05) விமர்சனம் இல்லை

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

நபிகள் நாயகம் காலத்து மக்கள், முஹம்மது நபியவர்கள் சொன்ன கொள்கை பிரச்சாரத்துடன் முரண்பட்டு நின்றனர். அதன் விளைவால் எழுந்த வெறுப்பைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தினர்.

. நபிகள் நாயகம் இறைத்தூதர் அல்ல, அவர் வெறும் கவிஞரே என்று இகழ்ந்தனர்.

. அவர் புத்தி பேதலித்தவர் என்று சிலர் கூறினர்.

. அவருக்கு யாரோ சூனியம் வைத்து விட்டனர்; அதனால் தான் நமது முன்னோர்களின் கொள்கையை விட்டு விலகி நிற்கிறார் என்றனர்.

. யாரோ இவரை பின்னின்று இயக்குகின்றனர் என்று கூறினர்.

. இவர் மக்களிடையே கலகமூட்டுகிறார் என்றெல்லாம் கூறினர்.

இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் கூறிய அவர்கள் நபியின் பல திருமணத்தைப் பற்றி சிறிதும் குறை கூறவில்லை.

ஏனெனில் அவர்களது அக்கால கட்டத்தில் சாதாரண நடைமுறை என்பதாலேயாகும்.

முஹம்மத் நபியவர்கள் பல திருமணம் புரிந்தது விமர்சனத்திற்குரிய அம்சமாக இருந்திருந்தால் நபியை வீழ்த்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த நபி காலத்து எதிரிகள் இதை கையில் எடுத்திருக்க மாட்டார்களா?

அதற்காகவே பல சந்தர்ப்பங்களை எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆயிஷா அவர்களின் மீது ஒரு சஹாபியை இணைத்து பொய்யாக அவதூறு கூறினார்கள். அப்படியெல்லாம் கூறியவர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல திருமணங்களை ஏன் விமர்சிக்கவில்லை.

முஹம்மதை பாருங்கள்! பல பெண்களை திருமணம் செய்து பெண்களை அல்லவா? இழிவுபடுத்திவிட்டார் என்று கூறியிருப்பார்கள்

அப்படி எதுவும் கூறாததே அவர்களின் காலத்தில் இது சாதாரண நடைமுறை என்பதை அறியலாம்.