06) நபிமார்களின் குடும்பம்

நூல்கள்: நபிமார்கள் வரலாறு

நபிமார்களின் குடும்ப அமைப்பு

நாம் எப்படி நமது வாழ்க்கையில் குடும்பமாக வாழ்கிறோமோ, குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோமா அது போல் நபிமார்களும் தங்கள் வாழ்வில் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள், குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு திருக்குா்ஆனிலும் நபி மொழிகளிலும் நிறைய சான்றுகளைப் பார்க்க முடியும்.

இறை தூதர்கள் என்றால் துறவிகளாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணம் தவறானது என்பதை சுட்டிக்காட்டி நபிமார்களும் மனிதர்கள் என்பதை எல்லா விதங்களிலும் மக்களுக்கு தெளிவு படுத்திய பெருமை இஸ்லாத்தை மட்டுமே சேறும்.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.   (அல்குர்ஆன்: 4:1)

உலகில் பிறந்த அனைவரும் அஞ்ச வேண்டிய ஒரே கடவுள் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் உலகில் பிறக்கும் அனைவருக்கும் மனைவி குழந்தைகள் பெற்றோர்கள் என்று ஒரு குடும்ப வட்டம் உண்டு என்பதை மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

அதே போல் நபி அய்யூப் அவர்கள் தனக்கு ஏற்பட்ட நோயின் போது அல்லாஹ்விடம் வைத்த ஒரு கோரிக்கையைப் பற்றி இறைவன் இப்படிக் குறிப்பிடுகிறான்.

நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.    (அல்குர்ஆன்: 33:6)

மேற் கண்ட வசனம் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி பேசுகிறது. இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் அவர்கள் கூட தமது வாழ்வில் திருமணம் செய்து சிறப்பான முறையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக உள்ளது. நபியவர்களின் மனைவியர் உலகில் உள்ள அனைத்து முஃமின்களுக்கும் அன்னையர் ஆவார்கள். என்ற இந்த வசனம் நமக்க அழகாக ஒரு மேலதிக தகவலையும் சொல்லித் தருகிறது.

ஆதமே! நீயும் உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர் என்று நாம் கூறினோம்.    (அல்குர்ஆன்: 2:35)

அவனே உங்களை ஒரே ஒரு வரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன் அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.    (அல்குர்ஆன்: 7:189)

ஆதமே! இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!    (அல்குர்ஆன்:)

உலகின் முதல் மனிதராகிய நபி ஆதம் அவர்களை படைத்த இறைவன் அவருக்கு துணையாக ஹவ்வா (அலை) அவர்களை ஏற்படுத்தி முதல் மனிதரை முதல் குடும்பமாகவும் பெருக்கினான். ஆதம் மற்றம் ஹவ்வா (அலை) ஆகிய இருவரையும் கொண்ட முதல் குடும்பம் உலகில் தோற்றம் பெற்றதை இறைவன் நமக்கு எடுத்துச் சொல்கிறான்.

ஆகவே நபிமார்கள் மனிதர்கள் என்பதும் அவர்களுக்கும் குடும்பம் இருந்தது என்பதற்கும் மேற்கண்ட வசனங்கள் போதிய சான்றுகளாகும்.

இது வரைக்கும் நபிமார்கள் மனிதர்களில் இருந்துதான் அனுப்பப் பட்டார்கள் என்பதற்கும் அவர்கள் மனிதர்கள் தாம் என்பதற்கும் ஏறாளமான சான்றுகளை நாம் பார்த்தோம்.