்லறைகளைத்‌ தோண்டும்‌ படியும்‌, இடிபாடுகளை அகற்றிச்‌ சமப்படுத்தும்படியும்‌ உத்தரவிட்டார்கள்‌.

அவ்வாறே சமப்படுத்தப்பட்டன. பிறகு நபி (ஸல்‌) அவர்களின்‌ உத்தரவின்‌ பேரில்‌ பேரிச்ச மரங்களை வெட்டி கிப்லா திசையில்‌ வரிசையாக நட்டினார்கள்‌. பள்ளி வாசலின்‌ நிலைக்கால்களாக கல்லை நட்டூ வைத்தனர்‌. பள்ளிவாசலைக்‌ கட்டுவதற்காக நபி (ஸல்‌) அவர்களும்‌ சேர்ந்து செங்கல்‌ சுமந்தார்கள்‌. அப்போது நபி (ஸல்‌) அவர்கள்‌ ஒருவித யாப்பு வகைப்‌ பாடலை பாடிக்‌ கொண்டிருந்தார்கள்‌.

மேலும்‌, “யா அல்லாஹ்‌! மறுமையின்‌ பலனே உண்மையான பலனாகும்‌. அத்தகைய மறுமைக்காகப்‌
பாடுபடும்‌ அன்சாரிகளுக்கும்‌ முஹாஜிர்களுக்கும்‌ நீ கருணை காட்டுவாயாக!” என்று துஆச்‌ செய்தார்கள்‌. மக்காவில்‌ துவங்கிய அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்களின்‌ ஹிஜ்ரத்‌ பயணம்‌ மதீனாவில்‌ மஸ்ஜிதுந்நபவிபில்‌ நிறைவடைந்தது. (புகாரி: 3906, 3932)

மதீனாவில்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கு அடைக்கலம்‌ கொடுத்தவர்களை அல்லாஹ்‌ தனது திருமறையில்‌
அன்சார்கள்‌ என்று அழைக்கிறான்‌. அன்சாரிகள்‌ என்றால்‌ உதவியாளர்கள்‌ என்று பொருள்‌. இதுபோல்‌
மக்காவிலிருந்து ஹிஜ்ரத்‌ செய்தவர்கள்‌ முஹாஜிர்கள்‌ என்று அழைக்கப்படுகிறார்கள்‌.