06) கட்டுப்பாட்டைக் கேட்டவர்

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

 

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّة مُسْلِمَةٌ لَكَ

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உணக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குச் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!

(அல்குர்ஆன்: 2:128)

இப்ராஹீம் எப்படிப்பட்டது. பறைசாற்றுகிறான். நபியின் கட்டுப்பாடு என்பதை அல்லாஹ்வே குடும்பத்தார்களை வனாந்தரையில் விட்டுவந்ததும். பச்சிளம் பிள்ளையை பலி கொடுக்கத் துணிந்ததும் உச்சக்கட்டக் கட்டுப்பாட்டின் வெளிப்பாடே! இவ்வாறு கட்டுப்படுவதின் உச்சக்கட்ட காப்பாளராக இருக்கும் இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்விடம் கட்டுப்பாட்டைக் கேட்பதன் மூலம் நான் அல்லாஹ்வின் அடிமைதான் என்பதை ஆணித்தரமாக நமக்கு எடுத்துரைக்கிறார்கள்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் இறைநம்பிக்கை பெண்ணுக்கும் சுயமாக முடிவு செய்வது கொண்ட ஆணுக்கும். தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான்.

(அல்குர்ஆன்: 33:36)

இறைவன் கூறுவதைப்போன்று அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் அதற்கு மறு பேச்சே இல்லாமல் கட்டுப்படுவதுதான் ஏகத்துவத் தந்தை இப்ராஹீம் நபி தனது வாழ்க்கை மூலமாகக் கற்றுத் தரும் மிகப் பெரிய படிப்பினையாகும். மேலும் அந்தக் கட்டுப்பாட்டையும் அல்லாஹ்விடம் தான் கேட்கவேண்டும் என்ற ஏகத்துவப் பாடத்தை இந்தப் பிரார்த்தனை வாயிலாக வலியுறுத்துகிறார்கள்.

இதுபோன்ற பிரார்த்தனை தமது வாழ்வில் இருக்கிறதா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் கட்டுப்பாடே இல்லாததாம்தான் இதுபோன்ற பிரார்த்தனையைக் கேட்க அதிகம் தகுதியானவர்கள் ஆவோம். நமது வாழ்க்கையில் இதுபோன்ற எண்ணற்ற நற்காரியங்கள் கவனிக்கப்படாமலேயே இருக்கின்றன. ஆனால் இப்ராஹீம் நபி இதுபோன்ற விசயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் விடவில்லை. எனவேதான் அவர்களின் வாழ்க்கை வெற்றிக்கு இவையாவும் உறுதுணையாக இருந்தன. எனவே இதுபோன்ற பிரார்த்தனைகளை நாம் அல்லாஹ்விடம் அதிகம் கேட்க வேண்டும்.