05) உதவி தேடுதல் அல்லாஹ்விடமே
நூல்கள்:
இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்
إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله
நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அல்லாஹ்வைத் தவிற அவ்லியா மஹான் என்று யாரிடமும் உதவிடதேடக் கூடாது என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துவது.
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!