07) ஆடுவதும் பாடுவதும் அற்பக் காசுக்கு!

நூல்கள்: ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

என் கண் குளிர்ச்சியே!

இரு பேணுதல் மிக்கவர்களின் சந்ததியே!

அலீயின் குமாரர் ஹுஸைனே!

உதவி தாருங்கள்!

என் கண்களின் தீங்கை என்னை விட்டும் தடுத்து விடுங்கள்

இந்தக் கவிதை வரிகள் ஹுஸைன் மவ்லிதில் பொதிந்து கிடக்கும் நரக நெருப்புப் பொறிகளாகும். காசுக்காக கூவிப் பிழைக்கும் கூட்டம், “ஆடுவதும் பாடுவதும் காசுக்கு! பல ஆளை குல்லா போடுவதும் காசுக்கு!’ என்பதற்கு ஏற்ப ஆடி, ஆடி மவ்லிதுப் பாடலைப் பாடி சம்பாதிக்கிறார்கள்.

தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற் காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித் ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.

(அல்குர்ஆன்: 2:79)

இந்த வசனத்திற்கு எடுத்துக் காட்டாக இவர்கள் திகழ்கின்றனர்.

“மவ்லிதுகள் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்கின்ற கவிதைகளாகும்; மவ்லிதுகள் நல்லவர்களின் புகழைப் பாடுகின்ற புகழ் மாலைகளாகும்; இதைக் கூடாது என்று இந்த வஹ்ஹாபிகள் கூறுகின்றனர்’ என்றெல்லாம் மவ்லிதுக்கு பரேலவிகள் வக்காலத்து வாங்குகின்றனர். சில சமயங்களில் மவ்லிதுகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றே கூறுகின்றனர். அத்துடன் இவர்கள் குர்ஆனை அற்ப விலைக்கு விற்கும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களை நரக நெருப்பை சாப்பிடக் கூடியவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.

அல்லாஹ் இவர்களிடம் பேசாமல் புறக்கணித்து, அவர்களின் பாவங்களை விட்டு தூய்மைப்படுத்தவும் மறுத்து விடுகின்றான். துன்புறுத்தும் வேதனையையும் அளிக்கின்றான்.

யாரும் இருக்கமாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந் தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள் மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்று வான்” என்று கூறினார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்‘ என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” (8:9) எனும் வசனத்தை அருளினான்.

அவ்வாறே நபி (ஸல்) அவர் களுக்கு வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உதவியளித்தான். (சுருக்கம்)

நூல்: (முஸ்லிம்: 3309)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவனது உதவியை அல்மதத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும் வேறு வார்த்தைகளில் கேட்கிறார்கள். ஆனால் இதற்குப் பதிலளிக்கும் போது, “மதத்’ என்ற வேர்ச் சொல்லைக் கொண்ட முமித்துக்கும், யுமித்துக்கும் என்ற வார்த்தைகளில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்.

“(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 3:124)

இதே ஹதீஸின் பிற்பகுதியில் நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் எதிரி ஒருவரின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதைப் பற்றி விவரிக்கும் நபி (ஸல்) அவர்கள், “மதத் – உதவி’

என்ற வார்த்தையைப் பயன் படுத்துகின்றார்கள்.

இந்த வார்த்தை குர்ஆனில் அல்லாஹ் மற்றும் அடியார்களின் உதவியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சில உதவிகளை சில சூழல்களில் அல்லாஹ்விடம் மட்டுமே பெற முடியும். அத்தகைய உதவியை அல்லாஹ் அல்லாதவர்களிடம் இந்தக் கவிஞன் கோருகின்றான் என்பதை இந்தக் கவிதை வரிகளின் பிற்பகுதி எடுத்துரைக்கின்றது.

அந்த அடிப்படையில் அல்லாஹ் விடம் கேட்க வேண்டிய உதவியை அவன் அல்லாதவர்களிடம் கேட்பதால் இங்கே அல்லாஹ்வுக்குப் பகிரங்கமாக இணை வைக்கின்றனர். இந்தக் கவிதை வரிகளைப் பாடுகின்ற இந்த ஆலிம்களும் லெப்பைகளும் அவனுக்குப் பகிரங்கமாக இணை வைக்கின்றனர்.

இந்த அடிப்படையில் இது இந்தக் கவிதையில் இடம் பெற்ற முதல் இணை வைப்பாகும். இப்போது இரண்டாவது இணை வைப்பைப் பார்ப்போம்.

கண்களின் தீங்கை விட்டும்…. என்று இந்தக் கவிஞன் கூறுகின்றான். கண்களின் தீங்கு என்று சொல்லும் போது அதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

கண்கள் சில துரோகங்களைச் செய்யும். அதையும் கண்கள் செய்யும் தீங்கு என்ற இந்த வார்த்தை குறிக்கும். அதுபோல் கண்களில் ஏற்படுகின்ற நோய்கள், வலி ஆகியவற்றையும் தீங்கு என்ற வார்த்தை குறிக்கும்.

இவ்விரண்டில் இந்தக் கவிஞன் எதைக் குறித்துப் பேசினாலும் அது கலப்பற்ற இணைவைப்பாகத் தான் ஆகும்.

முதலில் கண்கள் செய்கின்ற துரோகம் என்ற தீங்கைப் பற்றிப் பார்ப்போம்.

சில கட்டங்களில் கைகளால் செய்ய முடியாத காரியத்தை ஒருவர் கண்களால் செய்துவிட முடியும்.

சிலர் தங்கள் எதிரிகளைக் கொலை செய்யுமாறு தங்கள் அடியாட்களுக்கு உத்தரவிடும்போது, அடுத்தவர் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கண் சாடை செய்தே கொலை செய்து விடுகின்றனர்.

பெண்களைக் கண்டதும் அல்லாஹ் போட்டிருக்கும் தடைகளைத் தாண்டி, கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு கண் பார்வைகள் பாய்ந்து விளையாடுகின்றன. இவையெல்லாம் கண்கள் செய்கின்ற துரோகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

கண்கள் செய்கின்ற இந்தத் துரோகத்தைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும்உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

(அல்குர்ஆன்: 40:19)

அடியார்களின் கண்கள் ஆடுகின்ற இந்த ஆட்டத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான் எனும் போது இந்த ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது தெளிவாகி விடுகின்றது. இதை எப்படி அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்க முடியும்?

பார்வையைப் படைத்த நாயன்

உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறை வாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

(அல்குர்ஆன்: 32:9)

இந்த வசனத்தில் பார்வை, செவிப்புலன் போன்றவற்றை அவனே படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

வானத்திலிருந்தும்பூமியிலி ருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்செவிப்புலனையும்பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும்உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்காரியங்களை நிர்வகிப்பவன் யார்?” என்று கேட்பீராக! அல்லாஹ்‘ என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா” என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன்: 10:31)

செவி, பார்வைகளுக்கு அவனே உரிமையாளன் என்று கூறுகின்றான்.

அதனால் ஒருவனுக்குக் கண்களில் தீங்கு ஏற்படும் போது அந்தத் தீங்கை விட்டும் தடுக்கின்ற ஆற்றலைப் பெற்ற அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஹுஸைன் (ரலி) அவர்களிடம் போய் இந்தக் கவிஞன் கேட்கின்றான் என்றால் இது முழுமையான இணைவைப்பாகும். அதை ஆதரித்து, ஆமோதித்துப் பாடுகின்றவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் காரியத்தையே செய்கின்றார்கள்.

அடுத்து, கண்களின் தீங்கு என்ற கவிஞனின் கருத்து, கண்களில் ஏற்படுகின்ற வலி, நோய் போன்றவற்றைக் குறிக்குமானால் அதுவும் இறைவனுக்கு இணை வைக்கின்ற காரியமேயாகும்.

இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் கேட்கின்றான்:

“உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:46)

கண் பார்வை என்பது அல்லாஹ்வின் அளவிட முடியாத மாபெரும் அருட்கொடையாகும். இந்த அருட்கொடையில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அவனிடம் தான் உதவி தேட வேண்டும். அதன் பின் அவன் அனுமதித்தபடி அதற்குரிய சிகிச்சையைச் செய்ய வேண்டும்.

கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண்வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது கண்ணில் எச்சில் உமிழ்ந்து அவருக்காக துஆச் செய்கின்றார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, “நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ் வையும் அவனது தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் நேசிக்கிறார்கள்” என்று சொன்னார்கள். மக்கள், “நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?” என்று தமக்குள் (“இன்னாரிடம் கொடுப்பார்கள்‘ என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ் லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) “அலீ எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அலீ அவர்களுக்குக் கண் வலி” என்று சொல்லப்பட்டது. ஆகவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி (ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரு கண்களிலும் தமது எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வலி நீங்கிட) துஆ செய்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள்.

நூல்: (புகாரி: 3009, 4210)

ஹுஸைன் (ரலி) அவர்களைக் கடவுளாக்கி, அவர்களிடம் உதவி தேடும் விதமாகத் தான் இந்தக் கவிதை வரிகளை ஓதுகின்றார்கள். அந்த ஹுஸைன் (ரலி) அவர்களின் தந்தை அலீ (ரலி) அவர்களோ தாமாகக் கண்வலியைப் போக்கிக் கொள்ளவில்லை. போக்குகின்ற ஆற்றலும் அவர்களுக்கு இருக்க வில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களும் எச்சில் உமிழ்ந்து விட்டு சும்மா இருக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். கண்வலி ஏற்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் ஹுஸைனைக் கடவுளாகச் சித்தரிக்கின்ற இந்தக் கவிஞன், ஹுஸைனிடம் நிவாரணம் கேட்டுப் பிரார்த்தனை செய்கின்றான். இது பகிரங்க இணைவைப்பு இல்லாமல் வேறென்ன?

இதைத் தான் இந்த ஆலிம்கள் உலக ஆதாயத்திற்காக, அற்ப கிரயத்திற்காக ஓதி அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.

(அல்குர்ஆன்: 5:72)

இந்த வசனத்தைக் காற்றில் பறக்க விட்டுள்ளனர். இவர்களுக்கு அல்லாஹ்வின் அச்சமோ, மறுமை சிந்தனையோ கிடையாது.

அவர்களுக்குப் பின்னர் மற்றொரு சமுதாயத்தினர் அவர்களுக்குப் பகரமாக வந்தனர். அவர்கள் வேதத்தை வாரிசு முறையில் பெற்றனர். (அதன் மூலம்) இந்த மட்டமான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். எங்களுக்கு மன்னிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். மீண்டும் அது போன்ற அற்பப் பொருள் அவர்களுக்குக் கிடைத்தால் அதையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக்கூடாது என்று அவர்களிடம் வேதத்தில் (தெளிவு படுத்தி) உறுதிமொழி எடுக்கப் படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறை வனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது. (இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?

(அல்குர்ஆன்: 7:169)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்ற சாரார் இவர்கள் தான். அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறி கைமடக்குகள் வாங்கிப் பிழைக்கின்ற ஆசாமிகளாக உள்ளனர்.