06) நபிகளார் பாதுகாப்பிற்காக கேட்ட பிரார்த்தனைகள்’

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் பல்வேற கட்டங்களில் படைத்தவனிடம் பல் வேறு விஷயங்களுக்காக பாதுகாப்பு தேடியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

கோழைத்தனத்திலிருந்து …

நபி (ஸல்) அவர்கள், “

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி, வல்ஹரமி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத் வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி”

என்று பிரார்த்தித்து வந் தார்கள்.

பொருள் : “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாது காப்புக் கோருகின்றேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னி டம் பாதுகாப்புக் கோருகிறேன்”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : (புகாரி: 2823)

இறைவனின் கோபத்திலிருந்து…

ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடி னேன். அப்போது அவர்கள் பள்ளிவாசல் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்கால் பட்டது. அப்போது அவர்கள்

அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத் திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க”

என்று கூறிக்கொண்டி ருந்தார்கள்.

(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி) னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : (முஸ்லிம்: 839)

செய்த பாவத்திலிருந்து…

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘

அல்லாஹும்ம! இன்னீ அவஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல்’

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் எனப் பதிலளித்தார்கள்.

பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறிய வற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

நூல் : (முஸ்லிம்: 5259)

பயனளிக்காத கல்வியிலிருந்து….
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா

என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

பொருள் : இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திருந்தும் ஏற்கப் படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

ஸைத் பின் அர்கம் (ரலி), நூல் : (முஸ்லிம்: 5266)

இறையருள் நீங்குவதிலிருந்து…
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாநி அமத்திக்க, வ தஹவ்வுஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ சகத்திக்க”

என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது.

(பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந் தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : (முஸ்லிம்: 5289)

அனைத்து தீங்கிலிருந்தும் …

சுஹைல் பின் அபீஸாதம் தக்வான் அவர்கள் கூறியதாவது:

(எங்கள் தந்தை) அபூஸாஹ் தக்வான் அவர்கள், எங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு,

“அல்லாஹும்ம ரப்பஸ் ஸமாவாத்தி வ ரப்பல் அர்ளி வ ரப்பல் அர்ஷில் அழீம். ரப்பனா வ ரப்ப குல்ஷையின், ஃபாலிக்கல் ஹப்பி வந்நவா வ முன்ஸிலத் தவ்ராத்தி வல்இன் ஜீவல்ஃபுர்கான், அஊது பிக்க மின் ஷர்ரி குல்ஷையின். அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ், அல்லாஹும்ம! அன்த்தல் அவ்வலு; ஃப லைஸ கப்லக்க ஷைஉன், வ அன்த்தல் ஆகிரு: ஃப லைஸ பஅதக்க ஷைஉன். வ அன்த்தழ் ழாஹிரு ஃப லைஸ ஃபவ்கக்க ஷைஉன், வ அன்த்தல் பாத்தினு ஃப லைஸ தூனக்க ஷைஉன், இக்ளி அன்னா அத்தைன வ அஃக்னினா மினல் ஃபக்ர்”

என்று கூறும்படி உத்தரவிடுவார்கள். மேலும் இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததாகவும் கூறுவார்கள்.

பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அரியணையின் அதிபதியே! எங்கள் இறைவா! அனைத்துப் பொருட்களின் அதிப தியே! தானிய வித்துகளையும் விதைகளையும் பிரித்து தாவர வர்க்கத்தை முளைப்பி)ப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை அருளியவனே!

அனைத்துப் பொருட்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய். இறைவா! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதி யானவன்; உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன்; உனக்கு மேலே வேறொன்றுமில்லை. நீயே அடித்தளமானவன்; உனக்குக் கீழே வேறொன் றுமில்லை. எங்கள் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! வறுமையிருந்து காத்து எங்களைத் தன்னிறைவு கொள்ளச்செய்வாயாக!

நூல் : (முஸ்லிம்: 5254)

கடன் தொல்லையிலிருந்து…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, ‘

அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க் மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வஅஊது பி(க்)கமின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி, அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்.

இறைவா! கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுாகப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத் திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.

(இதைச் செவியற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?” என்று கேட் பார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும்போது பொய் பேக்கி றான்: வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 832)

நச்சு பிராணிகளிடமிருந்து…

நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோ ருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.

அவூது பிகலிமாத் தில்லாஹித் தாம்மத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மா, வ மின் குல்லி அய்னின் லாம்மா

எனும் இந்தச் சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை (யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள்-என்று கூறுவார்கள்.

பொருள் : “அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்”

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : (புகாரி: 3371)

தாங்க முடியாத வேதனையிலிருந்து….

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலி ருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : (புகாரி: 6347)

மனிதர்களின் அடக்கு முறையிலிருந்து…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், “உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடி (அழைத்து) வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)” என்று கூறினார்கள். ஆகவே, அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்,

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்”

என்று அதிகமாகப் பிரார்த்திப்பதை செவிமடுத்துவந்தேன்.

பொருள்: இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்து விட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலி ருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந் தும், பிறமனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : (புகாரி: 6363)