07) தீயவர்களின் மண்ணறை வாழ்க்கை
நூல்கள்:
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை
07) தீயவர்களின் மண்ணறை வாழ்க்கை
வேதனை ஆரம்பம்
தீயவர்களின் உயிர் வாங்கப்படும் போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகின்றது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும் போது அவர்களுக்குப் கொடுக்கப்படும் வேதனையைப் பற்றி பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.
وَلَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ
(ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!’ என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ
ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ
அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்? அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்ததுமே இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.
(அல்குர்ஆன்: 47:27) ➚,28)