06) அவ்லியாக்கள் அறிய முடியுமா?

நூல்கள்: மறைவான ஞானம் இறைவனுக்கே !

இன்று தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் அவ்வியாக்களுக்கு அளவுக்கு மீறிய தகுதிகளை கொடுத்து விட்டார்கள். அல்லாஹ்வை மிஞ்சும் அளவுக்கு ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். இவ்வளவு பெரிய நம்பிக்கையுடையவர்கள் மறைவான விசயத்தை அறியும் ஆற்றலை மட்டும் கொடுக்காமலிருப்பார்களா? கொடுத்தே இருக்கிறார்கள்.

இதை வலியுறுத்தும் பல கதைகள் கூட சொல்லு. வார்கள். ஆனால் திருமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்.மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறி மாட்டார். இன்னும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலைகூட அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களிலுள்ள எந்த விதையும், எந்த பசுமையானதும், காய்ந்ததும் (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இல்லமலில்லை.   (அல்குர்ஆன்: 6:59)

அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமிவிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைவானவிசயத்தை அறிய மாட்) டார்கள். அவர்கள் எப்பொழுது எழுப்படுவார்கள் என்ப தையும் (யாரும்) அறியமாட்டார்கள் என்று (நபியே) கூறும்    (அல்குர்ஆன்: 27:65)

இந்த இரண்டு வசனங்களுமே தெளிவாகவே அல்லாஹ் வைத் தவிர எந்த நபருக்கும் மறைவான விசயத்தை அறிய முடியாது என அறிவிக்கிறது. எனவே எவ்வளவு பெரிய அவ்லியாவாக இருந்தாலும்அறியமுடியாது.