07) நபிமார்கள் அறிய முடியுமா?
நூல்கள்:
மறைவான ஞானம் இறைவனுக்கே !
நபிமார்கள் மட்டும் இவ்விசயத்தில் மற்ற மனிதர்களை விட வித்தியாசப்படுவார்கள். ஏனெனில் இவர்கள் அல்லாஹ்வின் தூதுவர்களாக இருக்கிறார்கள். எனவே, தான் அல்லாஹ்வின் தூதர் என்று நிரூபிக்க ஒருசில அற்புதங்கள், ஒரு சிலமறைவானவிசயங்கள் அல்லாஹ்வின் மூலம் கொடுக்கப்பட்டன. இதன் மூலமாக தாங்களின் கொள்கைகளை மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தனர்.
இப்படி மனிதன் செய்ய முடியாத அற்புதங்களை அவர்கள் செய்து காட்டவில்லையானால், இந்த நபிமார்களும் சாதாரண மனிதர்கள் தாம் (இறைத்தூதர்கள் இல்லை) என எண்ணி முழுக்க முழுக்க இவர்களின் கொள்கையை புறக் கணித்துவிடுவார்கள். எனவே ஒரு சில மறை வான விசயங்கள், அற்புதங்கள் கொடுப்பது அவசியமாகின்றது. எனினும் முழுக்க மறைவான விசயத்தை அறியும் ஆற்றலை கொடுக்கவில்லை என்பதை நபிமார்களைப்பற்றி
குறிப்பிடும் வசனங்கள் தெரிவிக்கின்றன.