05) வானவர்கள் அறிய முடியுமா?

நூல்கள்: மறைவான ஞானம் இறைவனுக்கே !

இறைவனின் அருகில் இருக்கும். அச்ஷை சுமந்து கொண்டும் இறை கட்டளையை அப்படியே செயல்படுத்து வானவர்களுக்குகூட மறைவான விசயங்கள் தெரியாது என குர்ஆன் இயம்புகிறது.
(அல்லாஹ்) எல்லா (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான். பின் அவற்றை வானவர்களுக்கு முன் எடுத்துக் காட்டி நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர் எனக்கு அறிவியுங்கள் என்றான். அவர்கள் (இறைவா)நீயே தூய்மையானவன்! எங்களுக்கு கற்றுக் கொடுத்ததைத்தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு ஞானம் இல்லை; நீயே மிக அறிந்தவன். விவேகம்மிக்கோன் எனக்கூறி னார்கள். –  (அல்குர்ஆன்: 2:31),32)

வானவர்களே. நீ எங்களுக்கு கற்றுக்கொடுத்ததைத் தவிர வேறு ஒருவிசயமும் தெரியாது என்றுகூறிவிட்டார். இதிலிருந்து வானவர்களுக்கும் தெரியாத பல விசயங்கள் உள்ளன என்பதை அறியலாம். அதனால்தான் அல்லாஹ் கேட்ட அந்த பொருள்களின் பெயர்களை கூறமுடியவில்லை.