10) ஹிஜ்ரத் பயணம்
மக்காவில் இணைவைப்பாளர்களால் எண்ணற்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் அங்கிருந்து, தனது சொந்த ஊரை விட்டு, மதீனாவிற்கு நாடூ துறந்து
சென்ற நிகழ்ச்சியான ஹிஜ்ரத் தான் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக
அமைந்தது என்று கூறலாம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஹிஜ்ரத்தைப் பற்றி இங்கு சுருக்கமாகக் காண்போம்.
மக்கத்து முஷ்ரிக்குகளின் தொல்லைகளால் நபித் தோழர்கள் மக்காவைத் துறந்து வேறு
நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன்
அபிசீனியா நாட்டிற்கு உஸ்மான் ரலி) மற்றும் அவர்களது துணைவியாரும் நபி (ஸல்)
அவர்களின் மகளுமான ரூகையா ருலி) ஆகியோர் உட்பட பல நபித் தோழர்கள் ஹிஜ்ரத்
செய்தார்கள்.
அபிசீனியாவில் அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராக
இருந்தாலும் அங்கு அடைக்கலமாக வந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதற்கோ
தங்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றவோ தடை ஏதும் இருக்கவில்லை
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அந்தக் கனவில் முஸ்லிம்கள்
ஹிஜ்ரத் செய்வதாக நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை நோக்கி “இரண்டூ கருங்கல் மலைகளுக்கு இடையில் பேரீச்ச
மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செய்கின்ற நாடாக நான் காட்டப்பட்டேன்”
என்று கூறினார்கள். (புகாரி: 3622)
நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்ட நபித் தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யத்
துவங்கினார்கள். முஸ்அப் பின் உமைர்ருலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகியோர் முதன் முதலில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து, அங்குள்ள முஸ்லிம்களுக்குக் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். பிறகு பிலால் (ரலி), அம்மார் (ரலி), ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோரும் அதன் பிறகு உமர் ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். (புகாரி: 3925)
அபிசீனியாவிற்கு ஏற்கனவே ஹிஜ்ரத் செய்திருந்த நபித் தோழர்கள், மதீனாவிற்கு மக்கள் ஹிஜ்ரத்
செய்வதைக் கேள்விப்பட்டார்கள். அபிசீனியாவிலிருந்து அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யத்
துவங்கினார்கள். உஸ்மான் (ரலி) இவ்வாறு மக்காவிலிருந்து அபிசீனியாவிற்கும் அபிசீனியாவில் இருந்து மதீனாவிற்குமாக இரண்டூ ஹிஜ்ரத் செய்தவர்கள் தான். (புகாரி: 3927)
மக்காவிலிருந்து மதீனாவிற்குப் பெரும்பாலான நபித்தோழர்கள் ஹிஜ்ரத் சென்று விட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து புறப்பட ஆயத்தமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் ரலி) யிடம், “சற்றுப் பொறுங்கள்! எனக்கு (ஹிஜ்ரத்திற்காக) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்” என்று கூறினார்கள். (புகாரீ: 3605)
நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் விட்டிற்குக் காலை அல்லது மாலை நேரங்களில்
வருபவர்களாக இருந்தார்கள். ஒருநாள் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் மகள்கள் ஆயிஷா ருலி), அஸ்மா ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தார்கள்
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதோ வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்மிடம் வழக்கமாக வரும் நேரத்தில் வராமல் இந்தப் பகல் நேரத்தில் தமது தலையை மூடியவர்களாக வந்து கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.
நண்பகலில் சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தது
விட்டிலிருந்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அபூபக்ர் (ரலி) அவர்கள், “புதிதாக ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த நேரத்தில் நம்மிடம் வந்திருக்கின்றார்கள்’ என்று கூறினார்கள்.
உயரிய பண்புகளுக்குச் சொந்தக்காரரான உத்தம நபியவர்கள் வந்தவுடன் விட்டில் நுழைந்து விடவில்லை வாசலில் நின்று அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் விட்டிற்குள் சென்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் “உங்களுடன் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்” என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! என் தந்ைத தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த விட்டில் என்னுடன் இருப்பவர்கள் உங்களது குடும்பத்தினர் தான். எனது புதல்வியரான அஸ்மா, ஆயிஷா ஆகியோர் தான் இங்கு உள் ர்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள், “மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் “என் தந்ைத தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நானும் உங்களுடன் புறப்பட்டு வர விரும்புகிறேன்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகின்றேன்” என்று பதில் சொன்னார்கள். (புகாரி: 2138, 3905)
நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்களும் சேர்ந்து ஹிஜ்ரத் செல்வதென்று முடிவு செய்யப்பட்டதும், அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நான் பயணத்திற்காகத் தயார் படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன. அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதை இலவசமாகப் பெற்றுக் கொள்ளவில்லை. “நான் அதை விலைக்கே
வாங்கிக் கொள்கிறேன்” என்று பதில் கூறி விட்டார்கள். (புகாரி: 2138)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் போது அதற்குரிய கூலி முழுமையாகத் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த நோக்கம் இதில் வெளிப்படுகிறது. மேலும் எந்த நிலையிலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத ஆன்மீகத் தலைவராக நபி (ஸல்) அவர்கள்
இருந்துள்ளார்கள் என்பதற்கும் இது சான்றாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் ரலி) அவர்களும் மதீனா புறப்படுவதற்கான பயண ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. ஆயிஷாருலி), அஸ்மாருலி) ஆகிய இருவரும் பயணத்திற்கு உணவு தயாரித்தார்கள். அந்த உணவை ஒரு தோல் பையில் போட்டு வைத்தார்கள். அஸ்மா (ரலி) தனது தந்ைத அபூபக்ர்(ரலி) அவர்களிடம், “இந்த தோல் பையைக் கட்டுவதற்கு என்னிடம் ஏதும் இல்லை. எனது இடுப்புக் கச்சு மட்டுமே இருக்கின்றது” என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர்ருலி) “அப்படியென்றால் அதை இரண்டாகக் கிழி” என்றார்கள். உடனே அஸ்மா (ரலி) தனது இடுப்புக் கச்சை இரண்டாகக் கிழித்து உணவு வைக்கப்பட்டிருந்த தோல் பையைக் கட்டினார்கள். இதனால் அஸ்மா ருலி)க்கு “இரண்டு கச்சுடையாள்’ என்று பெயர் வந்து. (புகாரி: 3907)
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்திற்குத் தன்னிடம் இருந்த ஐயாயிரம் அல்லது ஆறாயிரம்
திர்ஹங்களை எடுத்துக் கொண்டார்கள். அப்போது அவர்களின் தந்தையார் அபூகுஹாபா வீட்டிற்கு வந்தார்.
அவருக்குக் கண் பார்வை இல்லை. அவர் அபூபக்ர் (ரலி)யிடம் “எல்லாப் பொருட்களையும் கொண்டு போய்விட்டால் எப்படி?” என்று அச்சத்துடன் கேட்டார்.அதற்கு அஸ்மாருலி) “நமக்காக இவ்வளவு நன்மைகளையும் அவர் விட்டுவிட்டுப் போகின்றாரே” என்று பதில்சொன்னார்.
பிறகு அஸ்மாரலி) சின்னச் சின்ன கற்களை எடுத்து முற்றத்தில் வைத்தார்கள். அபூபக்ர்ரலி) அதன் மேல் திர்ஹங்களை வைத்தார்கள். பிறகு அஸ்மாருலி) அதன் மேல் ஒரு துணியைப் போட்டு மூடி தனது தந்தையிடம் கொடுத்தார்கள்.
அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் தனது மகளாரிடம் “இந்தப் பொருட்களை உங்களிடம் விட்டுச் சென்றால் உங்களுக்கு நல்லது தான்” என்று வருத்தப்பட்டுச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை.
அஸ்மாருலி)க்குத் தனது தந்த பொருட்களை கொண்டு செல்வதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. கண் பார்வை தெரியாத அபூகுஹாபாவையும் ஹிஜ்ரத்திற்காக அழைத்துச் சென்று விடக் கூடாதே! என்பது தான் அவர்களுக்குக் கவலையாக இருந்தது. (ஹாகிம், அஹ்மத்: 25719)
இங்கே ஹிஜ்ரத்திற்கான பயண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க முஷ்ரிக்குகள் நபி (ஸல்) அவர்களை எப்படியேனும் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தனர். அன்றைய தினம் மக்கா நகரில் குறைஷிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்டன. சிலர் நபி (ஸல்)
அவர்களைக் கைது செய்து இதே இடத்தில் கட்டிப் போட வேண்டும் என்று கூறினார்கள். சிலர் நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள். இன்னும் சில கொடியவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்று கொக்கரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களை எங்கே கண்டாலும் கொலை செய்து விட வேண்டும் என்று குறைஷிகள் கூட்டிய
ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டது. ர்கள் அ ரும் ஒன்று சேர்ந்து லாத்,
உஸ்ஸா ஆகிய சிலைகளுக்கு முன்னால் போய் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் மகளார் பாத்திமா (ரலி) அங்கே வந்தார்கள்.
குறைஷிகள் செய்து கொண்ட சத்தியத்தைப் பார்த்த ஃபாத்திமா (ரலி) அழுது விட்டார். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, தான் கண்டதைச் சொன்னார். உங்களைப் பார்த்தாலே கொன்று விட வேண்டும் என்று குறைஷிகள் ரத்தவெறி கொண்டு அலைகின்றார்கள் என்று ஃபாத்திமா ரலி) கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் பாத்திமா ரலி) அவர்களிடம் தண்ணீர் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்கள்.
ஃபாத்திமா (ரலி) தண்ணீர் கொண்டு வரவே அதை வாங்கி நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். பிறகு பள்ளிவாசல் சென்று தொழுதார்கள்.
இந்தச் சமயத்தில் கொலை வெறி கொண்டு அலைந்த குறைஷிகள் அங்கே வந்து இந்தக் காட்சியைக்
கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து கையில் மண்ணை அள்ளி எதிரிகளின் மேல் எறிந்தார்கள்.
அந்த மண் அங்கே நின்றிருந்த முஷ்ரிக்குகள் எல்லோருடைய கண்களிலும் விழுந்தது. இவ்வாறு மண்
விழுந்த முஷ்ரிக்குகள் அனைவரும் பின்னாளில் நடந்த பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். (அஹ்மத்: 2626)
குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக நபி (ஸல்) அவர்களின் விட்டிற்கு வந்தார்கள். அன்றைய இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய வழக்கமான படுக்கையில் படுக்காமல் அதில் அலீ (ரலி) அவர்களைப் படுக்க வைத்து விட்டு விட்டை விட்டூ வெளியேறி விட்டார்கள்.
முஷ்ரிக்குகள் அங்கு வந்து விட்டைச் சுற்றி வளைத்து நின்றார்கள்.படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது முஹம்மது தான் என முஷ்ரிக்குகள் எண்ணிக் கொண்டார்கள்.
காலையில் பார்க்கும் போது படுக்கையிலிருந்து அலீ (ரலி) எழுந்து வருகின்றனர். அலீருலி)யிடம்
முஷ்ரிக்குகள், “உங்களுடைய தோழர் எங்கே?” என்று கேட்க, “எனக்குத் தெரியாது” என்று பதில் சொல்லி விட்டார்கள் அலீருலி)! (அஹ்மத்: 3081)
நபி (ஸல்) அவர்களின் படுக்கையில் படுத்திருக்கும் போது குறைஷிக் கா..பிர்கள் தன்னைக் கொலை கூட செய்து விடலாம் என்பது அலீருலி) அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல! இருப்பினும் நபி ஸஸல்)
அவர்களுக்காக அலீருலி) தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். ஆனால் கா..பிர்களின் குறி, நபி (ஸல்) அவர்களின் மீது தான் என்பதால் அலீருலி)யை விட்டூ விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களைப் பிடிக்க முடியாமல் போய் விட்ட ஆத்திரத்தோடு குறைஷிகள் நபிகளாரைத் தேடிப் புறப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தைக் குறிக்கும் விதமாகத் தான் சூரத்துல் அன்ஃபால் என்ற அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள கீழ்க்கண்ட வசனம் அருளப்பட்டது.
(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை
வெளியேற்றவோ (ஏக இறைவனை, மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன் 8:30)
மக்கத்துக் கா..பிர்களின் சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் காப்பாற்றி நபி (ஸல்) அவர்களை வெளியேறச் செய்த பின், நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர்ரலி) அவர்களும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணத்தைத் துவக்கினார்கள். பயணத்திற்கு உதவியாக இருப்பதற்காக அபூபக்ர் (ரலி) அவர்களின் அடிமையான ஆமிர் பின் ஃபுஹைரா என்பவரை அழைத்துக் கொண்டார்கள்.
ஹிஜ்ரத் புறப்படுவதற்கு முன் நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர்ருலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அரீகத் என்பவரை மதீனாவிற்கு வழி காட்டூவதற்காகக் கூலிக்கு அமர்த்தி இருந்தார்கள். பனூ அப்து பின் அதீ என்ற குலத்தைச் சேர்ந்த அம்மனிதர் குறைஷிக் காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார். இருப்பினும் அந்த மனிதரை நம்பி தங்களது இரண்டு ஒட்டகங்களையும் ஒப்படைத்தார்கள். “மூன்று இரவுகள் கழித்து ஸவ்ர் எனும் குகையில் ஒட்டகங்களுடன் தங்களை வந்து சந்திக்க வேண்டும்” என அப்துல்லாஹ் பின் அரீகத் என்ற வழிகாட்டியிடம் உறுதிமொழி வாங்கி இருந்தார்கள். (புகாரி: 2263)
மக்காவை விட்டுப் புறப்பட்ட நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மக்காவிலிருந்து சுமார்
மூன்று மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஸவ்ர் என்னும் குகையில் தங்கினார்கள். குறைஷிக்
காஃபிர்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு ஸவர் குகையில் ஒளிந்து கொண்டார்கள்.
அவ்விருவருடன் அபூபக்ர்ரலி) அவர்களின் அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா ஆடூ மேய்ப்பவரைப் போல்
பாவனை செய்து கொள்வார். அவர் ஆட்டு மந்தையில் ஒரு ஆட்டை மேய்த்துக் கொண்டிருப்பார். இரவு
நேரம் வந்ததும் அந்த ஆட்டை குகைக்கு ஒட்டி வருவார். அதிலிருந்து பாலைக் கறந்து நபி ஸல்)
அவர்களுக்கும் அபூபக்ர்(ரலி) அவர்களுக்கும் கொடுப்பார். அந்தப் பாலிலேயே அவ்விருவரும் இரவைக் கழித்துக் கொள்வாகர்கள். விடிவதற்குள் ஆட்டை ஓட்டிக் கொண்டு ஆமிர் பின் ஃபுஹைரா மந்தைக்குச் சென்று விடுவார்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் பின் அபீபக்கர் இரவு நேரத்தில் குகைக்கு வருவார். ஸஹர் நேரமானதும் அங்கிருந்து வெளியேறி மக்காவில் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்வார். குறைஷிகள் அவர் தங்களுடன் இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குறைஷிகள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொண்டு இரவு நேரத்தில் குகைக்கு வந்து இருவரிடமும் செய்திகளைச் சொல்லி விட்டுச் செல்வார். (புகாரி: 3905)
“நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் கொலை செய்தோ அல்லது உயிருடன்
கைது செய்தோ கொண்டு வருபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்” என்று குறைஷிக் கா..பிர்கள்
அறிவிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு அவர்கள் நிர்ணயம் செய்த விலை
நூறு ஒட்டகங்கள். நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் ரலி) அவர்களையும் கொண்டு அல்லது
கொன்று வருபவருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் என்று பரிசுகள் நிர்ணயம் செய்து
அறிவிக்கப்பட்டன.
குறைஷிகளில் உள்ள இளைஞர்கள் மதீனா செல்லும் வழியில் தங்கள் தேடுதல்
வேட்டையைத் தொடங்கினார்கள். (புகாரி: 3906)
நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் ரலி) அவர்களையும் தேடியலைந்த குறைஷிக் கா.ஃபிர்கள் அவ்விருவரும் தங்கியிருந்த ஸவ்ர் குகைக்கு அருகே வந்து விட்டார்கள். குறைஷிகள் குகைக்கு உள்ளே கூட பார்க்க வேண்டாம்; குனிந்து தங்களுடைய பாதங்களைப் பார்த்தாலே போதும்! உள்ளேயிருந்த இருவரும் சிக்கிக் கொள்வார்கள் என்ற நிலைக்கு வந்து விட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தலையை உயர்த்திப் பார்த்தார்கள். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன.
அபூபக்ர் ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் யாராவது தமது கால்களுக்குக் கீழே குனிந்து பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வாரே!” என்று அச்சம் தோய்ந்தவர்களாகக் கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே கவலைப்படாதீர்கள். அமைதியாக இருங்கள். எந்த இரண்டு
நபர்களுடன் மூன்றாவதாக அல்லாஹ் இருக்கின்றானோ அந்த நபர்களைப் பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். (புகாரி: 3653)
இது குறித்து அல்லாஹ் தனது திருமறையிலும் கூறுகின்றான்.
நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவளை, மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:40)
அவ்விருவரும் மூன்று நாட்கள் குகையில் தங்கினார்கள். மக்காவில் இருக்கும் போது அவர்களால் கூலிக்கு நியமிக்கப்பட்ட வழிகாட்டி அப்துல்லாஹ் பின் அரீகத் ஏற்கனவே உறுதியளித்த படி ஒட்டகங்களுடன் வந்து நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர்ருலி) அவர்களையும் சந்தித்தார்.
நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மதீனாவை நோக்கித் தொடர்ந்தது. ஆமிர் பின் ஃபுஹைராவும் பயணத்தில் இணைத்துக் கொண்டார். வழிகாட்டி ர்கள் மூ யும் கடற், ய ஒட்டிய வழியில் மதீனாவிற்கு அழைத்துச் சென்றார். இவ்வாறு அன்றைய இரவிலும் மறுநாள் காலையிலும் பயணம் செய்தார்கள். (புகாரி: 2263)
நண்பகல் நேரம் வந்தது. சூரியன் உச்சியை அடைந்ததும் வெயிலின் கடுமை அதிகமானது. இறுதியில்
பாதையில் எவரும் நடமாட முடியாத அளவு வெப்பம் தாக்கியது. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஏதேனும் நிழல் தென்படுகின்றதா? என்று பார்த்தார்கள்.
அப்போது சூரிய வெளிச்சம் படாத நிழல் படர்ந்த பாறை ஒன்று அவர்களுக்குத் தென்பட்டது. அந்தப் பாறை அருகே சென்று அதனடியில் தங்க முடிவு செய்தார்கள். அபூபக்ர்ரலி) அவர்கள் அந்த இடத்தைத் தனது கைகளால் சமப்படுத்தினார்கள். பின்னர் அந்த இடத்தில் ஒரு தோலை விரித்து நபி (ஸல்) அவர்கள் படுப்பதற்காக அந்த இடத்தைத் தயார்படுத்தினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கண்காணித்துக் கொள்கிறேன். நீங்கள் கவலையின்றி உறங்குங்கள்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இரவு பகலாகக் கண்விழித்துப் பயணம் செய்து களைப்பு அபூபக்ர்ரலி) அவர்களுக்கும் இருக்கத் தான்
செய்தது. என்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் அவர்களை உறங்க வைத்து விட்டு அபூபக்ர் (ரலி) அந்த இடத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். (புகாரி: 3615, 3652)
நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருக்க அபூபக்ர் ரலி) அவர்கள் தங்களைத் தேடி யாராவது
வருகின்றார்களா? என்பதைப் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது வழியில்
ஆட்டிடையன் ஒருவன் ஓய்வெடுப்பதற்காக ஆடுகளை ஓட்டிக் கொண்டு அந்தப் பாறையை
நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அபூபக்ர் ரலி) அவனிடம் “இளைஞனே! நீ யாருடைய பணியாள்?” என்று கேட்டார்கள். அதற்கு
அவன் “நான் குறைஷிகளில் ஒருவருடைய பணியாள்” என்று கூறினான். அபூபக்ர் (ரலி) அவனை
அடையாளம் கண்டு கொண்டார்கள். “உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?” என அபூபக்ர்(ரலி)
கேட்டார்கள். “ஆம்! இருக்கிறது” என்று அவன் பதிலளித்தான். “எங்களுக்காக நீ பால் கறந்து தருவாயா?” என்று கேட்டார்கள். அவன் சரி என்று கூறி அவனது மந்தையிலிருந்து ஆடுகளைக்
கூட்டி வந்தான். தூசுகளையும் முடியையும் அகற்றுவதற்காக நன்றாக உதறிக் கொள்ளுமாறு
அபூபக்ர்(ரலி) இடையனுக்குக் கட்டளையிட அவனும் அதே போல் நன்றாக உதறிக் கொண்டு ஒரு
மரப் பாத்திரத்தில் பால் கறந்து கொடுத்தான்.
வெயிலின் கடுமை காரணமாக பால் இருந்த மரப் பாத்திரம் சூடாக இருந்தது. அபூபக்ர்(ரலி)
அவர்கள் பயணத்தில் நீர் அருந்துவதற்காகவும் உளுச் செய்வதற்காகவும் ஒரு தோல்
பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருந்தார்கள். அந்தத் தண்ணீரை எடுத்து சூடாக இருந்த மரப்
பாத்திரத்தின் மீது ஊற்றினார்கள். இதனால் பாத்திரம் சூடு தணிந்து அதன் அடிப்பகுதி குளிர்ந்தது.
அதை எடுத்துக் கொண்டு அபூபக்ர் ரலி) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்)
அவர்களிடம் சென்றார்கள். அந்த நேரம் நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து
விழித்திருந்தார்கள். அபூபக்ர் ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று
கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பாலை வாங்கி அருந்தினார்கள்.
பொதுவாக அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்கு இடையர்கள் தங்கள் ஆடுகளிலிருந்து பால்
கறந்து கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. கால்நடைகளின் உரிமையாளர்களும் இதற்குப்
பொது அனுமதி வழங்கியிருந்தார்கள். இந்த அடிப்படையில் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள்
இடையனிடம் பால் கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் ரலி)யிடம், “நாம் புறப்படும் நேரம் வந்து விட்டதா?” என்று
கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில்
கூறினார்கள். சூரியன் உச்சியை விட்டு சாய்ந்த பிறகு தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.(புகாரி: 2439, 2615, 3652)
காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களை வலை விசித் தேடிக் கொண்டிருக்க இங்கே பயணம் அமைதியாகத்
தொடர்ந்து கொண்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு நன்றாக அறிமுகமானவராக இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வியாபார நிமித்தமாக அடிக்கடி மதீனா சென்று வருபவர்களாக இருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வளவாக மக்களிடம் அறிமுகமாகியிருக்கவில்லை.
மதீனாவிற்குச் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு மனிதர் அவர்களைச் சந்தித்தார். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அபூபக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டார். அபூபக்ர் ரலி) அவர்கள் உண்மையைச் சொன்னால் அதை அம்மனிதர் எதிரிகளிடம் போய் சொல்லி விடக் கூடும். அதே சமயம் பொய் சொல்வதையும் அபூபக்ர்(ரலி) அவர்கள் விரும்பவில்லை.
அம்மனிதரை நோக்கி, “இவர் எனக்கு வழிகாட்டுபவர்” என்று அபூபக்ர் (ரலி) பதில் கூறினார்கள். அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை பயணத்திற்கு வழிகாட்டி என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அபூபக்ர் ரலி) அவர்கள் வழிகாட்டி என்று கூறியது, நபி (ஸல்) அவர்கள் சத்திய மார்க்கத்திற்கும் மனித வாழ்விற்கும் வழிகாட்டி’ என்ற பொருளில் தான். (புகாரி: 3911)
பயணம் அங்கே தொடர்ந்து கொண்டிருக்க மக்காவில் அவர்களைத் தேடும் முயற்சியில் குறைஷிகள் எந்தக் குறையும் வைக்கவில்லை. அங்கு பனூ முத்லிஜ் என்ற கூட்டத்தின் சபை கூடியிருந்தது. அங்கே வந்த குறைஷிக் குலத்தின் தூதர்கள், நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் கொலை செய்தோ அல்லது உயிருடன் கைது செய்தோ வருபவர்களுக்கு தலா நூறு ஒட்டகங்கள் பரிசு என்று அறிவித்தார்கள்.
அந்தச் சபையில் சுராக்கா பின் மாலிக் என்பாரும் அமர்ந்திருந்தார். (இவர் பிற்காலத்தில் முஸ்லிமாகி
விட்டார்) குறைஷித் தூதர்களின் அறிவிப்பைக் கேட்டதும் சபையிலிருந்த ஒரு மனிதர் எழுந்து “சுராக்காவே! சிறிது நேரத்திற்கு முன்னால் நான் கடலோரத்தில் சில உருவங்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவருடைய தோழர்களும் தான் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
அதன் பிறகு சிறிது நேரம் அவையிலேயே இருந்த சுராக்கா எழுந்து தனது வீட்டிற்குச் சென்றார். தனது
அடிமைப் பெண்ணிடம் அவரது குதி 1க் கொண்டு வரும்படி கூறினார். அவளும் குன்றுக்கு அப்பால்
கட்டி வைத்திருந்த குதிரையை அவிழ்த்துக் கொண்டு வந்தாள். குதிரையை வாங்கிக் கொண்ட சுராக்கா தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் அவர்களைத் தேடிப் புறப்பட்டார்.
தனது விட்டின் பின்புற வாசல் வழியாகப் புறப்பட்ட சுராக்கா நபி (ஸல்) அவர்கள் சென்ற பாதையில்
குதிரையை மிக வேகமாகச் செலுத்தினார். நபி (ஸல்) அவர்களை நெருங்கியும் விட்டார். அப்போது அவரது குதிரை கால் இடறி அதிலிருந்து சுராக்கா கீழே விழுந்து விட்டார். சுதாரித்துக் கொண்டு எழுந்த சுராக்கா தனது அம்புக் கூட்டிற்குள் கையை விட்டூ அதிலிருந்து சகுனச் சொற்கள் எழுதப்பட்ட அம்பை எடுத்தார்.
அன்றைய அரபிகளிடம் அம்புகளை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்து வந்தது. அம்புக் கூட்டிற்குள் தங்களுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் சகுனச் சொற்கள் எழுதப் பட்ட அம்புகளை வைத்திருப்பார்கள். அதில் கையை விட்டூ எடுப்பவர் தனக்குச் சாதகமான அம்பு வந்தால் அது நல்ல சகுனம் என்றும், மாறாக வந்தால் கெட்ட சகுனம் என்று நம்பி வந்தார்கள்.
சுராக்கா பின் மாலிக் அம்பு எடுத்து, தன்னால் நபி (ஸல்) அவர்களுக்கும் அவருடன் செல்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்று குறி பார்த்தார். ஆனால் அவர் விரும்பாதது தான் குறியில் வந்தது.
இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் குதிரையில் ஏறிக் கிளம்பினார். குதிரை பாய்ந்து சென்று நபி (ஸல்) அவர்களை நெருங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஒதிக் கொண்டிருந்தார்கள். (புகாரி: 3906, 3915)
சுராக்கா பின் மாலிக் துரத்திக் கொண்டு வருவது தெரியாமலேயே நபி (ஸல்) அவர்களது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கையாக அடிக்கடி திருமபிப் பார்த்துக் கொண்டு பின்னால் சென்றார்கள். இவ்வாறு ஒரு முறை திரும்பிப் பார்த்த போது அங்கே சுராக்கா பின் மாலிக் குதிரையில் வந்து கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ இந்தக் குதிரை வீரர் நம்மை நெருங்கி வந்து விட்டார்” என்று கூறினார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் “கவலைப்படாதீர்கள்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று தைரியமூட்டினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு, “யா அல்லாஹ்! அவரைக் கீழே விழச் செய்” என்று சுராக்காவுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களது துஆ உடனே ஒப்புக் கொள்ளப்பட்டது. அல்லாஹ்வின் அருளால் சுராக்கா வந்து கொண்டிருந்த குதிரையின் முன்னங்கால்கள் இரண்டும் பூமியில் புதைந்து விட்டன. சுராக்கா குதிரையிலிருந்து கீழே விழுந்தார்.
கீழேயிருந்து எழுந்து தனது குதிரையை அரற்றினார். ஆனால் குதிரையின் முட்டுக் கால்கள் வரை பூமியில் புதைந்திருந்ததால் அது எழுந்திருக்க முயற்சி செய்தும் அதனால் முடியவில்லை. மேலும் குதிரை எழ முயற்சி செய்த காரணத்தால் புழுதி கிளம்பி அந்த இடம் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. அப்போது சுராக்கா மறுபடியும் அம்புகளை எடுத்துக் குறி பார்த்தார். அப்பொழுதும் அவர் விரும்பாததே குறியில் வந்தது.
நபி (ஸல்) அவர்களைத் துரத்தி வந்து சிக்கலில் சிக்கிக் கொண்ட சுராக்கா பின் மாலிக், “நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்து இருப்பதாக நான் கருதுகின்றேன். ஆகவே இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிப்பதற்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். மேலும் நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டும் திசை திருப்பி விடுவேன்: என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்றது.
குதிரையில் ஏறி அவர்களை நோக்கி வந்த சராக்கா, நபி (ஸல்) அவர்களை விட்டும் தான் தடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மார்க்கம் தான் மேலோங்கும் என்ற எண்ணம் அவரிடம் தோன்றியது.
அவர் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களுடைய சமுதாயத்தினர் உங்களுக்காகப் பரிசை நிர்ணயம்
செய்துள்ளனர் என்று கூறினார். மேலும் குறைஷிகள் முஸ்லிம்களைப் பற்றி என்னவெல்லாம்
எண்ணுகிறார்கள் என்ற தகவல்களையும் கூறினார். பிறகு தான் வைத்திருந்த பயண உணவுப் பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்கவில்லை.
சுராக்கா மனம் திருந்தியவராக, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எங்களைப் பற்றிய செய்தியை மறைத்து விடு! இங்கேயே நின்று கொள்! எங்களைப் பின்தொடர்ந்து வரும் எவரையும் விட்டு விடாதே!” என்று கூறினார்கள். உடனே சுராக்கா தனக்கு ஒரு பாதுகாப்புப் பத்திரம் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் ஆமிர் பின் ஃபுஹைராவுக்கு உத்தரவிட அவர் பாடம் செய்யப்பட்ட ஒரு தோல் துண்டில் பாதுகாப்புப் பத்திரத்தின் வாசகங்களை எழுதிக் கொடுத்தார்.
அதன் பிறகு சுராக்கா அங்கு நின்று கொண்டு நபி (ஸல்) அவர்களைத் தேடி வருபவர்களிடம், “நீங்கள் தேடி வந்தவர் இங்கே இல்லை. நான் நன்றாகத் தேடி விட்டேன். அதனால் நான் சொல்வதே உங்களுக்குப் போதும்” என்று கூறிக் கொண்டிருந்தார். இவ்வாறு கூறி நபி (ஸல்) அவர்களைத் தேடி வருபவர் அனைவரையும் அவர் திருப்பியனுப்பிக் கொண்டிருந்தார்.
அன்றைய முற்பகல் வரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகப் போர் புரிபவராக இருந்த சுராக்கா
அல்லாஹ்வின் அருளால் பிற்பகலில் நபி (ஸல்) அவர்களைக் காக்கும் ஆயுதமாக மாறி விட்டார்.(புகாரி: 3615, 3906, 3911)
ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காகச் சென்றிருந்த சுபைர் பின் அவ்வாம் ரலி) அவர்கள் தனது வணிகக் குழுவினருடன் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். மதீனாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை வழியில் சந்தித்த சுபைர் ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் ரலி) அவர்களுக்கும் வெண்ணிற ஆடைகளைப் போர்த்தினார்கள்.
இதனிடையே மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவின் புறநகர் பகுதியான ஹர்ரா என்னும் இடத்தில் வந்து, நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
ஒரு நாள் நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்து விட்டூ மதீனா வாசிகள் திரும்பிக்
கொண்டிருந்தார்கள். அப்போது யூதர் ஒருவர் தனது கோட்டையின் மீது ஏறி எதையோ பார்த்துக்
கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் வெண்ணிற ஆடையில் கானல் நீரை விலக்கிக்
கொண்டு வருவதை அந்த யூதர் கண்டார். அவரால் தம்மைக் கட்டுப்படுத்த முடியாமல், “அரபுக் குலமே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களது நாயகர் வந்து விட்டார்” என்று கூறினார்.
உடனே மதீனா முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஹர்ரா என்ற பகுதியில் நபி (ஸல்) அவர்களை அம்மக்கள் சந்தித்தார்கள். (புகாரி: 3906)
மதீனாவாசிகள் ஹர்ரா பகுதியின் வலது பக்கத்திலுள்ள குபா என்ற இடத்தில் பனூ அம்ர் பின்
அவ்ஃப் என்ற கூட்டத்தாரின் குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்தார்கள். இது ரபீவுல் அவ்வல்
மாதம் திங்கள் கிழமையன்று நடந்தது. நபி (ஸல்) அவர்கள் அங்கு மவுனமாக அமர்ந்து
கொண்டிருக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த மதீனா முஸ்லிம்கள் அபூபக்ர் ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் என்று
எண்ணிக் கொண்டு தங்களது முகமனைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால்
அம்மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் மீது வெயில் பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டினால்
அவர்கள் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் நபி (ஸல்) அவர்களை அடையாளம் கண்டு
கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தாரிடம் பதினான்கு நாட்கள் தங்கினார்கள்.
அப்போது தான் இறையச்சத்தின் மீது அடித்தளமிட்ட பள்ளிவாசல் எனப்படும் மஸ்ஜித் குபாவை
நிறுவினார்கள். அங்கு தங்கியிருந்த நாட்களில் அந்தப் பள்ளியில் தான் நபி (ஸல்) அவர்கள்
தொழுகைகளை நிறைவேற்றினார்கள். (புகாரி: 3906, 3932)