07) பகிரங்க பிரச்சாரம்
அதை தொடர்ந்து தம் சமுதாய மக்கள் அனைவர்களையும் அழைத்து பகிரங்க பிரச்சாரத்தில் ஈடுபடலானார்கள்.
இது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (அல்குர்ஆன்: 26:214) ➚ இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்கள் (பெயர் சொல்லி-) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்பட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர்.
நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை
சொல்வதாக என்னை நீங்கள் நம்புவர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையத் தவிர வேறைதயும் அனுபவித்ததில்லை” என்று பதிலலித்தனர்.
நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையச்) சொன்னார்கள். (இதைக்
கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும் ”
என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. சிறிது சிறிதாக இஸ்லாத்தை ஏற்றோசன் எண்ணிக்கை அதிகமானது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷிகளும் அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ் வின் தூதைரயும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை என்று நபிகள் நாயகம் சொல்லுமளவு சில குலத்தை சார்ந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்திற்கு பக்கபலமாக இருந்தார்கள். (புகாரி: 3504)
நபிகள் நாயகம் தூதுச் செய்தியை எத்திவைத்த போது குறைஷிக் குலத்தார் நபிகள் நாயகத்தை
பொய்யர் என்றார்கள். கேலி செய்தார்கள். பல்வேறு வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்கள்.
இன்னும் சொல்லொண்ணா துன்பங்களை நபிகள் நாயகத்திற்கு அளித்தார்கள்.
ஒரு முறை (கஅபா அருகில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (சஜ்தா) செய்து
கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷிகல் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஜத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சல்வைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் தலையே உயர்த்தவில்லை. உடேன ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து எடுத்து விட்டு, அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷித் தலைவர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உமய்யா பின் கலஃப் …அல்லது உபை பின் கலஃப்… ஆகியோரை நீ கவனித்துக் கொள்” என்று பிரார்த்தித்தார்கள். அதன்படியே அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்டார்கள். (புகாரி: 3854)
“மற்றொரு முறையும் இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பெரும் துன்பத்தை அளித்தார்கள். ஒரு முறை “நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் “ஹிஜ்ர்’ பகுதியில் தொழுது
கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது
தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், ” “என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?” (அல்குர்ஆன்: 40:28) ➚ என்று கேட்டார்கள். (புகாரி: 3856)
நபிகள் நாயகம் அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமைடந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று
கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்கைளைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பேமயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக்
கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாடல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்க வில்லை.
ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆ-ப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையே உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத் தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடு வதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பி யுள்ளான்” என்று கூறினார்கள்.
உடேன, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். உடனே, “(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.
இது தாம் சந்தித்த பெரும் துயரங்களில் ஒன்றாக நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்கள் (புகாரி: 3231)
இப்படி தம் சமுதாயத்தாரால் பல துன்பங்கைள சந்தித்துள்ளார்கள். ஆனாலும் நபி ஸல் அவர்களின் பெரிய தந்தை அபுதாலிப் குரைஸி தலைவர்களில் பெரிய தலைவராக இருந்ததினால் நபி (ஸல்) அவர்களுக்கு கடுமையாக தொல்லை கொடுக்க பயந்தார்கள். (அஹ்மத்: 3650)
நபிகள் நாயகத்தை தொல்லை கொடுத்தது மட்டுமின்றி அவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கைளயும் கடுமையான முறையில் துன்புறுத்தினார்கள்.
ஆண், பெண் பாகுபாடின்றி நம்பிக்கை கொண்ட அனைவரும் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் சிரமப்பட்டார்கள்.
மக்காவில் இஸ்லாத்தை ஆரம்பத்தில் வெளிப்படுத்தி ஏற்றுக் கொண்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்), அபூபக்ர், அம்மார், அம்மாரின் தாயார் சுமையா, சுஹைப், பிலால், மிக்தாத் ஏழு நபர்களாவர். அவர்களில் நபியவர்களை அவர்களது சிறிய தந்தை அபூதாலிப் மூலமாக (சித்ரவதையிலிருந்து) அல்லாஹ் தடுத்துக் கொண்டான். அபூபக்ர் அவர்களை அவரது குடும்பத்தாரின் மூலமாக அல்லாஹ் தடுத்துக் கொண்டான். மற்றவர்களை இணை வைப்பாளர் பிடித்து அவர்களுக்கு இரும்புக் கவசங்களை அணிவித்து சுடு மணலில் கிடத்தினார்கள்.
அவர்களில் பிலாலைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் விரும்பியவர்களின் மூலமாக விடுவித்துக் கொண்டார்கள். ஏனெனில் அவர் தன்னளவில் சுதந்திரமில்லாத அடிமையாக இருந்தார். சமூக அந்தஸ்த்திலும் சிறுமைப் படுத்தப்பட்டவராக இருந்தார். எனவே அவரை சித்ரவதை செய்வார்கள். சிறுவர்களிடம் பிலாலைக் கொடுத்து விடுவார்கள். அந்தச் சிறுவர்கள் பிலாலை மக்காவின் பள்ளத்தாக்குகளில் இழுத்துச் செல்வார்கள். அப்போதெல்லாம் பிலால் ரலியவர்கள், அஹத் அஹத் (அல்லாஹ் ஒருவன், அல்லாஹ் ஒருவன்) என்று
சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : (இப்னுமாஜா: 147) , (அஹ்மத்: 3640)
துன்பத்திற்கு ஆளாக்கப்ட்ட நபித்தோழர்களில் கப்பாப் (ரலி) அவர்களும் உண்டு. காலம் கடந்த பிறகும் அவருடைய உடல்களில் ஆரம்ப காலத்தில் துன்புறுத்தப்பட்ட வடுக்கள் மறையவில்லை.
கப்பாப் (ரலி) அவர்கள் உமர் அவர்களின் அவைக்கு ஒரு தடவை வருகை தந்தார்கள் அப்போது உமர் (ரலி) அவர்கள் கப்பாபே நெருங்கி வாரும் உன்னை விட இந்த சபைக்கு மிக தகுதியானவர் யாரும் இல்லை என்று கூறினார்கள் அப்போது கப்பாப் (ரலி) அவர்கள் தன்னுடைய முதுகில் குரைஷிகள் செய்த வேதனையே காண்பித்தார்கள் (இப்னு மாஜா: 150)
இஸ்லாத்தை ஏற்றதாலும் அதை வெளிப்படுத்தியதாலும் அடி, உதைகளுக்கு அபூதர் (ரலி)
அவர்களும் ஆளானார்கள். இது பற்றி (புகாரி: 3522) இடம் பெற்றுள்ளது.
இப்படியாக எண்ணற்ற முஸ்லிம்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்று
சொன்னதற்காகவா சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
சில நபித்தோழர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் இணைவைப்பாளர்கள் அளிக்கும் துன்பம் தாளமுடியாமல் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து முறையிட்ட போது பொறுமையே கடைபிடிக்கும் படி நபிகள் நாயகம் அறிவுறுத்தினார்கள்.
இது பற்றி கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையனைணயாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகள்) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக்
கொள்கைய ஏற்று இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலையின் மீது
வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும்.
ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற் கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ’விலிருந்து “ஹளர மவ்த்’ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன்னார்கள். (புகாரி: 3612)
மக்கா காஃபிர்களின் கொடுமைகளிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் பாதுகாப்பாக அபூதாலிப் அவர்கள் இருந்தார்கள். அபூதாலிப் அவர்களின் மரணம் நபியவர்களுக்கு மிகப் பெரும் பாதிப்பாக இருந்தது.
முஸய்யப்(ரலி) அறிவித்தார்.
(நபியவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், ‘என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்’ எனக் கூறினார்கள்.
அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், ‘அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, ‘நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)’ என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்’ என்று கூறியதும், ‘இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று’ (அல்குர்ஆன்: 9:113) ➚ என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (புகாரி: 1360)
அபீதாலிப் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து நபி அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து
கதீஜா (ரலி) அவர்களும் மரணமடைந்தார்கள்.
அன்னை ஹதீஜாவைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:”மக்கள் என்னை நிராகரித்த போது , கதீஜா என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்யரெனக் கருதியபோது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கிய போது அவர் என்னைத் தனது செல்வத்தில் சேர்த்துக் கொண்டார். அல்லாஹ் அவர் மூலமாகத்தான் எனக்கு குழந்தைகளைக் கொடுத்தான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் இல்லாமல் செய்து விட்டான். ”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : (அஹ்மத்: 23719)
கதீஜாவுக்கு நற்செய்தி கூறுங்கள்; அவருக்கு சொர்க்கத்தில் முத்தாலான ஒரு மாளிகை உள்ளது! அதில் வீண் கூச்சலோ எந்த சிரமமோ இருக்காது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (புகாரி: 1792)
அபூ தாலிப் அவர்களும், கதீஜா (ரலி) அவர்களும் மரணித்த ஆண்டினை வரலாற்றில் “கவலை ஆண்டு” என்று வர்ணித்துள்ளார்கள்.