07) ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனைகள்!
மனிதன் பாதிக்கப்படும்போது சிரமத்திற்கு உள்ளாக்கப்படும் போது படைத்தவனிடம் முறையிடுகின்றான். படைப்பினங்களின் அட்டூழி யங்கள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் அவன் பாதிக்கப் படும்போது படைத்தவனிடம் முறையிட்டு அவன் சிரமங்களை குறைக்க, அல்லது முற்றிலுமாக நீக்க பிரார்த்தனை செய்கின்றான். இவ்வாறு செய்கின்ற பல பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். சில அவனின் நன்மை கருதி கேட்டது கிடைக்காமல் போவதும் உண்டு.
ஆனால் சில பிராத்தனைகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கேட்படும் துஆ, குறிப்பிட்ட நபர்களுக்காக கேட்கபடும் துஆ என்று நபிகளார் விளக்கி யுள்ளார்கள். அவற்றின் விவரங்களை இங்கு காண்போம்.
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை
நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்து விட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சியம் சொல்லும் படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், ‘அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கட மையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டுவிட்டால் ‘நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழை களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்’ என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்த னைக்கு பயந்துகொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை என்று முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : (புகாரி: 1496), (முஸ்லிம்: 29)
இந்த வகையான பிரார்த்தனையில் உள்ளதுதான் ஸஅது (ரலி) அவர்களின் சம்பவமும். இதுபோன்று பாதிக்கப்பட்டவர் கேட்டதினால் அல்லாஹ் ஏற்றுக் கொண்ட சம்பவமும் நபியவர்கள் காலத்தில் நடந்துள்ளது.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை (பதவியிலிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ரலி) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நிய மித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என் பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவ ழைத்து; “அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)” என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (சஅத் பின் அபீவக்காஸ் – ரலி) அவர்கள், “அல் லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்து வந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிட வில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி (நமது) எண்ண மும் அதுவே’ என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ‘ஒருவரை’ அல்லது ‘சிலரை’ சஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ரலி) அவர்கள் குறித்து கூஃபாவாசிகளிடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகளிடம் விசாரனை மேற்கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்ளி வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரலி) அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்:
சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்ல மாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அளிக்கும் போது நீதியுடன் நடக்கமாட்டார்” என்று (குறை) கூறினார்.
இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்: அல் லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப் போகிறேன்” என்று கூறிவிட்டு, “இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்லி யிருந்தால் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால் அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளா மையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!” என்று பிரார்த் தனை புரிந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனை களுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்களின் பிரார்த்தனை என் னைப் பீடித்துவிட்டது” என்று கூறுவார்.
நூல் (புகாரி: 755)
சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதா வது
அர்வா பின்த் உவைஸ் என்ற பெண், எனக்குரிய வீட்டின் ஒரு பகுதி தொடர்பாக வழக்காடினாள். அப்போது நான், ‘அவளையும் அந்த வீட்டையும் விட்டுவிடுங்கள். ஏனெனில், ‘யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தின் மேற்பகுதியிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். இறைவா! அவள் (தனது வாதத்தில்) பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வை யைப் பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்து விடு” என்று கூறினேன்.
இந்த ஹதீஸை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக் கும் முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர் கள் கூறுகிறார்கள்:
பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வையற்றவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். “சயித் பின் ஸைதின் பிரார்த்தனை எனது விஷயத்தில் பழித்துவிட்டது” என்று கூறுவாள். இந் நிலையில் அவள் (ஒரு நாள்) தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்த கிணறு ஒன்றை அவள் கடந்து சென்றாள். அப் போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது சவக் குழியாக அமைந்தது.
நூல் :(முஸ்லிம்: 3290)
ஒரு முஸ்லிம் சகோதருக்காக அவர் அங்கு இல்லாத நிலையில் அவரின் நன்மையை மட்டும் மனதில் கொண்டு அவரின் நலனுக்காக நாம் பிரார்த் தனை செய்தால் இதைப் போன்று நமக்கும் கிடைக்க வானவர்கள் பிரார்த் தனை செய்வார்கள். வானவர்கள் ஒருவருக்கு பிரார்த்தனை செய்வார்கள் என்றால் படைத்தவனின் கட்டளை இல்லாமல் செய்யமாட்டார்கள். படைத்த வனின் கட்டளையாக அது இருப்பதால் அந்த பிரார்த்தனை நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக் காகப் பிரார்த்திக்கும்போது, வானவட் “உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!” என்று கூறாமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் :(முஸ்லிம்: 5279, 5280, 5281)
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
1. நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 3358)
இரவின் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது கேட்கும் துஆ
இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு “லாயிலாஹ இல்லல் லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹமீது, வஹுவ அலா குல் ஷையின் கதீர். அல்ஹம்துல்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது: அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் தூயவன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை”) என்று கூறிவிட்டு, ‘அல்லாஹும்ம ஃக்பீர்லி (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்த னையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி),
நூல் : (புகாரி: 1154)
(நீங்கள் இணை கற்பிப்பவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடி யைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப்
போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல் லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!
உளுச் செய்து (தூய்மையான நிலையில்) அல்லாஹ்வை நினைவுகூர்ந்து இரவை கழித்தவனின் பிரார்த்தனை
தூய்மையான நிலையில் இறைவனை நினைவுகூர்ந்து இரவு கழிக் கிற எந்த முஸ்லிமும் (தீடீரென) இரவில் விழிக்கும்போது, அல்லாஹ்வி டத்தில் இம்மை மற்றும் மறுமை நன்மையைக் கேட்டால் அல்லாஹ் கொடுக்காமல் இருக்க மாட்டான். அதை
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி), நூல் : (அபூதாவூத்: 4385), (அஹ்மத்: 21037)
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத் தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
மீனுடையவர் தனது பிரார்த்தனையான, “லாயிலாஹா இல்லல்லா அன்த சுப்ஹானக்க இன்னீ குன்தூ மினள்ளாலிமீன்” என்பதை மீனின் வயிற்றில் இருந்து கொண்டுதான் செய்தார்கள். எனவே, முஸ்லிமான மனிதர் ஒருவர் ஏதேனும் ஒரு விசயத்தில் அந்தப் பிரார்த்தனையை செய்தால் அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளா மல் இருக்கமாட்டான்.
அறிவிப்பவர்: ஸஅது (ரலி),
நூல் : (திர்மிதீ: 3427), (அஹ்மத்: 1983)
சோதனை ஏற்படும் போது பொறுமை மேற்கொண்டு செய்யப்படும் பிரார்த்தனை
“ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், ‘அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்ஃப் லீ கைரம் மின்ஹா’ (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன் மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவி டச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் “அபூசலமாவைவிட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதல் நாடு துறந்து வந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)” என்று கூறினேன். ஆயி னும், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன் னால்லாஹி… என்று நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பி, தமக்காக என்னைப் பெண் கேட் டார்கள். அப்போது நான் “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன் கோபக்காரி ஆவேன்” என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல் லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி).
நூல் :(முஸ்லிம்: 1674)
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர்; இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர்; அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிருந்து பெரும் பாறையொன்று உருண்டுவந்து குகைவாசலைஅடைத்து டது. அப்போது அவர்கள் “நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது” என்று தமக்குள் கூறிக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர், “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கு பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக நான் வந்தேன். எனது தாயும், தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். அவர்க ளுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ, என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர்.
ஆகவே, இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்தி ருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டுஅகற்று!” எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர் “இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தார்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்கு பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக்கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவுகொள்ள முனைந்து) விட்டபோது, “முத் திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுதி தரமாட்டேன்!” என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திருந்து விலகிக்கொண்டேன். அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந் தும் அவளை விட்டுத் திரும்பிவிட்டேன்; நான்அவளுக்குக் கொடுத்த தங்க நாயணத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உனது திருப் தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டு அகற்று” எனக் கூறினார். பாறை விலகியது; ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், “இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களது கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தமது கூலி யை விட்டுவிட்டுச் சென்று விட்டார். அவரது கூயை நான் முதலீடு செய்து, அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார்.
“அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை எனக்குக் கொடுத்து விடும்!” என்று கூறினார். “நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிருந்து கிடைத்தவைதாம்!” என்று நான் கூறினேன். அதற்கவர் “அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். நான் உம்மை கேலி செய்ய வில்லை! என்று நான் கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடா மல் ஓட்டிச்சென்று விட்டார். “இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டு அகற்று!” எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்று விட்டனர்!. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : (புகாரி: 2272)
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6502)