07) ஆதாரம் : 6

நூல்கள்: பைபிள் ஒளியில் இயேசு

14. பாதிப் பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15. அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

(யோவான் 7 ; 14 – 18)

‘என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது’

‘அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்’

‘தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்’

இவை அனைத்துமே இயேசு கூறிய வாசகங்களாகும். ஒவ்வொரு வாசகத்திலும் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதையும், இறைச் செய்திகளைத்தான் நான் எடுத்துரைக்கிறேன், எனது சுய கருத்துக்களை அல்ல என்று இயேசு உறுதிப்படுத்திக் கூறுகிறார். நடுநிலையோடும், நியாயக் கண்ணோட்டத்துடனும் இவ்வசனங்களைப் படிக்கின்ற யாவரும் இதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்