06) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-6

நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிகள்

06) அலட்சியம் செய்யப்படும்
நபிமொழி-26
அல்லாஹ்வின் திருப்தி மட்டும் நாடி …
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ
‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

(புகாரி: 56)


நபிமொழி-27
மனிதநேய மார்க்கம்
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فُكُّوا العَانِيَ، يَعْنِي: الأَسِيرَ، وَأَطْعِمُوا الجَائِعَ، وَعُودُوا المَرِيضَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி)

(புகாரி: 3046)

நபிமொழி-28

சுத்ரா (தடுப்பு)

قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ، فَلْيَدْفَعْهُ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ»

அபூசயீத் (ரலி) அவர்கள், “யாரும் குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் தடுப்பாக எதையாவது வைத்துக் கொண்டு தொழும் போது, ஒருவன் குறுக்கே கடந்து சென்றால் அவனைத் தள்ளி விடுங்கள். அவன் (விலகிக் கொள்ள) மறுத்தால்
அவனுடன் சண்டையிடுங்கள். ஏனெனில் அவன் தான் ஷைத்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆசயீத் (ரலி)

(புகாரி: 509)


நபிமொழி-29
வீடுகளில் தொழுங்கள்
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
« لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِى تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ ».

(சுன்னத்தான தொழுகைகளை தொழாமல்) உங்களுடைய வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள், சூரத்துல் பகரா ஓதப்படுகிற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டு ஓடுகிறாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1300)


நபிமொழி-30
ஏழு குடல்களில் சாப்பிடுவான்
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«المُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»

நபி (ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(புகாரி: 5393)